Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
உடம்பு சூடு புடுச்சுகிச்சா? அப்ப இந்த பானங்களை அடிக்கடி குடிங்க.. சூடு டக்குனு குறையும்...
Summer Health Tips In Tamil: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெளியே வெயில் பாரபட்சமின்றி கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓரு முக்கியமான மற்றும் பொதுவான பிரச்சனை தான் உடல் சூடு பிடிப்பது.
உடல் சூடு என்பது உடலினுள் உள்ளே உள்ள வெப்பநிலையானது வழக்கத்தை விட அதிகமாக இருந்து, உடலினுள் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெரும்பாலும் உடல் சூடானது வெயிலில் அதிகம் சுற்றுவது, வெப்ப பண்புகளை அதிகம் கொண்ட உணவுகளை உண்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமை என்பன போன்ற காரணங்களால் ஏற்படும்.

உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள் பலரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நீரை அதிகம் அருந்த வேண்டும். இது தவிர உடல் சூட்டைக் குறைக்க உதவும் பானங்களையும், உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டும். நீங்களும் அடிக்கடி உடல் சூடு பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? உடல் சூட்டைக் குறைக்க எந்த பானங்களை குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உடல் சூட்டை வேகமாக குறைக்க உதவும் சில சுவையான இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இளநீர்
கோடைக்காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க உதவும் ஒரு அற்புதமான பானம் என்றால் அது இளநீர். வெயில் காலத்தில் தினமும் இளநீரைக் குடித்து வந்தால், போதுமான நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடலுக்கு வேண்டிய பிற சத்துக்களும் உள்ளன. ஒரு கப் இளநீரில், அதாவது சுமார் 240 மிலி இளநீரில், 60 கலோரிகளும், 12 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 8 கிராம் சர்க்கரை, 15% பொட்டாசியம் உள்ளன. முக்கியமாக இதில் 94% நீர்ச்சத்து உள்ளன.

கரும்பு ஜூஸ்
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் கரும்பு ஜூஸ் உடல் சூட்டைக் குறைக்கும். அதுவும் அந்த கரும்பு ஜூஸில் புதினா, எலுமிச்சை சாறு, ப்ளாக் சால்ட் ஆகியவற்றை கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். ஒரு சிறிய கப் கரும்பு ஜூஸில் 180 கலோரிகள், 30 கிராம் சர்க்கரை மற்றும் டயட்டரி நார்ச்சத்து அதிகளவில் உள்ளன.

வில்வ பழ சர்பத்
கோடைக்காலத்தில் வில்வ பழ சர்பத் குடித்து வந்தால், உடல் சூடு பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாது. ஏனெனில் இந்த ஜூஸ் அவ்வளவு குளிர்ச்சியானது. மேலும் இதில் பீட்டா கரோட்டின், புரோட்டீன், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 போன்றவற்றுடன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்களும் அதிகளவில் உள்ளன.

புதினா சர்பத்
உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள் புதினா சர்பத்தை சாப்பிடலாம். இது உடல் சூட்டை உடனடியாக குறைக்கும். இந்த சர்பத் செய்வதற்கு மிக்சர் ஜாரில், 1/2 கப் புதினா இலைகள், 1/2 டீஸ்பூன் மிளகுத் தூள், 1 டீஸ்பூன் கல் உப்பு, 1 டீஸ்பூன் சீரகத் தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து குடிக்க வேண்டும். புதினாவில் பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்களான சி, டி, ஈ மற்றும் ஏ போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே இந்த சர்பத்தை உடல் சூடு பிரச்சனையை சந்திப்பவர்கள் குடிப்பது மிகவும் நல்லது.

மோர்
உங்கள் வீட்டில் தயிர் உள்ளதா? அப்படியானால் அந்த தயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து, பின் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், இஞ்சி ஆகியவற்றைப் போட்டு கலந்து, அந்த மோரை தினமும் குடித்து வந்தால், அது உடல் சூட்டைக் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய பல்வேறு முக்கியமான சத்துக்களையும் வழங்கி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பார்லி தண்ணீர்
பார்லி தண்ணீர் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்குவதோடு, உடல் சூட்டைக் குறைக்கவும், உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றவும் உதவுகின்றன. எனவே உங்களுக்கு சூடு பிடித்திருப்பதை உணர்ந்தால், பார்லி நீரைக் குடியுங்கள். ஒரு டம்ளர் பார்லி நீரில் 81 கலோரிகள், 2.8 கிராம் புரோட்டீன், 16.7 கிராம் கார்போஹைட்ரைட் மற்றும் 0.9 கிராம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன.

எலுமிச்சை ஜூஸ்
அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸ் ரொம்ப பிடிக்கும். எலுமிச்சை ஜூஸ் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்களால் மற்ற பானங்களை குடிக்க முடியாவிட்டால், தினமும் எலுமிச்சை ஜூஸை தயாரித்துக் குடித்து வாருங்கள் போதும்.

தர்பூசணி ஜூஸ்
கோடைக்காலத்தில் தர்பூசணி விலை குறைவில் அதிகம் கிடைக்கும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், அதை உட்கொள்ளும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் சூடு குறையும். அதற்கு தர்பூசணியை அப்படியே சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம்

முலாம் பழ ஜூஸ்
தர்பூசணிக்கு அடுத்தப்படியாக கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த முலாம் பழ ஜூஸ் கோடையில் தெருவோர கடைகளில் அதிகம் விற்கப்படுவதை பலரும் காணலாம். ஏனெனில் இது தாகத்தைத் தணிப்பதோடு, வயிற்றை நிரப்பும், முக்கியமாக இது உடல் சூட்டைக் குறைக்கும். எனவே இந்த ஜூஸை குடிக்க தவறாதீர்கள்.



Click it and Unblock the Notifications