Latest Updates
-
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா?
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க இந்த 8 உணவுகளில் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்!
உடலில் உள்ள பல முக்கிய செயல்பாடுகளை செய்வதே சிறுநீரகம் தான். இந்த உறுப்பே மிகவும் பலவீனமாக இருந்தால் அவ்வளவு தான். மற்ற உறுப்புகளை காட்டிலும் சிறுநீரகம் மிகவும் முக்கியமான உறுப்பாகும். இரத்தத்தை சுத்தம் செய்வது முதல் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவது வரை சிறுநீரகம் தான் செய்கிறது. இது பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் ஒன்றன் பின் ஒன்றனாக பாதிக்கப்படும்.

குறிப்பாக சிறுநீரகம் நச்சு தன்மை அடைந்து, அதன் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, எந்தவித இயக்கத்தையும் சிறுநீரகம் செய்யாமல் இருக்கும் நிலையே நமது உயிர் பிரிய போகிறது என்பதை உணர்த்துகிறது. சிறுநீரக நோய்கள் உருவாகுவதற்கு சில காரணிகளும் உள்ளன.
குறிப்பாக சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், புகை பழக்கம், மரபு ரீதியான பிரச்சினைகள் ஆகியவை இருந்தால் அவற்றுடனே இந்த சிறுநீரக பிரச்சினையும் உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். இனி இந்த சிறுநீரகத்தை நோய்கள் இல்லாமல் பாதுகாக்க இந்த 8 உணவுகளில் ஏதேனும் ஒன்றையாவது சாப்பிட்டு வாருங்கள்.

சிறுநீரக வேலைகள்
நாம் நினைப்பதை விடவும் நமது கிட்னி பல்வேறு விதமான வேலைகளை செய்து வருகிறது. குறிப்பாக உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், புரதச்சத்தை சுத்திகரித்தல், அளவுக்கு அதிகமாக உள்ள நீரை வெளியேற்றுதல்,
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய வழி வகுத்தல் போன்ற பல வேலைகளை சிறுநீரகம் தான் செய்து வருகிறது. இப்படிப்பட்ட கிட்னியை நாம் நிச்சயம் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

வெங்காயம்
குவாரஸிட்டின் (quercetin) என்கிற முக்கிய மூல பொருள் வெங்காயத்தில் இருப்பதால் சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
அத்துடன் இதில் பொட்டாசியம் மற்றும் க்ரோமியம் உள்ளதால் புரதசத்து, கொழுப்பு, கார்ப்ஸ் ஆகியவற்றை சீரான அளவில் வைக்க உதவும்.

சிவப்பு குடைமிளகாய்
கிட்னியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்க மிக சிறந்த உணவாக இருப்பது சிவப்பு குடை மிளகாய். இதில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் எ, வைட்டமின் பி6 நார்சத்து போன்றவை நிறைந்துள்ளது.
ஆகையால் சிறுநீரக்த்தில் எந்தவித பாதிப்பையும் இது உண்டாக்காது. அத்துடன் குறிப்பிட்ட சில புற்றுநோய்களையும் இது தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

பூண்டு
பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்ற இந்த பூண்டை சிறுநீரக பாதுகாப்பிற்கும் பயன்படுத்தலாம். கிட்னியில் செயல்பாட்டை சீராக வைத்து கொள்ள பூண்டு பயன்படுகிறது.
அத்துடன் உடலில் ஏற்படுகின்ற வீக்கத்தை குறைத்து, நோய் தொற்றுக்களை எதிர்க்கிறது. மேலும், கொலஸ்ட்ராலையும் குறைக்கும் தன்மை கொண்டது.

காலிபிளவர்
கிட்னியின் சிறந்த நண்பனாக கூறப்படும் உணவுகளில் இதுவும் ஒன்று. வைட்டமின் சி இதில் எண்ணற்ற வகையில் உள்ளதால் சிறுநீரகத்தில் சேர கூடிய நச்சுக்களை உடனே வெளியேற்ற உதவும். அத்துடன் கல்லீரலில் உள்ள அழுக்குகளையும் இது வெளியேற்ற உதவும்.

ஆலிவ் எண்ணெய்
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் கூட நமது கிட்னிக்கு பாதிப்பை உண்டாக்க கூடும். எனவே, சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யில் கவனம் நிச்சயம் தேவை.
மற்ற எண்ணெய் வகைகளை காட்டிலும் ஆலிவ் எண்ணெய் மிக சிறந்ததாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்களே கூறுகின்றனர்.

முளைக்கீரை
வாரத்திற்கு 2 முறையாவது முளைக்கீரையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது சிறுநீரகத்தில் உண்டாக கூடிய நோய்களை விரட்டி, மிக ஆரோக்கியமாக பாதுகாக்கிறது.

முட்டைகோஸ்
சிறுநீரகத்தில் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை முற்றிலுமாக தடுக்கும் ஆற்றல் இந்த உணவிற்கு உள்ளது. இதற்கு காரணம் இதிலுள்ள பைட்டோகெமிக்கல்ஸ் தான்.
மேலும், மிகவும் மலிவான விலையில் எளிதாக கிடைக்கும் இந்த உணவை அவ்வப்போது எடுத்து கொண்டால் சிறுநீரகம் பாதுக்காப்பாக இருக்கும்.

அஸ்பாரகஸ்
மூலிகை தன்மை இந்த அஸ்பாரகஸில் அதிகம் காணப்படுகிறது. அத்துடன் இதில் நார்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, போன்ற தாதுக்களும் நிறைந்து உள்ளது.
இவை சிறுநீரகத்தில் சேர கூடிய அழுக்குகளை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.



Click it and Unblock the Notifications