Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
கையேந்தி பவனில் சாப்பிடுவது நல்லதா? எப்படி சாப்பிடுவது நல்லது? விளக்குகிறார் சமையல் கலை நிபுணர்...!
மனிதர்களின் மிகப்பெரிய செல்வம் எதுவென்றால் அது அவர்களின் ஆரோக்கியம்தான். ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அவர்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது பயனற்றதுதான். பொதுவாக ஆரோக்கியம் மோசமாக பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது ஒருவரின் உணவுமுறைதான்.
ஒருவர் தங்களின் உணவுமுறையை மாற்றியமைக்காமல் ஒருபோதும் நல்ல ஆரோக்கியத்தை அடைய முடியாது. பொதுவாக மக்கள் அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களே ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் உள்ளனர். ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது அது எந்த பொருள் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது என்று பிரபல சமையல் நிபுணர் விஜயகுமார் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் உணவுமுறைப் பற்றி அவர் கூறியுள்ள சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

விலை அதிகமாக இருக்கும் பொருள் சிறந்ததா?
பொதுவாகவே மக்களுக்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் இருக்கிறது. ஆனால் அது தவறானது. உதாரணமாக, முந்திரி பருப்பின் விலை ரொம்ப அதிகம், அதற்கு மாற்றாக நம் சமையல் அறையில் இருக்கும் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் அதே சுவையை பெற முடியும்.
அதே போல் கிவி பழத்தின் விலை அதிகம் அதில் இருக்கும் வைட்டமின் சி அளவு 95 மில்லி கிராம் தான். ஆனால் விலை குறைவாக கிடைக்கும் நெல்லிக்காயில் 300 மில்லி கிராம் அளவு இருக்கு. நெல்லிக்காயை இரண்டு ஆரஞ்சு பழத்திற்கு நிகராகவும் சொல்லலாம். இதில் நெல்லிக்காயின் விலை தான் குறைவு.
அதே போல் மீன்களில் வஞ்சரம் மீன் விலை அதிகமாக இருக்கும், நடிகர் சந்தானம் கூட வஞ்சரம் மீன் சாப்பிட பேங்கில் லோன் தான் வாங்க வேண்டும் என்பர் காமெடியில். ஆனால் வஞ்சரம் மீனிற்கு என்று தனி சுவை எதுவும் கிடையாது, அதன் மசாலாவே சுவையை கூட்டுகிறது.
வஞ்சர மீனிற்கு மாற்றாக, நீங்கள் தவா ஃப்ரை செய்ய கானாங்கெளுத்தி, ஜிலேபி, மற்றும் வௌவ்வால் மீனில் மசால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். டீப் ஃப்ரை செய்ய நெத்தலி, கொடுவா, மற்றும் நெய் மீன் போன்றவை அட்டகாசமாக இருக்கும். குழம்பு செய்ய மத்தி, சங்கரா, மற்றும் அயிலை மீன் பொருத்தமான தேர்வாக இருக்கும்.
கலரை பார்த்து தேர்வு செய்வது?
கலரை பார்த்து மனிதர்களை பற்றி முடிவு செய்வது தவறு என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். அதே போல் கலரை பார்த்து உணவை தேர்வு செய்வதும் தவறு தான் என்கிறார் நம் செஃப். உதாரணமாக, பஞ்சு மிட்டாய் சமீபமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தடை செய்யப்பட்டது.
பஞ்சுமிட்டாயில் பிரச்சனை இல்லை, அது வெறும் சர்க்கரையால் செய்யப்படுவது. ஆனால், அதில் சேர்க்கப்பட்ட கலரில் ரோடாமைன் பி என்னும் கெமிக்கல் இருக்கிறது. இதை சாப்பிடுபவர்களுக்கு கேன்சரை ஏற்படுத்தும் தன்மை உடையது. பஞ்சு மிட்டாயில் மட்டும் தான் கலர் இருக்கிறது என நினைக்கிறீர்களா?
ஆம், என்றால் நீங்கள் நினைப்பது தவறு. நாம் பெரும்பாலும் கடைகளில் சாப்பிடும் உணவு வகைகளான கபாப், தந்தூரி, க்ரில், மஞ்சூரியன், மற்றும் சட்னியில் கூட கலரை அதிகரிக்க செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.
பெரும்பாலும் ஸ்பூனில் சாப்பிடுவதை விட கைகளில் சாப்பிடும் போது இவற்றை எளிதாக கண்டுபிடிக்கலாம். கைகளில் சாப்பிடும் போது நிறம் உங்கள் கைகளில் ஓட்டினால், அந்த உணவு வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
ரோட்டுக்கடை உணவு நல்லதா?
ரோட்டுக்கடை கடை உணவு பாதுகாப்பானது தான் என்கிறார் நம் செஃப். உணவின் ஆபத்தான நிலை என்பது 4 டிகிரி முதல் 60 டிகிரி வரை இருக்கும். பெரும்பாலும் நாம் ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவுகள் சமைத்து சூடாகவோ அல்லது ஆறிய உணவாகவோ இருக்கும்.
சமைக்கப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் பாக்ட்ரியாக்கள் இருக்காது. முடிந்த வரை ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவுகளை 4 டிகிரிக்கு குறைவாகவோ அல்லது 60 டிகிரிக்கு அதிகமாவோ இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். உணவு சுகாதாரமான முறையில் சுத்தமான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
