For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளி சமயத்தில் உங்கள் கலோரிகளை எப்படி குறைக்கச் செய்யலாம்?

தீபாவளி நமது பழமையான அதே சமயம் விமர்சையாக செய்யப்படும் பண்டிகைகளில் ஒன்று. பட்டாசு புது துணிகளோடு, விதவிதமான இனிப்புகளையும் சாப்பிடுவோம். அந்த சமயத்தில் உடல் எடை ஏறாமால் எப்படி காப்பது?

|

இத்தனை நாளாய் பிரயத்தனப்பட்டு இப்போதான் ஒருவழியா உடல் எடையை குறைச்சிருப்பீங்க.

தீபாவளி சீஸன் வந்தாலே பட்டாசு மட்டுமில்லாம புதிய இனிப்பு பலகாரங்களும் சராமாரியா வயிற்றுக்குள் போகும். அதோடு உறவினர் நண்பர்க்ள் வீட்டுக்குச் செல்லும்போது, விதவிதமான இனிப்புகள் உணவுகள் சாப்பிடுவோம்.

Ways to cut down calories on Diwali

ஒரு நாள்தானே என்று ஒரு வாரம் வரை தொடரும். திடீரென கண்ணாடியை பார்த்தால் உடல் எடை கூடியிருக்கும்.

இப்போது திட்டமிடுதல்தான் முக்கியம் . இந்த சமயத்தில் உடல் எடை அதிகரிக்காமல் என்ன செய்ய வேண்டுமென தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிக நார்சத்து கொண்ட உணவுகள் :

அதிக நார்சத்து கொண்ட உணவுகள் :

இந்த சமயங்களில் எங்கு சென்றாலும் நார்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். இதனால் நீங்கள் அதிக இனிப்பு வகைகளை சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் தடுக்கப்படும்.

குறைவான கலோரி கொண்ட இனிப்பு வகைகள் :

குறைவான கலோரி கொண்ட இனிப்பு வகைகள் :

இனிப்பு வகைகளில் அதிகம் எண்ணெயில் செய்யப்படாத லட்டு வகைகள். தேங்காய் பர்ஃபி போன்றவற்றை தேடி சாப்பிடுங்கள். ஜிலெபி, குலாப் ஜாமூன் போன்ற எண்ணெயில் பொறிக்கப்படும் உணவுகள் அதிக கலோரியை தரும்.

 குறைவான அளவு சாப்பிடுங்கள் :

குறைவான அளவு சாப்பிடுங்கள் :

இனிப்பை பார்த்டவுடன் அண்டாவை போல் வாய் திறந்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். இதனை தவிர்க்க சில இனிப்புகளை சாப்பிட்டவுடனே அதிகம் நீர் குடியுங்கள். வயிற்றை நிறைத்து விடும். மேற்கொண்டு சாப்பிடத் தோணாது. இவ்வாறு கலோரியை குறைக்கலாம்.

குளிர்பானங்கள் :

குளிர்பானங்கள் :

சிலர் ஜீரணமாக சோடா கலந்த குள்ர்பானங்களை குடிப்பார்கள் . ஆனால் இந்த பானங்கள் அதிக கலோரியை தரும் பொருட்களை சேர்ந்திருக்கும். ஆகவே சோடா பானங்களை தவிருங்கள்.

நிறைய காய்கறிகள் :

நிறைய காய்கறிகள் :

நிறைய காய்கறிகள் சாப்பிடுங்கள். பச்சையாகவோ அரை வேக்காடாகவோ சாலட் செய்து சாப்பிட்டால் உடல் எடை இந்த சமயத்தில் ஏறாமல் காக்கலாம். குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடு

 நீர் :

நீர் :

தீபாவளி சமயத்தில் அதிக நீர் குடியுங்கள். நாம் சாப்பிடும் இனிப்புகள் பலகாரங்கள் சரியாக ஜீரணிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways to cut down calories on Diwali

Diwali is the biggest festival in India. we fire the cracks and celebrate along with many different kind of sweets. In this occasion, the ways to to cut down calories are said here.
Story first published: Monday, October 24, 2016, 22:29 [IST]
Desktop Bottom Promotion