Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆரோக்கியம் தரும் வெள்ளை நிற காய்கறிகள்

காளான்கள்
பூஞ்சை இனத்தை காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும். காளான்களில் அதிக புரதம் காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம், மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும்.இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
உருளைக்கிழங்கு, வாழைப்பழம்
உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.
வெள்ளைப்பூண்டு
வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டி பங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவர் வைட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன.
டர்னிப்
பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் வைட்டமின் சி சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சாலட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications