Latest Updates
-
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க...
சர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் உடனே நிறுத்திவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா?
சர்க்கரை சாப்பிடுவதால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் சர்க்கரையை நிறுத்துவதால் ஏற்படும் நன்மை பற்றியும் இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதஜ, நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.

சர்க்கரை என்பது ஏன் நம் எல்லோராலும் தவிர்க்க முடியவில்லை என்றால், அது அறுசுவைகளில் முதல் சுவையான இனிப்புச் சுவையில்இருபு்பதனால் தான். இனிப்பாக இருக்கும் எந்த உணவும் பார்த்ததுதம் யாராலும் சாப்பிடாமல் இருக்க முடியாது. தவிர்த்துவிட்டு ஓரமாக ஒதுங்க மனமே வராது.

பகீர் ஆய்வு முடிவு
நாம் டீயில் மட்டும் தானே அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு குடிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் ஒரு நாளில் பல்வேறு வடிவங்களில் சர்க்கரை சேர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஒரு அதிர்ச்சியான ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நாம் நாளொன்றுக்கு கிட்டதட்ட 20 ஸ்பூன் சர்க்கரைக்கும் மேலாக சாப்பிடுகிறோமாம்.

கட்டுப்பாடு
சர்க்கரை உடலுக்கு முழுக்க முழுக்க கேடு எஎன்று தெரிந்தும் ஒரு சிலர் மட்டுமே நாவை அடக்கிக் கொண்டு, சர்க்கரை சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அதுவும் படிப்படியாகத் தான் முடியும். உடனடியாக சர்க்கரையை நிறுத்தி விட்டு வாழ்பவர்கள் மிக மிக சொற்பம். ஆம். சர்க்கரை என்று நாம் சொல்வது ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றையும் சேர்த்து தான். நேரடியாக சாப்பிடும் சர்க்கரை மட்டுமல்ல, மறைமுகமாக நாம் சாப்பிடும் சர்க்கரையில் தான் அதிக கெடுதலே இருக்கிறது.
ஒருவேளை நாம் சர்க்கரை சார்ந்த எந்த பொருளையும் கையால் தொடுவதில்லை என்று சூளுரைத்து முற்றிலும் நிறுத்திவிட்டால் நம்முடைய உடம்புக்குள் என்ன நடக்கும்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி நிறுத்தினால் நம்முடைய உடலில் ஏராளமான மாற்றங்கள் உண்டாகும். அவை பற்றி இங்கே பார்ப்போம்.

முதல் நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய முதல் நாளில் இருந்தே உங்களால் உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நன்கு உணர முடியும். சாதாரண விஷயங்களுக்கெல்லாம் கோவப்படுவது போன்ற திடீர் மன நிலை மாற்றங்கள் (mood swing) ஏற்படுவது குறையும். உடலின் செரிமான சக்தி அதிகரிக்கும்.

மூன்றாவது நாள்
உடலின் சக்தி இயல்பாகவே முன் எப்போதையும் விட அதிகரித்திருப்பதை உங்களால் நன்றாக உணர முடியும். எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். உடலின் பலமும் பல மடங்கு அதிகரித்து காணப்படும்.

ஏழாம் நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஏழு நாட்களில் இரவில் படுத்தவுடன் நல்ல தூக்கம் உண்டாகும். நடு ராத்திரியில் இடையில் கண் விழிப்பது போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது. காலையில் எழுந்திருக்கும் பொழுது, எந்தவிதமான மன சோர்வும் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

பத்தாவது நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய பத்தாவது நாளிலேயே உடல் எடை குறைப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆம். ஒன்று முதல் இரண்டு கிலோ வரையிலும் எடை குறைந்திருப்பதை உணர்வீர்கள்.

முப்பதாம் நாள்
முப்பதாவது நாள் உங்களுடைய முகர்தல் உணர்ச்சி மற்றும் சுவை உணர்ச்சி அதிகரித்துக் காணப்படும். சரியாக ருசி பார்ப்பது, மற்றும் நறுமணத்தை வைத்தே பொருள் என்னவென்று கண்டுபிடிக்கும் அளவுக்கு மாற்றங்களை உணர்வீர்கள்.

முப்பத்தைந்தாம் நாள்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு மாதத்துக்குள் பல நல்ல மாற்றங்களை அடைந்திடுப்பீர்கள். அடுத்ததாக, முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள், கரும்புள்ளிகள் அத்தனையும் மறைந்து முகம் பொலிவாகக் காணப்படும். உங்களுடைய அழகு மெருகேறியிருப்பதை உங்களாலேயே நன்கு உணர முடியும்.

ஒரு வருடம்
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்திய ஒரு வருடத்தில் உங்கள் உடலுக்குள் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி விடும். உடல் அழகான தோற்றத்தைப் பெற்றிருக்கும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்திருக்கும். மூளை சுறுசுறுப்படைந்திருக்கும். எப்போதும் துடிப்புடன் காணப்படுவீர்கள்.

கடினம் தான்
ஆரம்பத்தில் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும். அதிலும் இனிப்பு சுவையே இல்லாத ஒரு வாழ்க்கைக்குள் நுழைலவது அவ்வளவு எளிதானதல்ல. ஆரம்ப கட்டத்தில் வெறும் 25 கிராமுக்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள். படிப்படியாக குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.



Click it and Unblock the Notifications











