Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?
Papaya During Periods: பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியை சந்திப்பார்கள். சொல்லப்போனால் மாதவிடாய் சுழற்சி ஒழுங்காக நடக்கும் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். சில பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது கடுமையான வயிற்று வலியை சந்திக்காமல் இருக்க ஒருசில உணவுகளை தவிர்ப்பார்கள். அப்படி பெண்கள் தவிர்க்கும் ஒரு உணவுப் பொருள் தான் பப்பாளி.
என்ன தான் பப்பாளி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அந்த பப்பாளியை மாதவிடாய் காலம் மற்றும் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும். ஆனால் இது உண்மையா, இல்லையா என்பதை எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

உண்மையில், நன்கு கனிந்த பப்பாளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம். ஆனால் கனியாத பப்பாளியை சாப்பிடக்கூடாது. ஏனெனில் கனியாத பப்பாளியில் லேடெக்ஸ் மற்றும் பாப்பைன் அதிகம் உள்ளன. இவை தீவிரமான அலர்ஜியைத் தூண்டிவிடுவதோடு, கருகலைப்பையும், சில சமயங்களில் குறைபிரசவத்திற்கும் வழிவகுக்கும். எனவே தான் கர்ப்ப காலத்தில் பப்பாளியை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டுமென கூறுகிறார்கள்.
சரி, பப்பாளியை ஏன் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்கிறார்கள் மற்றும் பப்பாயை மாதவிடாய் காலத்தில் சாப்பிடலாமா என்பதைக் குறித்து இப்போது காண்போம்.
மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடலாமா?
பொதுவாக பப்பாளி பழமானது உடல் சூட்டை அதிகரிக்கும் பழமாக நம்பப்படுகிறது. இந்த பப்பாளியை மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்பது பற்றி மகப்பேறு மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும் போது, ஆய்வுகளின் படி நன்கு கனிந்த பப்பாளியை சாப்பிடுவது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது மற்றும் மாதவிடாய் காலத்தில் எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.
உண்மையில் மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பானது மற்றும் பல நன்மைகளை வழங்கும். ஏனெனில் பப்பாளியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வைட்மின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை உள்ளன. இவை மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதோடு, வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றைத் தடுக்கும். இருப்பினும், பப்பாளியை அளவாகவே சாப்பிட வேண்டும்.
பப்பாளியில் உள்ள சத்துக்கள்
பப்பாளியில் நார்ச்சத்து, நொதிகள், கிளைகோசைடுகள் போன்றவை அதிகம் இருப்பதை தவிர, பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை அதிகளவில் உள்ளன. மேலும் இதில் குறிப்பிட்ட அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இவை சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகும். பப்பாளியில் உள்ள இந்த சத்துக்கள் அனைத்தும் உடலில் பலவிதமான நன்மைகளை வழங்கும்.
பப்பாளி எப்படி மாதவிடாய் காலத்தில் உடலுக்கு நன்மை அளிக்கிறது?
* பப்பாளி கருப்பை தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள கரோட்டீன் மாதவிடாய் கால வலி அல்லது பிடிப்புக்களை தவிர்க்க உதவுகிறது.
* பொதுவாக பப்பாளி செரிமானத்தை மேம்படுத்துகிறது. அதுவும் பெண்கள் பப்பாளியை சாப்பிடும் போது, அது மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் கடுமையான வயிற்று வலி மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாயை சரிசெய்ய உதவுகிறது. பப்பாளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து, மாதவிடாய் காலத்தில் குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துவதோடு, மலச்சிக்கலைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி பப்பாளி கருப்பை தசைகளின் சரியான செயல்பாட்டை ஆதரிக்கிறது. எனவே மாதவிடாய் காலத்தில் பப்பாளி சாப்பிட விரும்பினால், சாப்பிடுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.
* பப்பாளி பழத்தை பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது கருப்பை தசைகளை சுருங்கச் செய்ய உதவுகிறது. பப்பாளி உடலின் சூட்டை அதிகரிப்பதைத் தவிர, இப்பழத்தில் கரோட்டின் அதிகமாக உள்ளன. இவை உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவை தூண்டுகிறது. இதன் விளைவாக மாதவிடாய் சுழற்சி மாதந்தோறும் ஒழுங்காக நடைபெறும்.
எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் நன்கு கனிந்த பப்பாளியை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் அதை அளவாக சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications