Latest Updates
-
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
சர்க்கரை நோயாளிகளே! கரும்பு சாப்பிட்டா 'சுகர்' அதிகரிக்கும்-ன்னு பயப்படுறீங்களா? இந்த டீயை ஒரு கப் குடிங்க...
Diabetes Control Tips In Tamil: இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். மேலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால், பலரும் வீடுகளில் சர்க்கரை பொங்கல், கரும்பு போன்றவற்றை சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரித்துவிடும். சர்க்கரை பொங்கலைக் கூட அளவாக சாப்பிட்டு நிறுத்திவிட முடியும். ஆனால் கரும்பை சாப்பிடாமல் இருப்பது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் கரும்பு மிகவும் இனிப்பாக இருப்பதால், எங்கு அதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரித்துவிடுமோ என்ற பயம் தான்.

நிறைய பேருக்கு சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கும். நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் கரும்பை சாப்பிடலாம். ஆனால் அதை அளவாக, ஆசைக்கு சிறிது சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால் பின் அவதிப்பட வேண்டியிருக்கும்.
பண்டிகை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு இனிப்பை உட்கொண்ட பின்னரும், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஒருசில மூலிகை பானங்களைக் குடிப்பது நல்லது. இதனால் இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த மூலிகை பானங்களைக் காண்போம்.
க்ரீன் டீ
க்ரீன் டீ ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானமாகும். க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிந்தாலும், அதில் உள்ள உட்பொருட்கள் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பண்டிகை காலத்தில் இனிப்பு பொருட்களை உட்கொண்ட பின் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்தால் சுகர் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
ப்ளாக் டீ
ஆம், சிம்பிளான ப்ளாக் டீ கூட இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்தும். எனவே பண்டிகை காலத்தில் கண்ட டீயைக் குடிப்பதற்கு பதிலாக ப்ளாக் டீயைத் தயாரித்து குடித்து வந்தால், பண்டிகை பலகாரங்களை பயமின்றி சாப்பிடுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் காப்ஃபைன் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பானமாகும். முக்கியமாக இந்த டீ நல்ல நிம்மதியான தூக்கத்தை வழங்கும். ஒருவர் நல்ல தூக்கத்தை தினமும் மேற்கொண்டு வந்தாலே, இரத்த சர்க்கரையையைக் கட்டுப்படுத்தலாம். எனவே இந்த டீயை பகல் வேளையை விட இரவு தூங்குவதற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.
செம்பருத்தி டீ
செம்பருத்தியில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அந்தோசையனின்கள் உள்ளதால், இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான டீயாகும். இந்த டீயைக் குடித்தால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறையும். செம்பருத்தி டீ இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றையும் கட்டுப்படுத்த உதவி புரிகிறது மற்றும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
மஞ்சள் டீ
உங்களுக்கு வேறு எந்த டீயும் குடிக்க பிடிக்காவிட்டால், சுடுநீரில் மஞ்சள் தூளை சேர்த்து கலந்து குடியுங்கள். இந்த மஞ்சள் டீ உயர் இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நேயெதிர்ப்பு அழற்சி பண்புகளை போன்றவை இருப்பதோடு, இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது. இது உயர் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் சிறந்தது. சில ஆய்வுகளில் இந்த மஞ்சள் டீ சர்க்கரை நோயாளிகள் சந்திக்கும் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுத்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவது தெரிய வந்துள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள டீ வகைகள் அனைத்துமே இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவும் டீக்களாகும். பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த டீக்களை குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications