Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க!
இன்றைய வேலைப்பளு நிறைந்த உலகில் பெரும்பாலான நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஏன், சில சமயங்களில் பள்ளி, கல்லூரிகளில் தரப்படும் அழுத்தத்தால் இப்போது குழந்தைகள் மத்தியில் கூட இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், உட்கார்ந்தே செய்யும் வேலை முறை, இடைவேளையில் உண்ணும் துரித உணவுகள் போன்றவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணியாக விளங்குகின்றன. இது காலப்போக்கில் உடல் பருமன் அதிகரிக்க முக்கிய காரணியாக திகழ்கிறது.
இந்த மூன்றுக்கும் தீர்வளிக்கும் ஜூஸ் தான் இந்த முந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மூத்தி...

தேவையான பொருட்கள்:
1) வாழைப்பழம் - 1
2) முந்திரி - 60 கிராம்
3) ப்ளூபெர்ரி - 120 கிராம்
4) பால் - 180 மில்லி லிட்டர்

வைட்டமின்கள்:
முந்திரி, வாழைப்பழம், பால் மற்றும் ப்ளூபெர்ரி ஸ்மூத்தீயின் மூலம் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்.,
வைட்டமின் A, B, B12, B2, B9, C, E மற்றும் K

செய்முறை:
1) முந்திரியை இதமான நீரில் ஒருமணிநேரம் ஊறவைக்கவும்.
2) வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
3) வாழைப்பழம் மற்றும் ப்ளூபெர்ரி குளுமையாக (ஃப்ரிட்ஜில்) இருந்தால் அவை, சற்று இதமாக ஆகும் வரை பத்து நிமிடம் வெளியே வைக்கவும்.

செய்முறை:
4) வாழைப்பழம், ப்ளூபெர்ரி மற்றும் முந்திரியை கொஞ்சம், கொஞ்சமாக போட்டு அரைக்கவும்.
5) பிறகு கடைசியில் பாலை சேர்த்து 20 நொடிகள் நன்கு கலக்குங்கள்.

நன்மைகள்:
1) இந்த ஸ்மூத்தி சிறுநீர் அழற்சி உண்டாகாமல் தடுக்க உதவுகிறது.
2) அன்றாடம் இந்த ஸ்மூத்தி யை குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
3) மேலும், இந்த ஸ்மூத்தியின் பயன் மூலமாக உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

நன்மைகள்:
4) இது கட்டிகள் உண்டாகாமல் இருக்கவும், ஆண்டி-ஆக்ஸிடன்ட்டாகவும் பயனளிக்கிறது.
5) இந்த ஸ்மூத்தி கண் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.
6) மேலும், இந்த ஸ்மூத்தியை தினமும் குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலுபெறும், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து உடல் எடை குறையும்.

குறிப்பு:
இந்த ஸ்மூத்தியில் உங்களுக்கு வேண்டுமானால் ஓரிரு புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications