Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Health Benefits Of Curry Leaves Water In Tamil: தினசரி சமையலில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. என்ன தான் கறிவேப்பிலை உணவில் சேர்த்தாலும், அதை குப்பையாக நினைத்து நிறைய பேர் தூக்கி எறிந்து விடுகின்றனர். கறிவேப்பிலை சமையலில் வெறும் மணத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, அதில் ஏராளமான இன்றியமையாத சத்துக்கள் நிறைந்துள்ளன.
எனவே முதலில் கறிவேப்பிலையை ஒரு குப்பை பொருளாக நினைப்பதைத் தவிர்த்திடுங்கள். மேலும் நிறைய பேர் கறிவேப்பிலை தலைமுடியின் வளர்ச்சிக்கு மட்டும் தான் உதவுவதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கறிவேப்பிலை நாம் நினைத்து பார்க்காத அளவில் பல நன்மைகளை உடலுக்கு வழங்கக்கூடியது.

அதுவும் கறிவேப்பிலையை சமையலில் சேர்ப்பதைத் தவிர, அந்த கறிவேப்பிலையின் நீரை காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் பல அற்புதங்கள் நிகழும். இப்போது தினமும் காலையில் காபி, டீ-க்கு பதிலாக கறிவேப்பிலை நீரைக் குடித்து வந்தால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. செரிமானம் மேம்படும்
கறிவேப்பிலையில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. எனவே கறிவேப்பிலை நீரை காலையில் குடித்து வந்தால், அது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.
2. இரத்தம் சுத்தமாகும்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. அதற்கு அந்த கறிவேப்பிலை நீரை காலையில் எழுந்ததும் காபி, டீ-க்கு பதிலாக குடிக்க வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடலும் சுத்தமாவதோடு, கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
3. முடி வளர்ச்சி அதிகரிக்கும்
கறிவேப்பிலையில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே தான் கறிவேப்பிலை சாப்பிடுவதால் தலைமுடி நன்கு கருகருவென்று வளர்கிறது மற்றும் முடி நன்கு வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நீங்கள் தலைமுடி அதிகம் உதிர்வதை உணர்ந்தால், கறிவேப்பிலை நீரை குடிக்கத் தொடங்குங்கள்.
4. சரும ஆரோக்கியம் மேம்படும்
கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இதை உட்கொள்ளும் போது ப்ரீ ராடிக்கல்களால் சருமத்தில் ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது. நீங்கள் நல்ல பொலிவான சருமத்தைப் பெற விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை குடித்து வாருங்கள்.
5. இரத்த சர்க்கரை சீராகும்
கறிவேப்பிலையில் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயாளிகள் காலையில் காபி, டீ-க்கு பதிலாக கறிவேப்பிலை நீரைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
6. எடை இழப்புக்கு உதவும்
கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்த கறிவேப்பிலையை உட்கொள்வது நல்லது. அதுவும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் கறிவேப்பிலை நீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு, வேகமாக உடல் எடையைக் குறைக்கலாம்.
7. நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்
கறிவேப்பிலையில் நார்ச்சத்துக்கு அடுத்தப்படியான வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. அதோடு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் இருப்பதால், இது நோயெதிப்பு மண்டலத்தை வலுவாக்கும். உங்களின் நோயெதிர்ப்பு மண்டலம் ஏற்கனவே பலவீனமா இருந்தால், கறிவேப்பிலை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் ஒரு நல்ல மாற்றத்தை காணலாம்.
8. கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்
முக்கியமாக கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்களுக்கு கறிவேப்பிலையை மென்று சாப்பிட பிடிக்காவிட்டால், கறிவேப்பிலை நீரைக் குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து, இதய பிரச்சனைகளும் தடுக்கப்படும்.
கறிவேப்பிலை நீரை தயாரிப்பது எப்படி?
* ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அந்த சுடுநீரில் கறிவேப்பிலையை சேர்த்து, சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் நீரை வடிகட்டி, வேண்டுமானால் சுவைக்கேற்ப எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications