மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழங்களை காலையில் சாப்பிடுங்க..

Constipation Remedies: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே வேளையில் ஒருவரது குடலியக்கமும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவரது குடலியக்கம் ஆரோக்கியமாக நடைபெற்றால் தான், உடலில் இருந்து கழிவுகள் தினமும் சரியாக வெளியேற்றப்பட்டு, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரான குடல் இயக்கம் என்பது உடல் மற்றும் மனதிற்கு பல நன்மைகளை வழங்கும் ஒரு அத்தியாவசிய உடல் செயல்பாடு ஆகும். ஆனால் இன்று நிறைய பேர் மோசமான குடலியக்கத்தால் மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கின்றனர். சொல்லப்போனால், உலகில் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல்.

Constipation Gastroenterologist Lists 5 Fruits That Make You Poop Everyday

மலச்சிக்கலானது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு மோசமான ஆரோக்கிய பிரச்சனையில் ஒன்றாகும். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், பின் நிலைமை தீவிரமாகிவிடும். ஃபுளோரிடாவைச் சேர்ந்த இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலச்சிக்கல், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி அல்லது தினமும் காலையில் மலம் கழிப்பதில் உள்ள சிரமத்திற்கு, பழங்களை தினசரி உணவில் சேர்ப்பதன் மூலம் நிவாரணத்தைப் பெறலாம் என்று கூறினார்.

மேலும் பழங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காலை உணவின் போது நார்ச்சத்து நிறைந்த பழங்களை சிறிது உட்கொள்வதன் மூலம், குடலியக்கம் சீராக தூண்டப்படும் மற்றும் மலச்சிக்கலும் தடுக்கப்படும் என்றும் டாக்டர் கூறினார். இது தவிர டாக்டர் ஜோசப் மலம் கழிப்பதை எளிதாக்கவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும், மந்தமான உணர்வைக் குறைக்கவும் உதவும் தனக்கு பிடித்த 5 பழங்கள் குறித்தும் கூறியுள்ளார்.

1. கிவி

முதலாவது கிவி பழம். இந்த கிவி பழம் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த மிகவும் சத்தான பழம். இந்த கிவி பழத்தை தினமும் காலையில் 2 உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கலாம் என்று கூறினார். ஆனால் சிலருக்கு கிவி பழம் அலர்ஜியாக இருக்கும். அத்தகையவர்கள் இப்பழத்தை தவிர்க்க வேண்டும்.

2. மஞ்சள் டிராகன் பழம்

இரண்டாவது மஞ்சள் நிற டிராகன் பழம். இந்த பழம் பிங்க் டிராகன் பழத்தை விட சற்று இனிப்பாக இருக்கும். இந்த பழத்தை தினமும் காலையில் பாதி உட்கொண்டு வந்தாலே, குடலியக்கம் சிறப்பாக நடைபெற்று, மலச்சிக்கல் தடுக்கப்படும் என்று டாக்டர் கூறினார்.

3. பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி போன்றவற்றில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக உள்ளன. மேலும் இப்பழங்களில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. எனவே இந்த பழத்தை சிறிது காலை உணவாக உட்கொண்டாலும், மலச்சிக்கலை தடுக்கலாம்.

4. ஆப்பிள்

ஆப்பிளில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும் என்று டாக்டர் ஜோசப் கூறினார்.

5. பேரிக்காய்

பேரிக்காயில் சார்பிட்டால் என்னும் இயற்கை சர்க்கரை ஆல்கஹால் உள்ளது. மேலும் இது இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கும் என்று டாக்டர் கூறினார்.

எனவே நண்பர்களே! நீங்கள் மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், காலை உணவில் மேலே கொடுக்கப்பட்டுள்ள டாக்டர் கூறிய பழங்களை உங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்து, உடனடி நிவாரணத்தைப் பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion