Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
உடம்பு வலிக்கும் உணர்ச்சிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
உங்களுடைய மனம், உடல் மற்றும் ஆன்மா என மூன்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு உள்ளன. எனவே உங்கள் உடம்பில் எதாவது ஒரு வலி ஏற்பட்டால் உங்கள் உணர்வில் எதோ பிரச்சினைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. உங்கள் உணர்ச்சிகள் மற்றும் மனநிலையுடன் தொடர்புடைய பல்வேறு வகையான உடல் வழிகள் உள்ளன.
உங்களுக்கு ஏற்படும் ஆழ்ந்த உணர்ச்சிப் பிரச்சினைகள் உங்களுக்கு உடல் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது. உதாரணமாக உங்களுக்கு தலைவலி ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு ஏற்படும் டென்ஷன் மற்றும் மன அழுத்தங்களால் ஏற்படலாம்.

எனவே இப்படி கால் வலி, கை வலி மற்றும் உடம்பு வலி இப்படி எல்லாவற்றிற்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதன் மூலம் உங்கள் வலிகளை போக்க முடியும்.
தலைவலியை ஏற்படுத்தும் உணர்வு
உங்கள் தலையில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்றவை உங்கள் தலைவலிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் தலைவலியை மட்டுமே கணக்கில் கொண்டு சிகிச்சை மேள்கொள்ளக் கூடாது. உங்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறிது நேரம் ஒதுக்கலாம். தியானம் செய்யலாம். சூடான குளியல் மேற்கொள்ளலாம், கொஞ்சம் நேரம் படுத்து உறங்கலாம். உங்கள் மன அழுத்த உணர்வுகளை குறைக்கும் போது உங்கள் தலைவலியும் தானாகவே குறைகிறது.
கழுத்து வலியை ஏற்படுத்தும் உணர்வு
உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலி ஏற்பட்டால் நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நபராக இருக்கலாம். இதனால் மற்றவருக்கு உங்களை பிடிக்காமல் போகலாம். எனவே மற்ற மக்களிடம் நீங்கள் விரும்பும் விஷயங்களை கவனியுங்கள். நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் மனதுக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை கை விடுங்கள். நீங்கள் உங்கள் நிகழ்காலத்தில் கவனம் செலுத்தும் போது உங்கள் மனநிலை சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முடியும். இதனால் கழுத்து வலி குறைய வாய்ப்பு உள்ளது.
தோள்பட்டை வலியை ஏற்படுத்தும் உணர்வு
தோள்பட்டை வலி நீங்கள் அதிக உணர்ச்சி சுமைகளை சுமக்கிறீர்கள் என்பதை காட்டுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் சுமைகள் மற்றும் கஷ்டங்கள் இருந்தால் அதை குறைக்க முயற்சி செய்யுங்கள். அதே மாதிரி உங்கள் சுமைகளை நீங்கள் மட்டுமே பார்க்காமல் மற்றவருக்கும் பிரித்து கொடுக்கலாம். இதன் மூலம் உங்கள் பிரச்சினை சுமைகள் குறையும்.
மேல்முதுகு வலியை ஏற்படுத்தும் உணர்வு
மேல்முதுகு வலி என்பது உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லை என்பதை காட்டுகிறது. உங்கள் கஷ்டங்களை கூற உங்களுக்கு போதுமான அளவு ஆள் இல்லை என்பதை இது குறிக்கிறது. நீங்கள் விரும்பப்படாதவர்களாகவும், தேவையற்றவர்களாகவும் உணரலாம். இந்த உணர்வு உங்களுக்கு மேல் முதுகு வலியை ஏற்படுத்துகிறது. எனவே மக்களுடன் தொடர்பில் இருக்க முயற்சி செய்யுங்கள். தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து சேவைகள் புரியலாம், இசை வகுப்புகள் நடத்தி வரலாம்.
கீழ்முதுகு வலியை ஏற்படுத்தும் உணர்வு
கீழ் முதுகு வலி என்பது நீங்கள் பணத்தை பற்றி அதிகம் கவலைப்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது. எனவே பணத்தை அநாவசியமாக செலவழிக்காமல் நியாயமாக செலவழிக்க முயற்சி செய்யுங்கள். சம்பள உயர்வு மற்றும் பணச் சேமிப்பு இவற்றை மேற்கொள்ளுங்கள். பணத்தை பற்றிய கவலையை நீங்கள் விடும் போது உங்கள் கீழ்முதுகு வலி குறைய வாய்ப்பு உள்ளது.
முழங்கைகளில் வலியை ஏற்படுத்தும் உணர்வு
முழங்கை வலி உங்கள் வாழ்க்கை மாற்றத்தை பற்றி பேசுகிறது. உங்களுக்கு இருக்கும் வாழ்க்கை கடினமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. எனவே உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களுக்கு அனுமதி கொடுங்கள். பல்வேறு திறன் கொண்டவராக இருங்கள். புதிய வாய்ப்புகளை பெற யோசிக்காதீர்கள்.
கை வலியை ஏற்படுத்தும் உணர்வு
நீங்கள் தனிமையாக இருக்கும் உணர்வு உங்களுக்கு கை வலியை ஏற்படுத்தலாம். எனவே உங்கள் தனிமை உங்களுக்கு கை வலியை ஏற்படுத்தும். எனவே உங்கள் தனிமையை போக்க புதிய நண்பர்களை உருவாக்குதல், சக ஊழியர்களுடன் மதிய உணவு எடுத்தல், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை செய்து வரலாம். இது உங்கள் வலியை குறைக்க உதவி செய்யும்.
இடுப்பு வலியை ஏற்படுத்தும் உணர்வு
இடுப்பு வலி நீங்கள் ஒரே இடத்தில் இருந்து செயல்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது. உங்கள் வாழ்க்கைக்கு எந்த பாதை சரியானது என்பதை தீர்மானிக்க பயப்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது. எனவே வாழ்க்கையில் உங்கள் முடிவுகளை எடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உள்ளுணர்வுகளை கேட்டு அதன்படி செயல்படுங்கள். இதன் மூலம் சரியான வழியை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் உணர்வுகளை மாற்றி அமைக்கும் போது உங்கள் இடுப்பு வலியும் குறைய வாய்ப்பு உள்ளது.
முழங்கால் வலியை ஏற்படுத்தும் உணர்வு
முழங்கால் வலி உங்களின் ஈகோ என்ற உணர்வை காட்டுகிறது. உங்களுக்கு ஈகோ அதிகமாக இருந்தால் அந்த உணர்வால் முழங்கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் தான் பெரியவர் என்ற ஈகோவை விட்டுத் தள்ளுங்கள். தன்னார்வ தொண்டு செய்ய சிறிது நேரம் செலுத்துங்கள். வாழ்க்கையில் தவறான விஷயங்களுக்கு பிடிவாதமாக இருப்பதை நிறுத்துங்கள். ஈகோவை குறைப்பது உங்கள் முழங்கால் வலியை குறைக்க உதவுகிறது.
பாதங்களில் வலியை ஏற்படுத்தும் உணர்வு
நீங்கள் மனச்சோர்வு அடைந்தாலோ அல்லது எதிர்மறை எண்ணங்கள் போன்ற உணர்வு உங்களுக்கு பாத வலியை ஏற்படுத்துகிறது. எனவே எதிர்மறை எண்ணங்களை விடுத்து நேர்மறை எண்ணங்கள் கொண்ட நபர்களுடன் நேரம் செலவிடுங்கள். உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் செயல்களில் ஈடுபடலாம். உங்கள் மனநிலை மோசமாக இருந்தால் மனநல ஆலோசகர் உதவியை நீங்கள் நாடலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications