Latest Updates
-
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..! -
கோயம்பத்தூர் ஸ்டைல் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
உருளைக்கிழங்கை ஒருவாட்டி இந்த பக்குவத்துல வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவில் உள்ள முழு சத்துக்களை பெற வேண்டுமா? அப்ப இப்படி சாப்பிடுங்க.. கூறும் ஹெல்த் கோச்!
மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா? இந்த விதைகளை தினமும் இப்படி சாப்பிடுங்க.. உடனே சரியாகும்...
Constipation Remedies In Tamil: உலகளவில் சுமார் மில்லியன் கணக்கான மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொதுவான செரிமான பிரச்சனை தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், அது தினசரி செயல்பாடுகளை ரிலாக்ஸாக செய்யவிடாமல் மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும்.
குறிப்பாக கோடையில் இந்த மலச்சிக்கல் பிரச்சனை தலைத்தூக்கும். ஏனெனில் கோடையில் கொளுத்தும் வெயிலால் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாமல், மலம் இறுக்கமடையும். இது தவிர நார்ச்சத்து இல்லாத ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிடும் போது, இப்பிரச்சனை இன்னும் தீவிரமாகிறது.

இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு என்ன தான் ஏராளமான மருந்துகள் கடைகளில் விற்கப்பட்டு வந்தாலும், இந்த மருத்துகளை பயன்படுத்தி தீர்வு கண்டால், பின் அதுவே பழக்கமாகிவிடும். எனவே மலச்சிக்கல் பிரச்சனைக்கு முடிந்த வரை இயற்கை வழியில் தீர்வு காண்பதே நல்லது. அதற்கு அதிகப்படியான நீரை தினமும் குடிப்பதைத் தவிர, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
அதுவும் ஒருசில விதைகளை ஒருவர் தினமும் உட்கொள்ளும் போது, அதில் உள்ள நார்ச்சத்துடன் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணத்தைப் பெறலாம். இப்போது எந்த விதைகள் எல்லாம் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது மற்றும் அவற்றை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த ஆளி விதைகளை தினமும் உட்கொள்ளும் போது, அது இறுக்கமடைந்த மலத்தை மென்மையாக்கி, எளிதில் மலக்குடல் வழியே வெளியேற்ற உதவுகிறது. அதற்கு ஆளி விதைகளை அப்படியே சாப்பிடாமல், அரைத்து பொடி செய்து, தயிர், ஸ்மூத்தி, ஓட்ஸ் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இதனால் மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
சியா விதைகள்
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்க உதவும் மற்றொரு விதை தான் சியா விதைகள். இந்த விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வளமான அளவில் உள்ளன. இந்த விதைகளை உட்கொள்ளும் போது, அவை மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். அதற்கு சியா விதைகளை நீரில் ஊற வைத்து, பின் அதை எலுமிச்சை ஜூஸ், சர்பத் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
எள்ளு விதைகள்
எள்ளு விதைகளில் நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. இந்த எள்ளு விதைகளை தினசரி உணவில் சேர்க்கும் போது, அது குடலியக்கத்தை சீராக்க உதவி புரிந்து, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, எள்ளு விதைகள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் லிக்னன் என்னும் கலவைகளை கொண்டுள்ளன. இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இந்த விதைகளை சாலட்டுகள் மற்றும் ஒருசில உணவுகளுடன் சேர்த்து தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சூரிய காந்தி விதைகள்
சூரிய காந்தி விதைகள் சுவையானது மட்டுமின்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த விதைகளில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுவதோடு, மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் அளிக்கின்றன. கூடுதலாக இந்த விதைகளில் உள்ள மக்னீசியம், மலமிளக்கியாக செயல்படுவதோ, செரிமான பாதையில் உள்ள தசைகளை ரிலாக்ஸடையவும் செய்கின்றன. எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் போது, சூரிய காந்தி விதைகளை வாங்கி ஸ்நாக்ஸ் நேரத்தை சாப்பிடுங்கள். இதனால் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளிலும் நார்ச்சத்து, புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புக்கள், மக்னீசியம் போன்றவை அதிகமாக உள்ளன. இவை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், குடலியக்கத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை மலத்தை மென்மையாக்கி, எளிதில் வெளியேற்ற உதவி புரிகின்றன. இப்படிப்பட்ட பூசணி விதைகளை சூப், சாலட், தயிர் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்துமே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவித்தாலும், தினமும் போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும். ஏனெனில் உடல் போதுமான நீரேற்றத்துடன் இருந்தால் தான், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் மற்றும் செரிமான செயல்பாடுகளும் சீராக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications