Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
ஏலக்காய் கொண்டு ஆண்மை அதிகரிக்க செய்வது எப்படி?
சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை தேர்வு செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இது ஏற்படுவதற்கான முக்கிய காரணம், உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பது. இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஊட்டச்சத்து குறைவான உணவுகள், சரியான உடல் வேலையின்மை, சோம்பேறித்தனம், உட்கார்ந்தே வேலை செய்வது என பலவன இரத்த ஓட்டம் சீர்கெட காரணமாக இருக்கிறது. சரியான உடற்பயிற்சி மட்டுமின்றி, நீங்கள் சில சரியான உணவுகளை தேர்வு செய்தால் இந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண முடியும்.
இதற்கு ஏலக்காய் எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது என இங்கு காணலாம்...

ஏலக்காய்!
பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகள் என சிலவன உள்ளன. அதில் அத்திப்பழம், மாதுளை போன்றவற்றுடன் ஏலக்காய் முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இருக்கும் ஒரு மூலப்பொருள் தான் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.

சினியோல்!
ஏலக்காயில் இருக்கும் சினியோல் எனும் மூலப்பொருள் இரத்த ஓட்டம் அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்குகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது.

சத்துக்கள்!
ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, மற்றும் சி என நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

பயன்பாடு!
ஆண்மை அதிகரிக்க ஏலக்காய் எப்படி பயன்படுத்தலாம்? ஏலக்காய் எப்போதும் சிறிதளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகளவில் அளவில் உணவில் சேர்ப்பது, அளவிற்கு மீறினால் அமுதும் நஞ்சு என்பது போல ஆகிவிடும். இதை நீங்கள் டீ அல்லது தேன், சுடுநீரில் கலந்து உட்கொண்டு வரலாம்.

நரம்பு தளர்ச்சி!
நீங்கள் தினமும் ஏலக்காயை டீயில் அல்லது தேனில் சேர்த்து குடித்து வந்தால், ஏலக்காயில் இருக்கும் நற்குணங்களால் நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். தினமும் காலை, மாலை இருவேளை குடித்து வர நீங்கள் நல்ல பலன் பெறலாம்.



Click it and Unblock the Notifications