Latest Updates
-
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? அப்ப இந்த காய்கறிகளை அதிகமா சாப்பிடுங்க.. தினமும் நல்லா ப்ரீயா போகும்..
Foods For Constipation: நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? மலச்சிக்கல் பிரச்சனை இருப்பதால் உங்களால் சகஜமாக இருக்க முடியவில்லையா? எப்போதும் ஒருவித அசௌகரியத்துடன், எதிலும் கவனம் செலுத்த முடியாமல், ஒருவித மன அழுத்தத்துடனேயே இருக்கிறீர்களா? அப்படியானால் முதலில் அந்த மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும் வழிகளை கண்டறிந்து, உடனே அதை சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
ஏனெனில் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், முதலில் குடலியக்கம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி குடலியக்கம் சிறப்பாக இருந்தால் தான், நமது உடலில் சேரும் கழிவுகள் தினமும் சரியாக வெளியேற்றப்படும் மற்றும் நாள் முழுவதும் சிறப்பாக செயல்படவும் முடியும்.

மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்க வேண்டுமானால், முதலில் நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நார்ச்சத்து பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் நிறைந்துள்ளன. அதுவும் குறிப்பிட்ட காய்கறிகளில் இந்த நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளன. இது தவிர குடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பிற சத்துக்களும் நிரம்பியுள்ளன.
அந்த காய்கறிகளை ஒருவர் தங்களின் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது. இப்போது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கி, தினமும் மலத்தை சிரமமின்றி வெளியேற்ற எந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
1. பசலைக்கீரை
கீரைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருப்பதை அனைவரும் அறிவோம். குறிப்பாக பசலைக்கீரையில் நார்ச்சத்து, அதுவும் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலத்தை தேக்கி, குடலின் வழியே எளிதில் வெளியேற்ற உதவுகிறது. மேலும் பசலைக்கீரையில் மக்னீசியம் என்னும் கனிமச்சத்து உள்ளது. இது செரிமான பாதையின் தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவி புரிந்து, கழிவுகளை எளிதில் வெளியேற்ற உதவுகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது நல்லது.
2. கேரட்
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் கரோட்டீன் அதிகம் உள்ளன. அதே சமயம் இந்த கேரட்டில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களும் உள்ளன. இவை செரிமானத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள கரையாத நார்ச்சத்து மலத்தை தேக்கவும், கரையக்கூடிய நார்ச்சத்து நீரை உறிஞ்சவும் உதவி புரிந்து, மலம் எளிதில் குடலின் வழியே பயணிக்க உதவுகிறது. எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், கேரட்டை தங்களின் தினசரி உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கலும் தடுக்கப்படும்.
3. ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் காணப்படும் ப்ராக்கோலியை தற்போது மார்கெட்டுகளில் அதிகம் பலரும் காணலாம். ப்ராக்கோலி நார்ச்சத்து மற்றும் பிற சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான காய்கறி. இதில் கரையாத நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. இது மலத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் உடலில் இருந்து கழிவுகளை விரைவாக வெளியேற்ற உதவுகிறது. அதோடு ப்ராக்கோலியில் காணப்படும் சேர்மங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. எனவே இப்படிப்பட்ட ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதோடு, ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துங்கள்.
4. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மிகவும் சுவையானது மட்டுமின்றி, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளதால், குடலியக்கம் சிறப்பாக நடைபெறும். அதோடு இதில் நீர்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. எனவே இந்த கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து வர, மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
5. முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. எனவே இந்த முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், குடலியக்கம் சிறப்பாக நடைபெறும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. ஆகவே மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்தால், அதைத் தடுக்க முட்டைக்கோஸை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications