Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
பானை மாதிரி உங்க வயிறு வீங்கி இருக்கா?... அப்ப இந்த உணவுகள தினமும் காலையில சாப்பிடுங்க போதும்!
மறுநாள் காலை, ஊறவைத்த ஜீரா தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த ஸ்பெஷல் பானம் உடல் எடையை குறைக்கவும் உதவும். மேலும், பல நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.
வீக்கம் ஒரு தீவிர பிரச்சனையாக இருக்கலாம். குறிப்பாக நாள் முழுவதும் உங்களுக்கு அசெளகரியத்தையும், உடல் எடையை அதிகரிக்கவும் இவை வழிவகுக்கும். இது நிறைய அசௌகரியங்களை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் செயல்பாடுகளுக்கும் இடையூறு விளைவிக்கும். உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுத் திட்டத்துடன் உங்கள் நாளைத் தொடங்குவது மட்டுமே சரியானது. உணவு உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. நீங்கள் சாப்பிடும் உணவுகள் தான் உங்கள் ஆரோக்கியத்தில் விளைவை ஏற்படுத்தும். அது நன்மையாகினும் தீமையாகினும் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவை பொறுத்தது.

அஜீரணம், வாயு அல்லது வயிற்று உப்புசம் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளால் நீங்கள் எப்பொழுதும் சிரமப்படுபவர் என்றால், அதை நிர்வகிக்க உதவும் காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்கட்டுரையில், வீக்கம் மற்றும் வயிற்று உப்புச பிரச்சனையை தீர்க்க உதவும் உணவுகளை பற்றி காணலாம்.

வாழைப்பழக் கஞ்சி
சூடான வாழைப்பழக் கஞ்சி ஒரு கிண்ணம் உங்கள் குடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அற்புதமாகவும் இருக்கும். உங்களுக்கு தேவையானது ஓட்ஸ், பால், வாழைப்பழம், இலவங்கப்பட்டை மற்றும் தேன். டிஷ் தயாரிக்க, ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், பால் மற்றும் இலவங்கப்பட்டை வைக்கவும். மிதமான தீயில் ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். சில நிமிடங்கள் அல்லது கஞ்சி கெட்டியாகும் வரை அடிக்கடி கிளறவும். அதனுடன் மசித்த வாழைப்பழம் மற்றும் தேன் சேர்த்து மீண்டும் கிளறவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி, பரிமாறவும்.

மஞ்சள் துருவல் முட்டை
மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பிரபலமாக அறியப்படுகிறது. இது வீக்கம் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளை குறைக்கிறது. காலை உணவாக, வயிற்றில் ஏற்படும் எந்த பிரச்சனையையும் போக்க மஞ்சள் துருவல் முட்டைகளை சாப்பிடலாம். முட்டை, நீங்கள் விரும்பும் எண்ணெய், மஞ்சள் தூள் மற்றும் கீரை ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும். முட்டை மற்றும் மஞ்சளை ஒன்றாக அடித்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி உங்களுக்கு விருப்பமான சமையல் எண்ணெயில் போடவும். கீரையைச் சேர்த்து எண்ணெயில் கிளறவும். பின்னர் அடித்து வைத்திருந்த மஞ்சள் மற்றும் முட்டை கலவையைச் சேர்த்து, சரியான நிலைத்தன்மையைப் பெறும் வரை சமைக்கவும்.

பஜ்ரா சீலா
பஜ்ரா சீலாவிற்கு, பஜ்ரா மாவு, உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி இலைகள், நறுக்கிய மிளகுத்தூள், துருவிய கேரட், 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஆகியவை தேவைப்படும். உணவைத் தயாரிக்க, நீங்கள் ஒரு பாத்திரத்தில் பஜ்ரா மாவைச் சேர்த்து, அதில் உப்பு சேர்த்து, தண்ணீரில் ஊற்றி, மென்மையான பேஸ்ட் ஆகும் வரை கலக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை மற்றும் துருவிய கேரட்டை அந்த விழுதில் சேர்க்கவும். வானலில் எண்ணெயை ஊற்ற வேண்டும். ஒரு கரண்டியின் உதவியுடன், மாவை வாணலியில் பரப்பி, ஒரு வட்டத்தை உருவாக்கவும். சிறிது எண்ணெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்தால், சுவையான பஜ்ரா சீலா சாப்பிட தயார்.

பப்பாளி சாலட்
பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது பாப்பைன் எனப்படும் இயற்கையான செரிமான நொதியைக் கொண்டுள்ளது, இது வீக்கம், மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற அறிகுறிகளை நீக்குகிறது. பப்பாளி சாலட் ஒரு ஆரோக்கியமான காலை உணவுத் தேர்வாகும். உங்களுக்கு தேவையானது ஒரு நடுத்தர பச்சை பப்பாளி, கேரட், வெள்ளரி புதினா இலைகளை எடுத்துக்கொள்ளவும். டிரஸ்ஸிங்கிற்கு அரிசி வினிகர், சோயா சாஸ், மேப்பிள் சிரப், உப்பு, பூண்டு கிராம்பு, வெங்காயம், மிளகாய்த்தூள் தேவைப்படும்.

செய்முறை
முதலில் அனைத்து பொருட்களையும் கலந்து டிரஸ்ஸிங் தயார் செய்யவும். பின்னர் பப்பாளியின் வெளிப்புற தோலை உரித்து, பழத்தை மெல்லிய அடுக்குகளாக கவனமாக வெட்டவும். கேரட் மற்றும் வெள்ளரி போன்ற மற்ற சாலட் பொருட்களுடன் இதைச் சேர்த்து செய்யுங்கள். ஒரு பெரிய கிண்ணத்தில், அனைத்தையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள். டிரஸ்ஸிங்கில் ஊற்றி மீண்டும் கலக்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான பப்பாளி சாலட் ரெடி!

ஜீரா தண்ணீர்
ஜீரா தண்ணீர் குடிப்பதால் உங்கள் வீக்கத்தை பெருமளவு குறைக்கலாம். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி அரை டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை, ஊறவைத்த ஜீரா தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து குடித்தால் புத்துணர்ச்சி கிடைக்கும். இந்த ஸ்பெஷல் பானம் உடல் எடையை குறைக்கவும் உதவும். மேலும், பல நன்மைகளை உங்களுக்கு வழங்கும்.



Click it and Unblock the Notifications