Latest Updates
-
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
பச்சை சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
சிக்கன் Vs மீன் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?
இன்று உலகில் பெரும்பாலான மக்கள் தங்களின் அதிகரிக்க உடல் எடையைக் குறைக்க டயட்டையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி டயட்டை மேற்கொள்ளும் போது, அசைவ பிரியர்களின் மனதில் எழும் ஒரு கேள்வி, சிக்கன், மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை உணவில் சேர்க்கலாமா என்பதாகவே இருக்கும்.
இவற்றில் மட்டன் கொழுப்புக்கள் அதிகம் என்பதால், அவற்றை டயட்டில் இருக்கும் போது தவிர்ப்பதே நல்லது. ஆனால் சிக்கன், மீன் ஆகிய இரண்டுமே உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை கொண்டவை. முக்கியமாக புரோட்டீனை அதிகம் கொண்டவை. எனவே இவ்விரண்டில் உடல் எடையைக் குறைக்க எது சிறந்தது, எவற்றை உட்கொள்ளலாம் என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

க்ரில்டு வகை உணவுகளே சிறந்தது
சிக்கன், மீன் என எதுவாயினும், அவற்றை எப்படி சமைத்து சாப்பிடுகிறோமோ, அதைப் பொறுத்து தான், உடலுக்கு கிடைக்கவிருக்கும் நன்மைகள் உள்ளன. அதுவும் இவற்றை வறுத்து அல்லது பொரித்து சாப்பிடுவதை விட, க்ரில் செய்து சாப்பிடுவது தான் நல்லது. அப்படி சமைக்கும் போது, அதிலிருந்து அதிகப்படியான கொழுப்புக்கள் வெளியேற்றப்படுகிறது. மேலும் க்ரில் செய்வதற்கு குறைவான எண்ணெயே தேவைப்படும் மற்றும் இந்த முறையில் சமைக்கும் போது பெரும்பாலான சத்துக்கள் இழக்கப்படுவது தடுக்கப்படுகிறது.
அதோடு எண்ணெயில் பொரிக்கும் இறைச்சிகளை விட, இவற்றில் கலோரிகள் குறைவாக இருக்கும். முக்கியமாக மீன் மற்றும் சிக்கனை க்ரில் செய்யும் போது, அதில் புரோட்டீன் மற்றும் பிற ஊட்டச்சத்தக்கள் அப்படியே இருக்கும். மற்ற இறைச்சிகளை விட இவை இரண்டிலுமே கொலஸ்ட்ரால் மற்றும் சாச்சரேட்டட் கொழுப்புக்கள் குறைவாக உள்ளன. ஆனால் இவற்றில் உடல் எடையைக் குறைக்க க்ரில்டு மீன் நல்லதா அல்லது க்ரில்டு சிக்கன் நல்லதா என்பதை இப்போது காண்போம்.
க்ரில்டு மீன் Vs சிக்கன் - இவற்றில் எது சிறந்தது?
அசைவ உணவுகளை உண்பவர்கள், உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, கடல் உணவுகள் அல்லது சிக்கன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்களும், ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. ஆனால் இவை இரண்டும் ஒன்றையொன்று விட சில நன்மைகளைக் கொண்டுள்ளன.
க்ரில்டு மீன் சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவுமா?
சமீபத்திய ஆய்வு ஒன்றில் இறைச்சிகளிலேயே மீனை உட்கொள்வது ஒருவரது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், மீனை உட்கொள்வது உடல் எடையை வேகமாக குறைக்க ஊக்குவிக்கும்.
ஆய்வு ஒன்றில் 8 வாரம் தொடர்ந்து வேறு எந்த வகை இறைச்சியையும் உட்கொள்ளாமல் மீனை மட்டும் உட்கொண்டு வந்தவர்களின் உடல் எடை கணிசமாக குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுவும் வாரத்திற்கு 3 முறை மீனை உட்கொண்டு வந்தவர்கள் சிறப்பான அளவில் உடல் எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
மீன் வழங்கும் நன்மைகள்
மீனை உணவில் சேர்க்கும் போது, அது உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இவை உடலினுள் உள்ள வீக்கத்தைக் குறைப்பதோடு, மன அழுத்த அளவுகளையும் குறைக்கிறது.
அதோடு இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் பசியெடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது. இருப்பினும் மற்ற இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் பெரும்பாலான மீனில் புரோட்டின் குறைவு. எனவே மீனை உட்கொள்வதாக இருந்தால், புரோட்டீன் அதிகம் நிறைந்த மீனை வாங்கி உட்கொள்ளுங்கள்.
க்ரில்டு சிக்கன் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
அசைவ பிரியர்கள் பெரும்பாலானோரின் விருப்பமான இறைச்சி என்றால் அது சிக்கனாகவே இருக்கும். முக்கியமாக சிக்கன் மற்ற இறைச்சிகளை விட விலைக் குறைவு மற்றும் எளிதில் சமைத்து சாப்பிட ஏற்றது. சிக்கனில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அதில் புரோட்டீன், வைட்டமின் பி6, செலினியம், நியாசின், பாஸ்பரஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஒருவர் வழக்கமாக சிக்கனை உட்கொண்டு வந்தால், அது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, பசியைக் குறைக்கும் மற்றும் தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கும். சிக்கனிலேயே அதன் நெஞ்சுக்கறி தான் மிகவும் சத்தானது. அதுவும் பிராய்லர் சிக்கனை உட்கொள்வதை விட, நாட்டுக் கோழியை உட்கொள்வது நல்லது. அதுவும், சிக்கனின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். ஏனெனில் சிக்கன் தோலில் தான் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும்.
எனவே, நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால், க்ரில்டு சிக்கன் மற்றும் க்ரில்டு மீன் ஆகிய இரண்டுமே எடை இழப்பிற்கு உதவி புரியும். ஆனால் சிக்கனை விட மீனில் ஒருபடி அதிகமாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இருப்பினும் எந்த இறைச்சியை உட்கொள்வதாக இருந்தாலும், அவற்றை அளவாக உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications