Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Dengue: பெங்களூருவில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்: அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? அதை தடுப்பது எப்படி?
Dengue Cases Rise In Bangalore: இந்தியாவின் தெற்கு பகுதியில் குறிப்பாக கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், ஆங்காங்கு நீர் தேங்க ஆரம்பித்து, கொசுக்களால் பரவும் பலவிதமான நோய்த்தொற்றுக்களும் பரவ தொடங்கிவிட்டன. குறிப்பாக இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்காத டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதுவும் கேரளா மற்றும் கர்நாடகாவில் டெங்கு வழக்குகள் அதிகமாக பதிவாகி வருகின்றன.
அதுவும் பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக டெங்கு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம். இப்படி டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்ப்பட்டவருக்கு சிகிச்சை அளிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா கேட்டு கொண்டுள்ளார்.

இது தவிர வீடு வீடாக ஆய்வுகளை மேற்கொள்வது, டெங்கு குறித்து விழிப்புணர்வை மக்களிடையே உண்டாக்குவது போன்றவற்றை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இது தவிர, டெங்கு பாதிப்பு கோவாவில் உள்ள பாலோம் பகுதியிலும் அதிகரித்து வருகிறது. அதேப் போல் கேரளாவிலும் டெங்குவால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டெங்கு என்றால் என்ன?
டெங்கு என்பது கொசுக்களால் பரவக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இத்தொற்று பெரும்பாலும் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் அதிகம் பரவும். மிதமான டெங்கு காய்ச்சல் உடல் வெப்பத்தை அதிகரிக்கும். அதுவே தீவிர நிலையிலான டெங்கு காய்ச்சலை டெங்கு இரத்தக்கசிவு காய்ச்சல் என்றும் அழைப்பது. இது உடலில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும் மற்றும் திடீரென்று இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஏன் சில சமயங்களில் மரணத்தை கூட உண்டாக்கும்.
டெங்கு காய்ச்சலுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை. அறிகுறிகளைப் பொறுத்தே இதுவரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆரம்பத்திலேயே அறிகுறிகளை அறிந்து சிகிச்சை மேற்கொண்டால் நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம்.
டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள்
டெங்குவால் பாதிக்கப்பட்ட நிறைய பேருக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. அப்படியே அறிகுறிகள் தெரிந்தாலும், நிறைய பேர் அவற்றை சாதாரண பிரச்சனைகளை நினைத்து அசால்ட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். பொதுவாக டெங்குவின் அறிகுறிகளானது டெங்குவை உண்டாக்கும் கொசு கடித்ததும் தெரியத் தொடங்கும். வழக்கமாக 104 டிகிரி F-ல் காய்ச்சல் அடிக்கும். இது தவிர பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும்.
* தலைவலி
* தசை, மூட்டு அல்லது எலும்பு வலி
* குமட்டல்
* வாந்தி
* கண்களுக்கு பின் வலி
* வீங்கிய சுரப்பிகள்
* அரிப்புகள்
பெரும்பாலும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்தில் குணமாகிவிடுவார்கள். ஆனால் சில நேரங்களில் அறிகுறிகள் தீவிரமாக இருந்தால், உயிருக்கே ஆபத்தாகலாம். டெங்கு தீவிரமாகும் போது, இரத்த நாளங்கள் சேதமடைந்து, இரத்தக்கசிவு ஏற்படும். மேலும் இரத்த ப்ளேட்லெட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கும். இதன் விளைவாக உள்ளுறுப்பு இரத்தக்கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.
டெங்கு தீவிரமாக இருந்தால் வெளிப்படும் எச்சரிக்கை அறிகுறிகள்
டெங்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோசமாக நிலையில் இருந்தால், பின்வரும் அறிகுறிகள் தெரியும். அதுவும் இந்த அறிகுறிகளானது கொசு கடித்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாளில் காய்ச்சல் சரியாகிய பின் தெரியத் தொடங்கும். அவை பின்வருமாறு:
* கடுமையான வயிற்று வலி
* தொடர்ச்சியாக வாந்தி
* ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து இரத்தக்கசிவு
* சிறுநீரில் அல்லது மலத்தில் இரத்தம்
* இரத்தம் கலந்த வாந்தி
* தோலின் அடிப்பகுதியில் கீறல்களுடன் இரத்தக்கசிவு
* வேகமாக சுவாசிப்பது
* உடல் சோவு
* அமைதியின்மை அல்லது அதிக எரிச்சல் கொள்வது
டெங்குவை தடுக்கும் வழிகள்
* கொசுக்கள் கடிக்காமல் இருக்க கைகள், கால்களை முழுமையாக மறைக்கும்படியான ஆடைகளை அணிய வேண்டும்.
* கொசு மருந்துகளை கை, கால்களில் அல்லது உடுத்தும் ஆடைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.
* வீட்டினுள் கொசுக்கள் வராத வகையில் ஜன்னல் மற்றும் வாசல் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல், குப்பைகள் சேராமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications