For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  நீங்களும் என்ன மாதிரியே நூடுல்ஸ் பைத்தியமா?.... அப்போ இது நமக்குதான்... வந்து படிங்க...

  |

  இந்த அவசர உலகில் காலையில் எழுந்து விதவிதமாக சமைத்து விட்டு ஆபிஸூக்கு செல்வது என்பது முடியாத காரியம்.இதனால் உடனே நாம் நாடுவது இந்த துரித உணவுகளைத் தான்.

  is instant noodles really bad for you

  இப்படி சில நிமிடங்களிலேயே தயார் செய்யும் நூடுல்ஸ் போன்றவை நமது உடலுக்கு நல்லதா? கெட்டதா என்று என்றாவது யோசித்து இருக்கோமா? சரி வாங்க அதைப் பற்றிய ஒரு அலசல் தான் இந்த கட்டுரையின் ஸ்பெஷலே.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  சுவை

  சுவை

  கண்டிப்பாக இந்த துரித நூடுல்ஸின் சுவை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும். அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.அதனால் தான் காலை உணவில் இது முக்கியம் பெறுகிறது.

  பேச்சுலர்ஸ் உணவு

  பேச்சுலர்ஸ் உணவு

  வேலை பார்க்கும் பேச்சுலர்ஸ், தனியாக வசிக்கும் இளைஞர்கள், இரவில் பணிபுரிபவர்கள் இப்படி எல்லாரும் உடனே விரும்பி சமைக்கும் உணவாகவும் இந்த நூடுல்ஸ் உள்ளது.

  பசி

  பசி

  உடனடியாக உங்கள் பசியை தீர்க்க இந்த நூடுல்ஸ் பயன்பட்டாலும் இதனால் ஏராளமான உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது. அப்படி ஏற்படும் சில உடல் நல பாதிப்புகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

  வறுக்கப்பட்டது

  வறுக்கப்பட்டது

  இந்த நூடுல்ஸ் பேக்குகளில் ஊட்டச்சத்து பட்டியலை படித்து பார்த்தால் தெரியும் அதில் எடிபிள் ஆயில் (சமையல் எண்ணெய்) உயர்ந்ததாக இருக்கும். இது அந்த நூடுல்ஸ் ஆழமாக வறுக்கப்பட்டு இருப்பதை குறிக்கிறது. எந்த ஒரு பொருளும் அதிகமாக வறுக்கப்பட்டால் அதன் கொலஸ்ட்ரால் அளவு மிகவும் அதிகமாகும். இது நமது உடலுக்கு நல்லது கிடையாது. இதனால் இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

  கோதுமை மாவு

  கோதுமை மாவு

  பெரும்பாலான நூடுல்ஸ் மைதா போன்ற பொருளால் மட்டும் உருவாக்காமல் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவையும் பயன்படுத்துகின்றனர். இதன் சுவை அமோகமாக இருந்தாலும் இதில் சத்து என்று சொல்லுவதற்கு எதுவும் கிடையாது. மேலும் செயற்கை சுவையூட்டிகள், செயற்கை பதமூட்டுகள் போன்றவைகளும் சேர்க்கப்படுகின்றன.

  கட்டுப்பாடு

  கட்டுப்பாடு

  உங்களுக்கு தெரியும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு புகழ்பெற்ற நூடுல்ஸ் பிராண்ட் மீது உலகளாவிய தடை விதிக்கப்பட்டது. நாம் என்ன செய்தோம் மிகவும் கோபமடைந்தோம். பிறகு தடை நீக்கப்பட்ட உடன் மறுபடியும் சூப்பர் மார்க்கெட்டுக்கு ஓடிச் சென்று அந்த பிராண்ட்களை மறுபடியும் வாங்க முற்பட்டு விட்டோம். அவை நமது உடலுக்கு கேடு விளைவிக்கும் எனத் தெரிந்து இருந்தும் ஏன் நமக்குள் கட்டுப்பாடு இல்லை. ஏனெனில் அவற்றின் சுவைக்கும் செளகரியத்திற்கும் இன்றளவும் நாம் அடிமையாகி உள்ளோம். உங்களுக்கு தெரியுமா நமது உடலுக்கு மிகவும் நஞ்சாக கருதப்படும் காரீயம் அதில் உள்ளது. இதனால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும். மேலும் கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் மைய நரம்பு மண்டலத்தையே பாதிக்கும் கொடிய பொருள் இது. நமது குழந்தைகளின் உயிரோடும் நம் உயிரோடும் விளையாடும் ஒரு நச்சுப் பொருளை நாடிச் செல்கிறோம். தினம் தினமும் வேலை பார்த்து சம்பாரித்து சாப்பிட்டு உயிரோடு வாழ்வதற்காகவே போராடும் நாம் நம்மை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக நமது உயிரை குடிக்கும் நச்சை உண்டு வாழ்கிறோம். நச்சு உணவுகளை ஒரு போதும் சாப்பிட மாட்டோம் என்ற ஒரு கட்டுப்பாடு நமக்குள் பிறக்காத வரை நம் உயிரை நாமே கொலை செய்யத் தான் செய்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

  சோடியம்

  சோடியம்

  இதில் உள்ள சோடியம் அளவை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுவீர்கள். ஆமாங்க நாம் ஒரு நாளைக்கு உண்ணும் உப்பில் 46% அளவு அதிகமாக சோடியம் உப்பு இதில் சேர்க்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்தல், இதயம் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு ஏன் வயிற்றில் புற்று நோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

  அமிலத்தன்மை

  அமிலத்தன்மை

  சிட்ரிக் அமிலம் நமது உடலுக்கு நல்லது போன்று தோன்றும். ஆனால் இது பல ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் செயல்பாட்டை மேம்படுத்துமே தவிர இது ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் கிடையாது. இது எதிர்மறையாக நமது உடலில் அமிலத்தன்மையை அதிகரித்து விடும். நீங்கள் தினமும் நூடுல்ஸ் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சினையை நீங்கள் சந்தித்த நேரிடும்.

  எனவே இந்த துரித நூடுல்ஸ் உணவுகள் உங்களுக்கு சமைக்க எளிதாக இருக்கலாம். ஆனால் உங்கள் இளம் வயதிலேயே நீங்கள் உங்கள் உயிருடன் விளையாடிகிறீர்கள் என்பதே உண்மை. கேடு விளைவிக்கும் பாதிப்புகள் மட்டுமே இதில் உள்ளன. இது போன்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை எடுத்து சந்தோஷமாக வாழ முற்படுங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: health
  English summary

  Is Instant Noodles Really Bad For You

  One common food item that is found in most of the kitchens is the instant noodles. Though it is very tasty, we all know that it is harmful for our health. But why? The edible oil in it contains lead, which causes damage, particularly to pregnant women and infants, and it is also harmful for the central nervous system.
  Story first published: Monday, May 28, 2018, 18:17 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more