Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் வரும் நன்மைகள் என்னென்ன?
பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் வால் நட் ஆகியவற்றில் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள்(Poly unsaturated fattyacids) நிறைய உள்ளது. மேலும் சிறிதளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளன. அவற்றிலுள்ள நார்சத்து மற்றும், புரோட்டின் உடல் எடையை குறைக்கின்றன. அதோடு இன்னொரு ஆராய்ச்சியும் நடந்துள்ளது.

15 வருடத்திற்மும் மேலாக நட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. அல்லது ஏற்கனவே பாதிப்படைந்த நிலையிலிருக்கும் செல்களை சரிசெய்கின்றன.
வளர்சிதை மாற்றத்தின்போது செல்களில் உண்டாகும் சிதைவு மற்றும் பாதிப்புகள்தான் குணப்படுத்த முடியாத நோய்களான ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்கள் உருவாகின்றன. இந்த பாதிப்புகளை உருவாக்க முடியாமல் தடுக்கச் செய்யும் பண்புகளை நட்ஸ் கொண்டுள்ளது என அமெரிக்கன் ஜர்னல் கிளினிகல் நியூட்ரிஷன் என்னும் இதழ் ஆய்வை வெளியிட்டுள்ளது.
கடலை, பாதாம் போன்ற நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், நார்சத்து, அர்ஜினைன், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளன.
வாரம் ஒரு கப் நட்ஸ் சாப்பிடுவதால், இதய நோய்கள் மற்றும் சர்க்கரைவியாதி வரவிடாமல் பாதுகாக்கலாம். வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் பாதிப்புகள்தான் இததகைய நோய்கள் வரக் காரனம். இந்த பாதிப்புகளை ஆரம்பத்திலேயே தடுக்கிறது நட்ஸ் வகைகள். இதனால் இந்த நோய்களை வரவிடாமல் தடுக்கலாம்.
இந்த வளர்சிதை கோளாறுகளால் உண்டாகும் இறப்பினை நட் தடுக்கிறது என்று ஆய்வு நிருபித்துள்ளது. இந்த ஆய்விற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கு, ஒரு வாரத்திற்கு 5 அல்லது 6 கப் நட்ஸ் வழங்கப்பட்டது.
அதே போல் நட்ஸ் வழங்கப்படாத நோயாளிகளும் கண்காணிக்கப்பட்டனர். நட்ஸ் சாப்பிடவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் உயிர்காரணிகளின் ( C-reactive protein,IL6 ) அளவு மிகக் குறைவாகவும், நட்ஸ் சாப்பிடாதவர்களுக்கு அதிகமாகவும் இருந்தது.
அதேபோல், அதிக இறைச்சி சாப்பிடுவர்களுக்கு நட்ஸ் குடுத்து கண்கானித்த போது, அவர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் உயிர்காரணிகள் குறைந்தது.
நட்ஸில் அதிக அளவு நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், உயர் ரக புரத சத்து, நார்சத்து, மினரல், ஃபீனாலிக் அமிலம் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை தினமும் சாப்பிட்டால் இதய நோய்கள், புற்று நோய், ரத்த கொதிப்பு ஆகியவை வரவிடாமல் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


