Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்க தொப்பை கொழுப்பு மொத்தமா குறைச்சி... நீங்க ஒல்லியா மாற இந்த சூடான பானங்களை குடிச்சா போதுமாம்!
இஞ்சி மற்றும் எலுமிச்சையில் உள்ள ஜிஞ்சரால், சிட்ரிக் அமிலம் மற்றும் தேன் ஆகியவை தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த தேநீரில் துளசி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பை குறைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், ஹார்மோன் மாற்றம் என பல்வேறு விஷயங்களால், உங்கள் தொப்பை கொழுப்பு அதிகரிக்கலாம். மேலும் அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசைகள், திருவிழாக்கள் அல்லது முடிவற்ற விருந்துகள் மீதும் நீங்கள் குற்றம் சாட்டலாம். பொதுவாக குளிர்காலம் நம்மை மிகவும் சோம்பலாக உணர வைக்கும். இதன் காரணமாக உடல் செயல்பாடுகள் குறைந்து, உங்க எடை அதிகரிக்கலாம். அதனால், குளிர்காலத்தில் உங்கள் உடல் எடையைக் குறைப்பது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். ஆனால், அந்த கடினமான பணியை எளிதான வழிகள் மூலம் நீங்கள் குறைக்கலாம்.

உங்கள் வயிற்றை திருப்திப்படுத்தும் மற்றும் முழுமையாக உணர வைக்கும் சில சூடான பானங்கள் உள்ளன. அவை ஆறுதல் தருவது மட்டுமல்ல, சரியான முறையில் உட்கொள்ளும் போது உங்கள் எடையைக் குறைக்கவும் உதவும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சில குளிர்கால பானங்கள் உங்கள் தொப்பை கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

டார்க் சாக்லேட் பானம்
இந்த சுலபமான பானத்தை தயாரிக்க, 1 கப் பால் அல்லது பாதாம் பால் அல்லது சோயா பால் இவற்றில் ஏதாவது ஒரு பாலை கொதிக்க வைத்து, 2 டீஸ்பூன் டார்க் சாக்லேட், 2 டீஸ்பூன் இனிக்காத கோகோ பவுடர் சேர்த்து கிளறி விடவும். சுவைக்கு ஏற்றவாறு ஒரு சிட்டிகை ஜாதிக்காய் மற்றும் தேன் சேர்த்து சூடாக அருந்தவும். டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாவர அடிப்படையிலான ஃபிளவனால்கள் நீண்ட நேரத்திற்கு முழுமை உணர்வை உங்களுக்கு வழங்குவதன் மூலம் பசி உணர்வை குறைக்கலாம். இதனால், நீங்கள் அதிகம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், இது வீக்கம், மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் சிறந்த எடை இழப்புக்கு உதவுகிறது. இதை இரவு பானமாக குடித்தால், நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெறலாம்.

இஞ்சி டீ
பண்டைய கால இஞ்சி தேநீர் கொழுப்பு இழப்பு செயல்முறையை துரிதப்படுத்த உதவும். இரண்டு கிளாஸ் தண்ணீரில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை அனைத்து, அதில், துளசி இலைகளைச் சிறிது சேர்த்து, அவற்றை 3 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர், தேநீரை வடிகட்டி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இஞ்சி மற்றும் எலுமிச்சையில் உள்ள ஜிஞ்சரால், சிட்ரிக் அமிலம் மற்றும் தேன் ஆகியவை தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது. இந்த தேநீரில் துளசி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த பானத்தை காலை அல்லது அதிக உணவுக்குப் பிறகு உட்கொள்ளலாம்.

புதினா மற்றும் எலுமிச்சை தேநீர்
புதினா இலைகள் மற்றும் எலுமிச்சை துண்டுகளை தண்ணீரில் கொதிக்க வைத்து இந்த எளிய தேநீரை தயாரிக்கலாம். தேநீரை வடிகட்டி தேனுடன் கலக்கவும். இந்த டீயை குடிப்பதால், செரிமானம், இன்சுலின் மேலாண்மை, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்களுக்கு கிடைக்கும். மேலும், இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தொப்பை கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இந்த பானத்தை பருகுவதற்கு சிறந்த நேரம் அதிகாலை தான். ஏனெனில் இது நச்சுகளை வெளியேற்றவும், ஒருவரை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இலவங்கப்பட்டை ஏலக்காய் தேநீர்
இந்த எளிதான தேநீரைத் தயாரிக்க, 2 கப் தண்ணீரை எடுத்து, 2 பச்சை ஏலக்காய்களுடன் 1 அங்குல இலவங்கப்பட்டையை சேர்க்கவும். தேநீரை கொதிக்கவைத்து, பின்னர், வடிக்கட்டி அருந்துங்கள். இலவங்கப்பட்டை உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சிறந்த எடை மேலாண்மைக்கும் இன்சுலின் ஒழுங்குமுறை மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஏலக்காய் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் உணவுக்குப் பின் சாப்பிடுவது கொழுப்பு எரியும் செயல்முறையை துரிதப்படுத்த உதவும்.



Click it and Unblock the Notifications