Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தினமும் சப்பாத்தி சாப்பிடலாமா? அப்படி சாப்பிடுவதால் என்னென்ன நன்மை கிடைக்கும்?
உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தியை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். ஆனால் இப்படி சப்பாத்தியை தினமும் சாப்பிடுவது நல்லது தானா?
இந்திய உணவுகளில் சப்பாத்தி முக்கியமான உணவாகும். இந்த சப்பாத்தி முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் இது அனைத்து விதமான கிரேவியுடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக சப்பாத்தி செய்வது மிகவும் சுலபம். மேலும் தற்போது நிறைய பேர் சப்பாத்தியை தங்கள் அன்றாட உணவில் சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் பெரும்பாலானோர் சாதத்திற்கு பதிலாக சப்பாத்தியை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். ஆனால் இப்படி சப்பாத்தியை தினமும் சாப்பிடுவது நல்லது தானா? என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

சப்பாத்தியில் உள்ள சத்துக்கள்
முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தியில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9, வைட்டமின் ஈ ஆகிய வைட்டமின்கள் மட்டுமின்றி, ஜிங்க், காப்பர், அயோடின், சிலிகான், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன.

சப்பாத்தி எப்படி எடையைக் குறைக்க உதவுகிறது?
சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் வளமான அளவில் நிரம்பியுள்ளது. எனவே இது உடலுக்கு வேண்டிய போதுமான ஆற்றலை வழங்குகிறது மற்றும் நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது. மேலும் சப்பாத்தி உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு மட்டுமின்றி, மனநிலையை மேம்படுத்தவும் செய்கிறது. முக்கியமாக சப்பாத்தியை எண்ணெய் எதுவும் சேர்க்காமல் சுடும் போது, அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை இழப்பிற்கு சிறந்த உணவாக விளங்குகிறது.

சருமத்திற்கு நல்லது
சப்பாத்தியில் ஜிங்க் மற்றும் பிற முக்கியமான கனிச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. எனவே தினமும் சப்பாத்தியை சாப்பிடும் போது அது சருமத்தில் மாயங்களை ஏற்படுத்தும். என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆனால் அது தான் உண்மை. எனவே உங்கள் சருமம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமானால் தினமும் சப்பாத்தியை சாப்பிடுங்கள்.

செரிமானத்திற்கு நல்லது
சப்பாத்திரியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளதால், இது இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஒரு சப்பாத்தியில் இருந்து எவ்வளவு சத்துக்கள் கிடைக்கும்?
ஒரு சிறிய அளவிலான சப்பாத்தியில் 70 கலோரிகள், 3 கிராம் புரோட்டீன், 0.4 கிராம் கொழுப்பு மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட் 15 கிராம் உள்ளது.



Click it and Unblock the Notifications