Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
நீங்க அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
Bright Yellow Urine In Tamil: நமது உடலில் உள்ள சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து அதிப்படியான நீர் மற்றும் கழிவுப் பொருட்களை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றுகிறது. இப்படியாக வெளியேற்றப்படும் சிறுநீரானது வெள்ளை, வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் மஞ்சள், சிவப்பு வரை சிறுநீரில் உள்ள கழிவுப் பொருட்களைப் பொறுத்து நிறத்தைக் கொண்டிருக்கும்.
அதே சமயம் நாம் வெளியேற்றும் சிறுநீரின் நிறம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சொல்லப்போனால் சிறுநீரின் நிறத்தை பல விஷயங்கள் பாதிக்கலாம். அதில் பெரும்பாலானவை தீங்கு விளைவிக்காதவை. இருப்பினும், சில சமயங்களில் சிறுநீரின் நிறம் ஆரோக்கிய பிரச்சனைகளையும் குறிக்கலாம் என்பது தெரியுமா?

அதில் சிலர் திடீரென்று அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீரை வெளியேற்றுவார்கள். இப்படி அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் என்ன அர்த்தம் என்று நீங்கள் கேட்கலாம். கீழே ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும் என்பதைக் காண்போம்.
அடர் மஞ்சள் நிற சிறுநீருக்கான காரணங்கள்
சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது உடலில் பி வைட்டமின்கள் அதிகம் உள்ளன என்பதன் அறிகுறி. இது ஒரு தீங்கு விளைவிக்கும் நிலை அல்ல. ஒருவேளை ஒருவர் பி வைட்டமின் சப்ளிமெண்ட்டுகளை எடுத்தால், அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும். அதுமட்டுமின்றி சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது சிறுநீரின் செறிவு அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது. செறிவு என்பது கழிவுப் பொருட்களைக் குறிக்கிறது.
முக்கியமாக ஒருவரது சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றால், அவரது உடலில் மிகவும் குறைவான அளவில் நீர் உள்ளது என்று அர்த்தம். அதாவது, உடலில் போதுமான அளவு நீர் இல்லாவிட்டால், கழிக்கும் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
பெரும்பாலும் கோடைக்காலத்தில் இம்மாதிரி அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் கழிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் உங்கள் உடலில் போதுமான அளவு நீர் உள்ளதா என்பதை எளிதில் அறிய வேண்டுமானால், நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறத்தைக் கொண்டே எளிதில் அறியலாம்.
சிறுநீர் எதனால் மஞ்சள் நிறத்தில் உள்ளது?
பலருக்கும் சிறுநீர் எதனால் மஞ்சள் நிறத்தில் உள்ளது மற்றும் சிறுநீருக்கு எது மஞ்சள் நிறத்தை அளிக்கிறது என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கலாம். இந்த மஞ்சள் நிறமானது யூரோக்ரோமில் இருந்து வருகிறது. யூரோக்ரோம் என்பது ஹீமோகுளோவின் முறிவால் வரும் கழிவுப் பொருளாகும். ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரோட்டீன் ஆகும். இது தான் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது.
இந்த இரத்த சிவப்பணுக்களானது ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கில் புதுப்பிக்கப்படுகின்றன. இப்படி புதுப்பிக்க பழைய இரத்த சிவப்பணுக்கள் உடைக்கப்பட வேண்டு. இப்படி உடைக்கப்படும் போது யூரோக்ரோம் என்னும் பொருள் இரத்தத்தில் இருந்து சிறுநீரகங்களால் வடிகட்டப்பட்டு, சிறுநீருக்கு மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன.
எனவே ஒருவரது உடலில் போதுமான நீர் இல்லாமல், உடல் வறண்டு இருந்தால், அவரது சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்நிலையில் அதிகளவு நீரைப் பருகினால், இது சரியாகிவிடும். ஆனால் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் இல்லாமல் வேறு ஏதேனும் வித்தியாசமான நிறத்தில் இருந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் அது உடலில் உள்ள தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications