Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சிகரெட் பிடிப்பதை கைவிடுவதற்கு நீங்கள் சாப்பிட வேண்டிய மூன்று பழங்கள்...
சில உணவுகள் மூலம் எப்படி நுரையீரலை பாதுகாக்க முடியும் என்பது பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடிக்கும் பழக்கம் என்பது மதுப்பழக்கத்தை விடவும் கொடிய பழக்கம். உங்கள் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைத்துவிடும் என்பது நன்கு தெரிந்தும் கூட, அந்த கொடிய பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற எந்த பழக்கமாக இருந்தாலும் நம்முடைய மனம் முடிவு செய்துவிட்டால் போதும். அது நம்முடைய மூளையின் வழியாக நமக்குக் கட்டளையிடும்.

நாம் அந்த தவறைச் செய்யும் போதெல்லாம் நம்முடைய மூளை இதை செய்யாதே என நமக்குக் கட்டளையிடும். ஆனால் இந்த புகைப்பழக்கம் மட்டும் தான் நம்முடைய மூளைக்குக் கட்டுப்படுவதில்லை. அதற்கு பதிலாக இதுதான் மூளையைக் கட்டுப்படுத்துகிறது என்று கூட சொல்லலாம். அதனால் தான்

புகைப்பிடித்தல்
அப்போ இந்த பழக்கத்தை நிறுத்தவே முடியாதா என்று நிறைய பேர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஒரு பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வும் கட்டாயம் இருக்குத்தானே செய்யும். ஆனால் மருந்துகளெல்லாம் இந்த பழக்கத்தை ஒன்று செய்ய முடியாது. நீங்கள் சாப்பிடுகின்ற சில உணவுகள் சொல்வதை உங்களுடைய புகைப்பழக்கத்தை வேகமாக மாற்றிவிடலாம். அது பற்றிய ஆய்வுகளும் உண்மையும் பற்றி இங்கே காண்போம்.

ஆய்வுகள்
ஐரோப்பியாவில் உள்ள மருத்துவ ஆய்வு இதழுக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 680 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் புகைப்படிப்பவர்கள் மட்டுமல்லாது, புகைப்பழக்கம் இல்லாதவர்கள், புகைப்பழக்கம் இருந்து பாதியில் நிறுத்தியவர்கள் என பலவகையான மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.

நுரையீரல் செயல்பாடுகள்
அவர்களுடைய நுரையீரல் செயல்பாடுகள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டது. புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாமல் கண்டறியப்பட்டது.
ஆய்வின் முடிவில் மருத்துவர்கள் பரிந்துரைத்தது என்னவென்றால், எந்த மருந்துகளும் தேவையில்லை. மூன்று காய்கறிகள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். எந்த மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத புகைப்பழத்தை இந்த மூன்று காய்கறிகளும் நிரந்தரமாக மாற்றும் என்று கூறப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.

தக்காளி
சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும். இதில் மிக முக்கியமான ஒன்று தான் தக்காளி. தக்காளியில் மிக அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. அதோடு லைகோபைன் அதிகமாக இருக்கிறது. நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.

வாழைப்பழம்
வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும்.

ஆப்பிள்
ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கும் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும்.
இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்.

பயன்கள்
தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்ட பின், கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்.
இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் நுரையீரலில் தேங்கியிருக்கின்ற நச்சுக்களை வெளியேற்ற ஆரம்பிக்கும்.
நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது.
நம் முன் தட்டில் என்ன வகையான உணவு வைத்திருக்கிறோம். என்ன சாப்பிடுகிறோம் என்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
