Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தினமும் 1 கப் முருங்கைக்கீரை சூப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Drumstick Leaves Soup Benefits In Tamil: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கீரைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இந்த கீரைகளில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய கீரை தான் முருங்கைக்கீரை.
சொல்லப்போனால் கீரைகளிலேயே முருங்கைக்கீரை ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. இந்த கீரையை தினசரி உணவில் 1 கைப்பிடி சேர்த்து வந்தாலே, பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

இப்படிப்ப்ட்ட முருங்கைக்கீரையைக் கொண்டு பொரியல், கூட்டு, சாம்பார் என்று பலவாறு சமைத்து சாப்பிடலாம். ஆனால் கீரையில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற வேண்டுமானால், இந்த முருங்கைக்கீரைக் கொண்டு சூப் தயாரித்து குடிக்க வேண்டும்.
இப்படி சூப் தயாரிக்கும் போது கீரையில் உள்ள முழு சத்துக்களும் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். இப்போது முருங்கைக்கீரை சூப்பை தினமும் ஒரு கப் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. எலும்புகள் வலுவடையும்
முருங்கைக்கீரை சூப்பில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்றவையும், கால்சியம், பொட்டாசியம், புரோட்டீன் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாடு, எலும்புகளை வலுப்படுத்துகின்றன மற்றும் உடலின் ஆற்றலை அதிகரிக்கின்றன.
2. செரிமானம் மேம்படும்
முருங்கைக்கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே முருங்கைக்கீரையைக் கொண்டு சூப் தயாரித்து தினமும் சிறிது குடிக்கும் போது, செரிமானம் மேம்படுகிறது மற்றும் குடல் இயக்கங்களை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
3. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
முருங்கைக்கீரையில் க்யூயர்சிடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும் உதவி புரிகின்றன. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவி புரிகின்றன. தற்போது மழை அதிகம் பெய்வதால், இக்காலத்தில் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, காய்ச்சல் வருவது தடுக்கப்படும்.
4. இதய ஆரோக்கியம் மேம்படும்
முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி புரிகின்றன. எனவே தினமும் ஒரு கப் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வந்தால், அது இரத்த அழுத்தத்தை மற்றும் கொலஸ்ட்ராலை சீராக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
5. எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வந்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருப்பதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, எடை இழப்புக்கு உதவி புரியும்.
6. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகள் முருங்கைக்கீரை சூப்பை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகச்சிறந்த ஸ்நாக்ஸாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications