Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Father's Day 2023: அப்பாக்களுக்கான சில முக்கியமான ஃபிட்னஸ் டிப்ஸ்!
Father's Day 2023: ஒரு ஆண் தந்தையாகும் போது, பல பொறுப்புக்களும் கடமைகளும் அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் பொறுப்புக்கள் மற்றும் கடமைகளால் தந்தையான பல ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள தவறுகிறார்கள்.
ஒரு தந்தை ஆரோக்கியமாக இருப்பது, அந்த குடும்பத்திற்கே பலம். தந்தையாக இருக்கும் ஆண்களின் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அது குடும்பத்தினருடனான உறவுகளை பாதிப்பதோடு, வேலையில் உற்பத்தித்திறன் மற்றும் வாழ்கைத் தரமே பாதிக்கப்படும்.

பொதுவாக குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களது தந்தை தான் முதல் ஹீரோ. அப்படி தங்கள் குழந்தைகளுக்கு ஹீரோவாக இருக்கும் ஆண்கள், தங்களை ஃபிட்டாக வைத்துக் கொண்டால் தான், குழந்தைகளும் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பார்கள். மேலும் தந்தைமார்கள் ஃபிட்டாக இருந்தால், குடும்பத்தினருடன் நீண்ட காலம் சந்தோஷமாக வாழலாம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. தந்தையர்களை கௌரவிக்க கொண்டாடப்படும் இந்நாளில், தந்தைமார்கள் ஃபிட்டாக இருக்க சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான உணவு
உடல் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால், முதலில் உண்ணும் உணவுகளில் கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் நாம் என்ன சாப்பிடுகிறோமோ, அப்படி தான் நமது உடலும் இருக்கும். எனவே தந்தைமார்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஃபிட்டாக வைத்துக் கொள்ள நினைத்தால், எண்ணெயில் பொரித்த அல்லது ஜங்க் உணவுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
மிதமான உடற்பயிற்சி
தற்போதுள்ள காலகட்டத்தில் நிறைய தந்தைமார்களுக்கு ஜிம் சென்று தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது என்பது சவாலான ஒன்றாக இருக்கலாம். இருப்பினும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் எடுத்ததும் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடாமல், மெதுவாக பயிற்சிகளை தொடங்கி படிப்படியாக உயர்த்த வேண்டும். எடுத்ததும் கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது காயங்களை ஏற்படுத்திவிடும். எனவே தினமும் 30 நிமிடம் வாக்கிங் அல்லது சைக்கிளிங் போன்ற மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
உடல்வலிமைக்கான பயிற்சி
வயது அதிகரிக்கும் போது தசைகளின் வலிமை மற்றும் அடர்த்தி குறையத் தொடங்குவதோடு, பலவீனமாகும். ஆனால் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால், தசைகளின் வலிமை மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். இந்த வகை உடல் வலிமைக்கான பயிற்சிகள் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரிக்கும். எனவே புஷ்-அப், ஸ்குவாட்ஸ், லஞ்சஸ் மற்றும் ப்ளாங்க்ஸ் போன்ற உடல் வலிமைக்கான பயிற்சிகளை செய்யுங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, டம்பெல்ஸ் பயன்படுத்தி இந்த பயிற்சிகளை செய்யுங்கள்.
நீரேற்றத்துடன் இருக்கவும்
வறண்ட சருமம், மலச்சிக்கல், தொடர்ச்சியான உடல் சோர்வு, பலவீனமான தசை மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றவை நீரிழப்புக்கான அறிகுறிகளாகும். ஆரோக்கியமான உடல் போதுமான நீரேற்றத்துடன் இருக்கும். எனவே உடல் வறண்டு போகாமல் இருக்க போதுமான அளவு நீரை குடிக்க வேண்டும்.
குடும்பத்துடன் விளையாடவும்
உடல் ஃபிட்டாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சியை தனியாக தான் செய்ய வேண்டும் என்பதில்லை. குடும்பத்தினருடன் சேர்ந்து செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுடன் சேர்ந்து கூடைப்பந்து, கால்பந்து, யோகாசனம் போன்றவற்றை செய்யலாம். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுவதாடு, குடும்பத்தினருடனான உறவும் வலுபெறும்.
மேலே கொடுக்கப்பட்டவற்றை அப்பாக்கள் பின்பற்றி வந்தால், நீண்ட காலம் உடல் ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications