Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் சத்தான பொருட்களில் ஒன்று நுங்கு. நுங்கு பல நூற்றாண்டுகளாக நுகரப்படும் ஒரு சத்தான உணவாக இருக்கிறது.
கோடைகாலத்தில் அதிகம் கிடைக்கும் சத்தான பொருட்களில் ஒன்று நுங்கு. நுங்கு பல நூற்றாண்டுகளாக நுகரப்படும் ஒரு சத்தான உணவாக இருக்கிறது. இது பொதுவாக ஐஸ் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது. நுங்கு நமக்கு பிடித்த உண்வாக இருந்தாலும் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பற்றி நமக்கு போதிய தெளிவில்லை.

ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி, இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மனித உடலுக்கு மிகவும் நல்லது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் கோடைக் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை உணவு இது. வெப்பத்தைத் தணிக்க நீங்கள் உட்கொள்ள வேண்டிய சிறந்த பொருள் இது. நுங்கின் சில நம்பமுடியாத சில அற்புத நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எடைக்குறைப்பு
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அந்த கிலோவை குறைப்பதற்கான சிறந்த வழி நுங்கு சாப்பிடுவது. இதில் நிறைய தண்ணீர் உள்ளது, இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது.

சின்னம்மை
ஐஸ் ஆப்பிள் அல்லது நுங்கில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. குறிப்பாக கோடைகாலத்தில் அதிகமாக ஏற்படும் சின்னம்மை நோய்க்கு இது சிறந்த நிவாரணமாக இருக்கும். சின்னம்மை உள்ளவர்கள் இந்த பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உதவியாக இருக்கும்
கர்ப்பிணிப் பெண்கள் ஐஸ் ஆப்பிளை சாப்பிடுவதற்கு ஒரே காரணம், அது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளுக்கு இது உதவுகிறது.

வயிற்றுக் கோளாறுகள்
நுங்கின் மிகச்சிறந்த ஆரோக்கிய நன்மை என்னவென்றால், இது அனைத்து வயிற்று நோய்களுக்கும் சிறந்த இயற்கையான மருந்தாக செயல்படுகிறது.

சோர்வு
கோடையில், மக்கள் பொதுவாக வியர்வை அதிகம் வெளியேறுவதால் அதிக சோர்வை உணர்கிறார்கள். சோர்வை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி நுங்கு அதிகம் சாப்பிடுவதுதான்.

செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது
அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க சிறந்த வழி கோடை காலத்தில் நுங்கு அல்லது ஐஸ் ஆப்பிளை அதிகம் சாப்பிடுவதுதான். இந்த பழம் பெரும்பாலும் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த மூதாதையர் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

கல்லீரல் பிரச்சினைகள்
ஐஸ் ஆப்பிள் அல்லது நுங்குவின் சிறந்த ஆரோக்கிய நன்மை என்னவென்றால், பழத்தில் உள்ள அதிக அளவு பொட்டாசியத்துடன் நச்சுகளை வெளியேற்றுவதால், கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து மெதுவாக குணமடைகிறது.

மார்பக புற்றுநோய்
கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்ஸ் அந்தோசயனின் நுங்கில் அதிகம் உள்ளன. இது ஐஸ் ஆப்பிள் அல்லது நுங்கின் சிறந்த ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாகும்.



Click it and Unblock the Notifications