Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
சோளம் சாப்பிடுவதால் இப்படிபட்ட பாதிப்புகள் கூட வருமா...? திடுக்கிடும் ஆராய்ச்சி...!
நம் அனைவருக்கும் கொறிக்க கூடிய உணவுகள் என்றாலே மிகவும் பிடிக்கும். குறிப்பாக பாப் கார்ன், சிப்ஸ், மிக்ஸர் போன்றவற்றை நாம் அதிகம் விரும்பி சாப்பிடுவோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் பிடித்தமான பழக்கமாகும். நாம் சாப்பிட கூடிய ஒவ்வொரு உணவின் நன்மை மற்றும் தீமைகளை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் முத்துக்கு முத்தான சோளமும் அடங்கும். சோளத்தை கொண்டு பல வகையான உணவு பொருட்கள் தயாரிக்கின்றனர். ஆனால், இதில் கூட இவ்வளவு பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவை என்ன என்பதை இனி அறிவோம்.

மஞ்ச காட்டு மைனா..!
சோளத்தை பல கவிஞர்களும் பெரிதும் பாராட்டுவார்கள். இவை பார்ப்பதற்கு மஞ்சள் நிறத்தில் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாலே அனைவருக்கும் சோளம் என்றாலே மிகவும் பிடிக்கும். இதில் நிறைய நலன்கள் உள்ளது தான், என்றாலும் இதில் தீமைகளும் இருக்கின்றன.

செழிப்பு கொண்ட சோளம்...!
சோளத்தில் பல வித ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் எ, கால்சியம், புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை இதில் அதிகம் உள்ளன. இவ்வளவு தாதுக்களும், சத்துக்களும் இருந்தாலும் இதனை சாப்பிடுவதால் உண்மையில் சில பாதிப்புகளும் நமக்கு ஏற்படலாம்.

சர்க்கரை அளவு உயருமா..?
நீங்கள் அதிகமாக சோளத்தை விரும்பி சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க கூடும். ஏனெனில், இவற்றில் கார்போஹைட்ரெட் அளவு அதிகமாக உள்ளதாம். எனவே, நீரிழிவு நோயை கூட இவை ஏற்படுத்த கூடும். மேலும், சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணாமல் இருப்பது நல்லது.

உடல் எடை கூடுமா..?
உடல் பருமன் கூடுவதற்கு இந்த சோளமும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சோளத்தை சாப்பிடுவதால் அவை பல வித பாதிப்புகளை உங்களின் உடலில் ஏற்படுத்த கூடும். முக்கியமாக இதில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரெட் உடல் எடையை கூட செய்து விடும்.

வாய்வு தொல்லை
பலருக்கு இன்று இருக்க கூடிய பிரச்சினைகளில் இந்த வாய்வு தொல்லையும் ஒன்று. நீங்கள் சோளத்தை சாப்பிடுவதால் இதில் உள்ள ஸ்டார்ச் உங்களுக்கு வாய்வு பிரச்சினையை தரும். மேலும், பசியின்மையும் ஏற்படுத்தும். எனவே, சோளத்தை அதிகமாக உண்ணாதீர்கள்.

செரிமான கோளாறுகள்
உங்களுக்கு பல வித கோளாறுகள் இருந்தாலும் அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது இந்த செரிமான பிரச்சினை தான். தேவையற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விட்டு, பிறகு ஜீரணம் ஆகவில்லை என கஷ்டப்படுவதற்கு இந்த சோளமும் ஒரு காரணம் தான்.

வாந்தி, அரிப்பு
முத்துக்கு முத்தாக மஞ்சள் நிறத்தில் மிகவும் ருசியாக உள்ளது என்று நீங்கள் சோளத்தை அதிகமாக சாப்பிட்டு விட்டால் பல வித ஒவ்வாமைகள் ஏற்பட கூடும். உங்களின் உடலில் சொறிகள், அரிப்புகள் போன்றவற்றையும் இது ஏற்படுத்த கூடும் என உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குடல் எரிச்சல்
சோளம் சாப்பிடும் பலருக்கு குடல் எரிச்சல் உண்டாக கூடும். சுவையாக இருக்கிறதே என்பதற்காக நாம் அளவுக்கு அதிகமாக சோளம் சாப்பிட்டால் அவ்வளவுதான். குறிப்பாக இவை வயிற்று போக்கை உங்களுக்கு ஏற்படுத்தி விடும். சில சமயம் குடலில் பாதிப்புகள் கூட வரலாம்.

மயக்க நிலை
ஒரு சிலருக்கு அதிகமான அளவில் சோளத்தை சாப்பிட்டால் மயக்கமாக இருக்கும். அல்லது மிகவும் சோர்வாக இருக்கும். இதற்கு காரணம் சோளத்தில் உள்ள அதிக படியான ஸ்டார்ச் தான். எனவே, சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.

பல் சொத்தை
சோளம் சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு பற்கள் சொத்தையாக கூட ஆகலாம். ஏனெனில் இதில் உள்ள சர்க்கரை உங்களின் பற்களை பாதித்து விடும். எனவே, முடிந்த வரை அதிக அளவில் சோளத்தை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
எனவே, அளவுடன் சாப்பிட்டு வளமாக வாழுங்கள் நண்பர்களே..! மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications