Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
மாரடைப்பை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கணுமா? இந்த பானங்களை காலையில குடிங்க போதும்...
Cholesterol Lowering Drinks In Tamil: கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகு போன்ற பொருள். இது உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் பொருள். பலரும் கொலஸ்ட்ராலை கெட்டதாக நினைக்கலாம். ஆனால் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு கொலஸ்ட்ரால் மிகவும் இன்றியமையாதது.
உதாரணமாக, இது செல் சவ்வுகளை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் செரிமான மண்டலமானது கொலஸ்ட்ராலைப் பயன்படுத்தி பித்த நீரை உற்பத்தி செய்கிறது. இது தவிர கொலஸ்ட்ரால் வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

இப்படிப்பட்ட கொலஸ்ட்ராலை தேவையான அளவில் உடலே உற்பத்தி செய்யும். இந்நிலையில் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, ஒரு கட்டத்தில் அது தேங்கி இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, பக்கவாதம் அல்லது மாரடைப்பை உண்டாக்கும்.
உடலில் தேங்கியுள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க பல்வேறு பானங்கள் உதவி புரிகின்றன. அந்த பானங்களைக் குடித்து, உடற்பயிற்சிகளை செய்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கலாம். இப்போது அந்த பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
ஓட்ஸ் பால்
ஓட்ஸில் பீட்டா க்ளுக்கன்கள் உள்ளன. இவை குடலில் உள்ள உப்புகளுடன் கலந்து கொலஸ்ட்ராலை உறிஞ்சுவதைக் குறைக்கிறது. சிறப்பான பலனைப் பெற, ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 3 கிராம் பீட்டா க்ளுக்கன்களை உட்கொள்ள வேண்டும். இந்த அளவு பீட்டா க்ளுக்கன்கள் 3 கப் ஓட்ஸ் பாலில் உள்ளன. எனவே கொலஸ்ட்ராலைக் குறைக்க இந்த ஓட்ஸ் பாலை வாங்கி குடியுங்கள்.
ஹாட் சாக்லேட்
ஹாட் சாக்லேட்டில் கொக்கோ உள்ளன. இந்த கொக்கோவில் ப்ளேவோனால்கள் என்னும் ஒரு வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. ஆய்வுகளின் படி, ப்ளேவோனால்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்தும்.
மேலும் கொக்கோவில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகின்றன. ஆகவே உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க நினைத்தால், ஹாட் சாக்லேட் பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.
ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்
நீங்கள் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் குறைக்க விரும்பினால், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்களைக் குடியுங்கள். ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டிலும் பெக்டின்கள் உள்ளன. இது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
எனவே உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்கக்கூடாது என்று விரும்பினால் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள். முக்கியமாக ஜூஸைத் தயாரித்து அதை வடிகட்டாமல் குடியுங்கள். ஏனெனில் அதன் தோலில் தான் சத்துக்கள் அதிகமாக உள்ளன.
தக்காளி ஜூஸ்
தக்காளியில் லைகோபைன் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பொருள் உள்ளன. அதுவும் தக்காளியை அரைத்து ஜூஸ் வடிவில் குடிக்கும் போது, அதில் லைகோபைன் அளவு இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக கெட்ட கொலஸ்ட்ரால் இன்னும் வேகமாக குறையும்.
புதினா டீ
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளதா? அந்த கொலஸ்ட்ராலை எளிய வழியில் குறைக்க வேண்டுமா? அப்படியானால் புதினா டீயை குடியுங்கள். இது பித்தநீர் உற்பத்தியை அதிகரிக்க, உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை சிறப்பாக பயன்படுத்துகிறது. இதன் விளைவாக உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. இந்த டீ தயாரிக்க 4-5 புதினா இலைகளை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.
இஞ்சி டீ
உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரியும் ஒரு மூலிகை டீ தான் இஞ்சி டீ. பெரும்பாலானோர் இஞ்சி டீ தொண்டை புண், தொண்டை கரகரப்பு போன்றவற்றை மட்டும் தான் சரிசெய்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
அதுவும் இஞ்சி டீ குடிக்கும் போது, நற்பதமான இஞ்சியை பயன்படுத்துவதற்கு பதிலாக இஞ்சி பொடியை சுடுநீரில் கலந்து குடியுங்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க வேண்டாம். இல்லாவிட்டால், அது அஜீரண கோளாறை உண்டாக்கிவிடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications