Latest Updates
-
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இதய நோய் வரக்கூடாதா? அப்ப இந்த 3 உணவுகளுக்கு குட்-பை சொல்லுங்க.. கூறும் இதய டாக்டர்!
Unhealthy Foods For Heart In Tamil: உலகளவில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் இதயம் தொடர்பான பிரச்சனைகளான மாரடைப்பு, கார்டியாக் அரெஸ்ட் போன்றவற்றால் ஏராளமானோர் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்படி இதய பிரச்சனைகளை ஒருவர் சந்திப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.
அதில் மரபணு ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை தடுக்க நம்மால் முடியாது. ஆனால் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் மூலமாக வரக்கூடிய இதய பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும். அதற்கு முதலில் உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அதுவும் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒருசில உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக 3 உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்த் துருவாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் 3 சைடு டிஷ்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார். அந்த 3 சைடு டிஷ்களாவன:
1. ஊறுகாய்
காலம் காலமாக தயிர் சாதத்துக்கு ஊறுகாய் தான் பெஸ்ட் காம்பினேஷகாக நம் முன்னோர்கள் முதற்கொண்டு இன்று வரை உட்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஊறுகாயை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் கூறினார். "1 ஸ்பூன் ஊறுகாயை உட்கொண்டால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றில் நாள்பட்ட சேதத்தை உண்டாக்கும்" என்று டாக்டர் அரவிந்த் கூறினார். எனவே இதுவரை நீங்கள் உங்கள் உணவில் அதிகமாக ஊறுகாயை சேர்த்து வந்தால், அதை தவிர்த்திடுங்கள்.
2. அப்பளம்
இரண்டாவதாக இதய ஆரோக்கியத்தில் சேதத்தை ஏற்படுத்தும் மற்றொரு சைடு டிஷ் தான் அப்பளம். சொல்லப்போனால் பெரும்பாலான வீடுகளில் சாம்பார் செய்தால், சைடு டிஷ்ஷாக அப்பளத்தையும் பொரித்து சாப்பிடும் வழக்கம் இருக்கும். "அப்பளம் என்பது உப்பு அதிகம் நிறைந்தது. இந்த அப்பளத்தை எண்ணெயில் பொரிக்கும் போது, ட்ரான்ஸ் கொழுப்புக்களும் அதிகம் சேர்ந்து, இரத்த நாளங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று டாக்டர் கூறினார். எனவே இதுவரை உங்களின் உணவில் அப்பளத்தை அதிகம் சேர்த்து வந்தால், இனிமேல் தவிர்த்திடுங்கள்.
3. நூடுல்ஸ்
பெரும்பாலானோரது விருப்பமான உணவுகளுள் ஒன்று தான் நூடுல்ஸ். "நீங்கள் சாப்பிடும் நூடுல்ஸ் கூட உப்பு அதிகம் நிறைந்தது தான். அதுவும் ஒரு பாக்கெட் நூடுல்ஸில் ஒருவர் ஒரு நாளைக்கு சாப்பிட வேண்டிய உப்பில் பாதி அளவுக்கு மேல் உள்ளது. இப்படி உப்பு அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வதை கைவிடாவிட்டால், பின் இதயம் உங்களை கைவிட்டுவிடும்" என்று டாக்டர் கூறினார். எனவே இதுவரை அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிட்டு வந்தால், உடனே நிறுத்துங்கள்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று உணவுகளுமே பெரும்பாலான மக்கள் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வரும் உணவுகளாகும். இப்படி உப்பு நிறைந்த உணவுகளை தினமும் எடுத்து வந்தால், பின் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை அதிகரித்து, காலப்போக்கில் இதயம் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட நேரிடும். எனவே நண்பர்களே! இப்படியான உணவுகளை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications