Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
எண்டோமெட்ரியோசிஸ் என்றால் என்ன? அது பெண்களுக்கு எந்த மாதிரியான வலியை உண்டாக்கும்?
Endometriosis In Tamil: எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையின் புறணி திசுக்கள் வெளியே வளரும் நிலையாகும். இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினையால் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பெண்கள் பாதிப்படைகின்றனர். கருப்பையின் புறணி போன்ற திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும் போது இத்தகைய பிரச்சினை ஏற்படுகிறது.
பெரும்பாலும் இந்த திசுக்கள் வளருவது என்பது கருப்பைகள், ஃபலோபியன் குழாய்கள் அல்லது இடுப்புப் புறணி ஆகிய இடங்களில் நிகழ்கிறது. இந்த நிலை பெண்களுக்கு நாள்பட்ட வலியை ஏற்படுத்துகிறது. இதனால் பெண்களுக்கு கருவுறாமை, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகள், சோர்வு, இரைப்பை குடல் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன.

இந்த நாள்பட்ட பிரச்சினையை பெண்கள் உடனடியாக கண்டறிந்து சரிசெய்வது அவசியம். சரி வாங்க, எண்டோமெட்ரியோசிஸ் பெண்களுக்கு எந்த மாதிரியான வலியை உண்டாக்குகிறது என்பதை பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.
எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சினை வலியை உண்டாக்க காரணங்கள்
அழற்சி உண்டாதல் - எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் பெண்கள் வீக்கத்தை சந்திக்கின்றனர். இந்த பிரச்சினை நரம்புகளை எரிச்சலடையச் செய்து வலியை உண்டாக்குகிறது. இந்த அழற்சி சருமத்தில் வடுக்களை உண்டாக்குகிறது. வடுவானது திசுக்களை உண்டாக்கி வலியை ஏற்படுத்துகிறது.
ஹார்மோன்கள் - எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஈஸ்ட்ரோஜனை சார்ந்த ஒரு நிலையாகும். இது ஹார்மோன்களை அதிகளவில் பாதிக்கிறது. கருப்பைக்கு வெளியே உள்ள எண்டோமெட்ரியோசிஸ் திசுக்களின் வளர்ச்சி ஹார்மோன் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி வலியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
நரம்பு பிரச்சினைகள் - எண்டோமெட்ரியோசிஸ் இடுப்புப் பகுதியில் உள்ள நரம்பு முனைகளை எரிச்சலடையச் செய்து வலியை உண்டாக்குகிறது.
எண்டோமெட்ரியோசிஸால் ஏற்படும் வலிகள்:
மாதவிடாய் வலி - எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் பெண்கள் அடிக்கடி மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்க நேரிடலாம். இது அவர்களுக்கு அன்றாட பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
நாள்பட்ட இடுப்பு வலி - எண்டோமெட்ரியோசிஸ் ஆறு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் போது கடுமையான நாள்பட்ட இடுப்பு வலியால் அவதிப்பட வாய்ப்பு உள்ளது.
உடலுறுவின் போது ஏற்படும் வலி - உடலுறுவின் போது எண்டோமெட்ரியோசிஸ் வலியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது உடலுறுவை சங்கடமானதாகவும், வலியையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
குடல் இயக்கத்தின் போது வலி ஏற்படுதல் - எண்டோமெட்ரியோசிஸ் இருக்கும் பெண்கள் குடல் அசைவுகளின் போதும், மாதவிடாய் காலங்களிலும் வலியை அனுபவிக்கின்றனர்.
வலி மிகுந்த வகையில் சிறுநீர் கழித்தல் - எண்டோமெட்ரியோசிஸ் சிறுநீர் கழிக்கும் போது வலியை உண்டாக்குகிறது. மாதவிடாய் காலங்களில் பொதுவாக இந்த பிரச்சினை ஏற்படுகிறது.
சிகிச்சை முறைகள்
வலி நிவாரணி மருந்துகள் - இப்யூபுரூஃபன் போன்ற வலி நிவாரணி மருந்துகள் மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் பிற வகையான வலிகளைப் போக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. கடுமையான வலிக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
ஹார்மோன் சிகிச்சைகள் - ஹார்மோன் கட்டுப்பாடு மாத்திரைகள், ப்ரோஜெஸ்டின்கள், கோனாடோட்ரோபின் போன்ற ஹார்மோன் அகோனிஸ்ட்டுகள் பரிந்துரைக்கப்படுகிறது. ஹார்மோன் கட்டுப்பாட்டு சிகிச்சையின் மூலம் ஹார்மோன் அளவை கட்டுப்படுத்தி வலியை குறைக்க முடியும்.
அறுவை சிகிச்சை முறைகள் - எண்டோமெட்ரியோசிஸ் திசுக்கள் அல்லது வடு திசுக்களை அகற்ற அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது.
இடுப்பு மாடி உடல் தசைகள் சிகிச்சை - இடுப்பு மாடி உடல் சிகிச்சை மூலம் இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்துவதன் மூலம் வலியைக் குறைக்க முடியும்.
தளர்வு சிகிச்சை முறைகள் - தியானம், யோகா அல்லது ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் முலம் தளர்வு சிகிச்சை முறைகளை மேற்கொள்ள முடியும். இது மன அழுத்தத்தை குறைக்கவும் வலியை குறைக்கவும் உதவுகிறது.
உணவுமுறை மாற்றங்கள்
காப்ஃபைன், ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை குறைப்பதன் மூலம் அழற்சியை குறைக்க முடியும். இந்த உணவு முறை மாற்றங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், வலியை குறைக்கவும் உதவுகிறது.
தடுப்பு முறைகள்
எண்டோமெட்ரியோசிஸ் தடுக்க எந்த வழியும் இல்லை. பெண்களுக்கிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலமும், ஆரம்ப கால நோயறிதல் மற்றும் மேலாண்மை மூலம் இந்த பிரச்சினையை மெதுவாக்கலாம். இதன் மூலம் நீண்ட கால பாதிப்பை குறைக்க முடியும். தற்போது வரை முற்றிலுமாக குணப்படுத்த எந்த சிகிச்சை முறையும் இல்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications