Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
நீங்க பிட்டா இருக்கீங்களா, இல்லையா-ன்னு தெரியணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 டெஸ்ட்-ஐ ட்ரை பண்ணுங்க..
Simple Fitness Tests In Tamil: நாம் ஒவ்வொருவருமே நன்கு ஃபிட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவோம். அதற்காக காலையில் உடற்பயிற்சியை செய்வது, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது போன்ற பல விஷயங்களை மேற்கொண்டு வருகிறோம். ஆனால் இவ்வளவு செய்தும் நாம் உண்மையிலேயே ஃபிட்டாக இருக்கிறோமா இல்லையா என்று கேட்டால் நமக்கு தெரியாது.
நீங்கள் உண்மையிலேயே ஃபிட்டாக இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மருத்துவ ஆலோசகரான டாக்டர். வைசாலிரவிசங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்ட 3 விதமான டெஸ்ட்களை ட்ரை செய்து பாருங்கள். இந்த 3 டெஸ்ட்டுகளை சிறப்பாக செய்ய முடிந்தால், நீங்கள் ஃபிட் என்று அர்த்தம். அதில் அவர் குறிப்பிட்ட 3 டெஸ்ட்டுகள் பின்வருமாறு:

1. 3 நிமிட ஸ்டெப்-அப் டெஸ்ட் (3 Minute Step Test)
இந்த டெஸ்ட் செய்வதற்கு எந்த ஒரு உபகரணங்களும் தேவையில்லை. வீட்டில் உள்ள மாடிப்படி ஒன்றே போதும். அதுவும் ஒரே இடத்தில் இருந்து ஒரு படியில் ஏறி, இறங்கினாலே போதும். இப்படி 3 நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும். 3 நிமிடம் கழித்து நாடித்துடிப்பை 1 நிமிடத்திற்கு செக் செய்து பார்க்க வேண்டும். எந்த அளவிற்கு குறைவாக உள்ளதோ அந்த அளவிற்கு நீங்கள் ஃபிட் என்று அர்த்தம்.
வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து விதிமுறைகள் மாறுபடும். ஆனால் YMCA தரநிலைகளின் அடிப்படையில்,
* ஆண்கள் (20-29 வயது): நிமிடத்திற்கு 86-94 துடிப்புகள் (bpm) = சராசரி;
* பெண்கள் (20-29 வயது): 96-101 bpm = சராசரி;
* ஆண்கள் (30-39 வயது): 88-96 bpm = சராசரி;
* பெண்கள் (30-39 வயது): 98-104 bpm = சராசரி;
2. 1 நிமிட புஷ்-அப் டெஸ்ட் (1 Minute Push Up Test)
இந்த டெஸ்டில் ஒரு நிமிடத்திற்குள் எவ்வளவு புஷ்-அப் செய்ய முடிகிறது என்று பார்க்க வேண்டும். இது மேல் உடலின் வலிமையை கண்டறிய உதவும். அமெரிக்க விளையாட்டு மருத்துவக் கல்லூரி (ACSM) விதிமுறைகளின் அடிப்படையில்:
* ஆண்கள் (20-29 வயது): 29-35 புஷ்-அப்கள் = சராசரி; >45 = சிறந்தவை.
* பெண்கள் (20-29 வயது): 21-27 புஷ்-அப்கள் = சராசரி; >36 = சிறந்தவை.
* ஆண்கள் (30-39 வயது): 24-29 புஷ்-அப்கள் = சராசரி; >39 = சிறந்தவை.
* பெண்கள் (30-39 வயது): 17-22 புஷ்-அப்கள் = சராசரி; >30 = சிறந்தவை.
3. உட்கார்ந்து எழும் டெஸ்ட் (Sit To Stand Test)
இந்த டெஸ்ட்டில் 30 நொடிகள் நிலை மாறாமல் எத்தனை முறை உட்கார்ந்து எழ முடிகிறது என்று பார்க்க வேண்டும். சீனியர் ஃபிட்னஸ் டெஸ்டின் விதிமுறைகளின் அடிப்படையில்,
* ஆண்கள் (20-29 வயது): 19-22 ரெப்ஸ் = சராசரி; >25 = சிறந்தது.
* பெண்கள் (20-29 வயது): 17-20 ரெப்ஸ் = சராசரி; >23 = சிறந்தது.
* ஆண்கள் (30-39 வயது): 17-20 ரெப்ஸ் = சராசரி; >23 = சிறந்தது.
* பெண்கள் (30-39 வயது): 15-18 ரெப்ஸ் = சராசரி; >21 = சிறந்தது.
* சராசரிக்கும் குறைவான எண்ணிக்கையில் செய்தால், அது பலவீனம் அல்லது இயக்கம் தொடர்பான சிக்கல்களைக் குறிக்கலாம்.
எனவே நண்பர்களே! நீங்கள் ஃபிட்டாக ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை எளிய வழியில் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த 3 டெஸ்ட்டுகளை வீட்டிலேயே செய்து பாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
