Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க உணவுல 'இந்த' 7 காயை சேர்க்கவே கூடாதாம்... இல்லனா இரத்ததுல சர்க்கரை அளவு எக்கச்சக்கமாக ஏறிப்போயிடுமாம்!
Diabetes In Tamil: காய்கறிகள் நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் அன்றாட உணவுகளில் தினமும் ஒன்று அல்லது இரண்டு காய்கறிகளை நாம் இணைத்துக்கொள்கிறோம். சில ஆரோக்கியமான காய்கறிகள் கூட உங்கள் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், சில காய்கறிகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அமைதியாக அதிகரிக்கும். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அவை இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் உணவு குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

எந்த காய்கறிகள் உங்கள் சர்க்கரை அளவை ரகசியமாக அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எது சிறந்த காய்கறி தேர்வாக இருக்காது என்பது பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உருளைக்கிழங்கு
இந்திய உணவுகளில் பெரும்பாலும் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் சுவை காரணமாக பெரும்பலான உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளில் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. அவை உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன மற்றும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கும். ஆதலால், மிதமான அளவு மட்டுமே உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இனிப்பு உருளைக்கிழங்கு
வழக்கமான உருளைக்கிழங்கை விட இனிப்பு உருளைக்கிழங்கு ஆரோக்கியமான விருப்பமாக இருந்தாலும், அவை கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. ஆதலால், இனிப்பு உருளைக்கிழங்கை தவிர்ப்பது அல்லது மிதமாக உட்கொள்ளவது நல்லது.
சேனைக்கிழங்கு
சேனைக்கிழங்கு மற்றொரு மாவுச்சத்து வேர் காய்கறியாகும். இது இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற இரத்த சர்க்கரை அளவுகளில் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும். ஆதலால், பொதுவாக கிழங்கு வகைகளை மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இவை, உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தும்.
டாரோ ரூட்
டாரோ ரூட் என்று அழைக்கப்படும் சேப்பங்கிழங்கு மாவுச்சத்து நிறைந்தது. இவை உங்கள் இன்சுலின் அளவையும் இரத்த சர்க்கரை அளவையும் பாதிக்கும். எனவே, இதை மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
பீட்ரூட்
பீட்ரூட் இயற்கையாகவே இனிப்பு சுவையை கொண்டிருக்கிறது. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடிய சர்க்கரை அளவுகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், பீட்ரூட் சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். ஆனால், ஆரோக்கியமான காய்கறியாக இருந்தாலும், இதை மிதமாக உட்கொள்வது நல்லது.
கேரட்
கேரட் பொதுவாக இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இயற்கை சர்க்கரைகளைக் கொண்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் காய்கறியாக கேரட் உள்ளது. பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேரட்டை, மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன.
பட்டாணி
பச்சை பட்டாணி மாவுச்சத்து நிறைந்தது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. இருப்பினும், பட்டாணியை அதிகளவு உட்கொள்ளும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்துடன் மாவுச்சத்தும் உள்ளது. பச்சை வாழைப்பழம் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இருப்பினும், இது சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஆதலால், கவனமாக இருக்க வேண்டும்.
சில காய்கறிகள் சர்க்கரை அளவை எவ்வாறு பாதிக்கிறது?
மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகள் அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் காரணமாக இரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். இவற்றை உட்கொள்ளும் போது, கார்போஹைட்ரேட்டுகள் செரிமான அமைப்பில் சர்க்கரையாக (குளுக்கோஸ்) உடைக்கப்படுகின்றன. இதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, கிழங்கு மற்றும் பட்டாணி போன்ற காய்கறிகளில் அதிகளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இது இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே, அதைத் தவிர்ப்பது அல்லது மிதமாக உட்கொள்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
