Latest Updates
-
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன?
மட்டன் சாப்பிட்டால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாகுமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
Does Eating Mutton Increase Cholesterol: இறைச்சிகளில் என்ன தான் நிறைய பேர் சிக்கனை வாங்கி சாப்பிட்டாலும், பெரும்பாலானோருக்கு மட்டன் தான் ரொம்ப பிடிக்கும். ஆனால் மட்டன் பிடித்தாலும், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற ஒரு காரணத்தினால், மட்டனை நிறைய பேர் தவிர்த்து வருகின்றனர். அதுவும் உடலில் ஏதாவது பிபி, சுகர், கொழுப்பு கல்லீரல் போன்ற பிரச்சனை இருந்து மருத்துவரிடம் சென்றால், அவர் முதலில் அறிவுறுத்துவது மட்டன் சாப்பிடாதீர்கள் என்பதாகவே இருக்கும்.
உண்மையிலேயே மட்டன் சாப்பிட்டால் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா என்ன? இதுக்குறித்து உணவு ஆலோசகர் டாக்டர். அருண்குமார் தனது சமூகவலைத்தள பக்கத்தில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார். அது என்னவென்பதை இப்போது காண்போம் வாருங்கள்.

அதில் அவர் கூறியதாவது,"நிறைய பேருக்கு கொலஸ்ட்ரால் என்றால் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலில் உற்பத்தியாகக்கூடிய நமது செல் சவ்வுகளில் உள்ள ஒருசில அளவிலான ஒரு கெமிக்கல். இந்த கொலஸ்ட்ரால் நமது உடலுக்கு ஒரு நாளைக்கு சுமார் 2000 மிகி தேவைப்படக்கூடிய பொருள். இந்த கொலஸ்ட்ரால் என்பது வேறு, கொழுப்பு என்பது வேறு. கொழுப்பு நமது உடலில் ஆங்காங்கு கிலோ கணக்கில் தேங்கியிருக்கும்." என்று கூறினார்.
மற்ற இறைச்சிகளை விட மட்டனில் கொலஸ்ட்ரால் அதிகமா?
ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்றவற்றை ரெட் மீட் அல்லது சிவப்பு இறைச்சி என்று அழைப்பர். சிக்கன், மீன் போன்றவற்றை ஒயிட் மீட் அல்லது வெள்ளை இறைச்சி என்று அழைப்பர். இவ்விரண்டில் எது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்ற கேள்வியும் பலருக்கும் இருக்கும். அதே சமயம் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் விதம் குறித்தும் தவறான கருத்துக்கள் மக்களிடையே உள்ளது.
பொதுவாக நம்மூர்களில் ட்ரைகிளிசரைடு என்னும் கொழுப்பின் அளவு தான் அதிகமாக இருக்கும். இந்த ட்ரைகிளிசரைடுகளை அதிகமாக கொண்டவர்கள் மட்டனை சாப்பிடலாம், ஆனால் மாவுச்சத்துள்ள உணவைக் குறைக்க வேண்டும். அதாவது இவர்கள் சர்க்கரை, ஸ்நாக்ஸ், இட்லி, தோசை, சாதம் போன்ற அனைத்தையும் குறைக்க வேண்டும். இவற்றைக் குறைத்தாலே ட்ரைகிளிசரைடுகளின் அளவு தானாக குறைந்துவிடும்.
ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாக இருந்தால், உடலில் மாவுச்சத்தை செயல்படுத்தும் திறன் குறைவாக உள்ளது, இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகமாக உள்ளது என்று அர்த்தம். எனவே ட்ரைகிளிசரைடு அதிகம் உள்ளவர்கள் மட்டன், சிக்கனை சாப்பிடுவதை நிறுத்துவதால் எவ்வித பிரயோஜனமும் இல்லை. மாவுச்சத்துள்ள உணவைக் குறைத்தால் மட்டுமே முடியும்.
எல்டிஎல் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மட்டன் சாப்பிடக்கூடாதா என்று கேட்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை கட்டாயம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள கொலஸ்ட்ரால் நேரடியாக இரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில்லை. சொல்லப்போனால் ஒரு நாளைக்கு நமது உடலுக்கு 2000 மிகி கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. இந்நிலையில் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை எடுக்கும் போது, அது எல்டிஎல் அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
மேலும் பொதுவாக ஆன்லைனில் மட்டன் என்று தேடும் போது, நமக்கு கிடைக்கும் செய்தி செம்மறி ஆட்டுக்கறியைப் பற்றியது தான். செம்மறி ஆடு என்பது முதிர்ச்சி அடைந்த ஆடு. அதுவே இளம் செம்மறி ஆடு என்பது லாம்ப். ஆனால் நம்மூர்களில் மட்டன் என்பது வெள்ளாடு ஆகும். இந்த வெள்ளாடு தான் கோட்.
எனவே மட்டன் என்று குறிப்பிடும் மூன்று வகையான ஆடுகளும் வெவ்வேறு தன்மையை கொண்டவை. இப்போது இந்த 3 வகையான ஆடுகளின் கொலஸ்ட்ராலை ஒப்பிட்டு பார்த்தால், 100 கிராம் செம்மறி ஆட்டு கறியில் 138 மிகி கொலஸ்ட்ராலும், இளம் செம்மறி ஆட்டு கறியில் 120 மிகி கொலஸ்ட்ராலும், வெள்ளாட்டு கறியில் 80 மிகி கொலஸ்ட்ராலும் உள்ளது. எனவே உணவின் மூலம் பெறக்கூடிய கொலஸ்ட்ரால் அவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஏனெனில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய கொலஸ்ட்ரால் அளவே 2000 மிகி. இந்நிலையில் ஒருவர் 250 கிலோ மட்டனை சாப்பிட்டாலும் ஒருவரது கொலஸ்ட்ரால் அளவில் அவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஆனால் மட்டனில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் வேண்டுமானால், ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். அப்படிப்பட்ட குறிப்பிட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் மட்டனை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்." என்றும் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

