Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
சர்க்கரை நோய் இருக்கா? அப்ப உங்களுக்கு மாரடைப்பு வராமல் தடுக்க என்ன செய்யணும் தெரியுமா?
Heart Disease And Diabetes In Tamil: வளர்ந்து வரும் நவீன உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. மேலும், உலகளவில் இந்தியாதான் சர்க்கரை நோயாளிகளின் தலைநகரமாக உள்ளதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உலகளவில் அதிக மக்களின் இறப்புக்கு காரணமாக இதய நோய் உள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்றைய நாளில் பெரும்பாலும் 30 வயதை கடந்தவர்களுக்கு நீரிழவு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆதலால், நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்ற வேண்டும்.

நீரிழிவு நோய் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உட்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதனால், நீரிழிவு நோயாளிகள் தங்கள் இதயத்தை அடிக்கடி பரிசோதிக்குமாறு மருத்துவர்கள் அடிக்கடி பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு நோய்க்கும் இருதய நோய்களுக்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. ஏனெனில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்றையொன்று பாதிக்கின்றன.
ஒரு ஆய்வு அறிக்கையின்படி, நீரிழிவு நோயாளிகளில் 30% இறப்புகளுக்கு கரோனரி தமனி நோய் காரணமாகும் என்று தெரிவிக்கிறது. மேலும் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு வாஸ்குலர் பிரச்சனைகளால் இறக்கின்றனர். எனவே இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், உங்கள் இதயத்தை அடிக்கடி பரிசோதிக்க வேண்டியது மிக அவசியம்.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்கள் இதயத்தை தவறாமல் ஏன் பரிசோதிக்க வேண்டும் என்றும் என்னென்ன பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
இதய நோய்
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகளை நீங்கள் உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பது மட்டுமல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோய்க்கு சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்த நாளங்கள் மற்றும் இதயத்திற்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டு இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படலாம்.
கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்கு இடையே உள்ள வலுவான தொடர்பைக் கருத்தில் கொண்டு, நீரிழிவு இல்லாத ஒருவரை விட நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய் ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இளம் வயதிலேயே இதய நோய்
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்து, அதை நீங்கள் சரியாக கவனிக்காவிட்டால், இளம் வயதிலேயே இதய நோயை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகம். நீரிழிவு இல்லாத பெரியவர்களை விட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இளம் வயதினருக்கு இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என்று அமெரிக்க தேசிய நீரிழிவு மற்றும் செரிமான மற்றும் சிறுநீரக நோய்களுக்கான அமைப்பு கூறுகிறது.
குறைந்த இரத்த சர்க்கரை அளவு
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் உங்கள் வாழ்க்கையைத் தொடரலாம் என்று அர்த்தம் இல்லை. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் கட்டத்தில், உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
உண்மையில், இது நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் மற்றும் அதை மாற்றியமைக்கக்கூடிய கட்டமாகும். அதனால், உங்கள் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மீது கவனமாக இருக்க வேண்டும்.
இளம் வயதில் இருந்தே பரிசோதிக்க தொடங்குங்கள்
உங்கள் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இதயத்தை உங்கள் 20 வயதுகளின் பிற்பகுதியில் இருந்து பரிசோதனை செய்யத் தொடங்குங்கள். ஏனெனில், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் இனி முதுமை தொடர்பான பிரச்சனைகள் அல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தாமதமாக, நீரிழிவு மற்றும் இதய நோய் பாதிப்பு இளைஞர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
இந்த நோய் இளைய தலைமுறையினருக்கு விரைவிலேயே ஏற்படுவது, நமது இளைய தலைமுறையினர் ஆரோக்கியமற்ற வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்பதற்கான ஒரு பெரிய அறிகுறியாகும். மேலும், தாமதமான நோயறிதல் ஒரு தீங்கு விளைவிக்கும் காரணியாகும். எனவே, இளைஞர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இவற்றை செய்வதை நிறுத்துங்கள்
நீரிழிவு நோய் உங்கள் இதயத்திற்கு ஆபத்தை அதிகரிப்பதால், புகைபிடித்தல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது மற்றும் அதிக உப்பு மற்றும் சர்க்கரை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை நீங்கள் முற்றிலும் கைவிட வேண்டும். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் அளவுகள் போன்ற பிற காரணிகளையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணியாக உடல்பருமன் உள்ளது. உடல் பருமன் நீரிழிவு நோய்க்கு மட்டுமல்ல, பல உடல்நல சிக்கல்களுக்கும் ஒரு பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது. மருந்துகளை உட்கொள்வது மட்டுமே நோயைக் கட்டுப்படுத்த உதவாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் உங்கள் அன்றாட வழக்கத்தில் நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இதயச் சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கலாம்
வழக்கமான பரிசோதனை, நல்ல வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கண்காணித்தல் மற்றும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடிந்தால், இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












