Latest Updates
-
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...
விட்டமின் கே எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது., இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. வைட்டமின் உடலுக்கு எவ்வளவு முக்கியம். அதில் வைட்டமின் கே எந்தெந்த உணவுகளில் அ
நமது உடல் நலமுடன் இருக்க போதுமான ஊட்டச்சத்துகளும் அவசியம். அதில் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு அத்தியாவசியமான ஒன்று என்கிறார்கள் மருத்துவர்கள்.

விட்டமின் கே எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது, ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது., இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. வைட்டமின் உடலுக்கு எவ்வளவு முக்கியம். அதில் வைட்டமின் கே எந்தெந்த உணவுகளில் அதிகமாக இருக்கிறது என்பது பற்றியது தான் இந்த கட்டுரை.

விட்டமின் கே என்றால் என்ன?
விட்டமின் கே நீரில் கரையைக் கூடிய ஊட்டச்சத்தாகும். இது இரண்டு வகைகளில் காணப்படுகிறது. ஒன்று கே1மற்றொன்று கே2.நமது குடலில் உள்ள பாக்டீரியா கே1 விட்டமீனை கே2 ஆக மாற்றம் செய்கிறது. இதை நமது உடல் நிறைய வகைகளில் பயன்படுத்தி கொள்கிறது. விட்டமின் கே1 கீரைகள், காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் காணப்படுகிறது.

பயன்கள்
எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது
ஆஸ்ட்டியோபோரஸிலிருந்து பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது.

விட்டமின் கே அடங்கிய உணவுகள்
முளைக்கட்டிய பயிறு வகைகள், கொடி முந்திரி, உலர்ந்த துளசி, அவகேடா, கீரைகள், செங்கீரை(சிகப்பு தண்டுக்கீரை) போன்றவற்றில் காணப்படுகிறது.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் கீரைகளில் அதிகளவு விட்டமின் கே காணப்படுகிறது. பாதி கப் கீரையில் 400 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே காணப்படுகிறது. இது ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவை விட நான்கு மடங்கு அதிகம்.

கொடி முந்திரி
தமிழகத்தின் சில மாவட்டங்களில் கருப்பு நிற திராட்சையைத் தான் கொடி முந்திரி என்று அழைப்பார்கள். 1 கப் கொடி முந்திரியில் 104 மைக்ரோ கிராம் அளவிற்கு விட்டமின் கே உள்ளது. இது உங்கள் தினசரி தேவையில் 100% பூர்த்தி செய்கிறது.

உலர்ந்த துளசி
உலர்ந்த துளசி யில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் மினரல்கள் மட்டும் இல்லை. 45% அளவு விட்டமின் கே உள்ளது. ஒரு டீ ஸ்பூன் மட்டும் சாப்பிட்டால் போதும் தினசரி அளவு சரியாகி விடும்.

கீரைகள்
கீரைகளில் அதிகளவு விட்டமின் கே உள்ளது. ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட 1100% அளவு அதிகமாக காணப்படுகிறது.

அவகேடா
100 கிராம் அவகேடாவில் 21 மைக்ரோகிராம் விட்டமின் கே உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையான அளவில் 20% அளவை பூர்த்தி செய்கிறது.

வெள்ளரிக்காய்
ஒரு மீடியம் வடிவ வெள்ளரிக்காயில் 60% அளவு ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் கே அளவு உள்ளது.

முளைக்கட்டிய பயிறு வகைகள்
முளைக்கட்டிய பயிறு வகைகள் 240% அளவு விட்டமின் கே அளவை பூர்த்தி செய்கிறது.

சிகப்பு தண்டுக்கீரை
சிகப்பு தண்டுக்கீரையில் 36 கலோரிகள் மற்றும் 600% விட்டமின் கே சத்து உள்ளது. இது ஒரு நாளைக்கு தேவையானதை விட அதிகம் தான்.

எடுத்துக் கொள்ளும் அளவு
ஒரு நாளைக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் விட்டமின் கேயை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இதன் அளவு வயது, பாலினம் இவற்றை பொருத்து வேறுபடுகிறது. 75 மற்றும் 120 மைக்ரோகிராம் அளவு ஒரு நாளைக்கு போதுமானது.

குறிப்பு
விட்டமின் கே சத்தை நீங்கள் மாத்திரை வடிவில் எடுத்து வந்தால் அலர்ஜிக் விளைவு வர வாய்ப்புள்ளது. எனவே உணவு வழியாக இந்த சத்தை பெறுவது நல்லது. இதை மாத்திரை வடிவில் எடுப்பதற்கு முன், மருத்துவரை ஆலோசித்து கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications