Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஆண்கள் தினமும் 30 நிமிடம் கார்டியோ பயிற்சிகளை செய்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
Cardio Exercise Benefits For Men In Tamil: தற்போது அதிகப்படியான வேலைப்பளுவினால் நிறைய பேர் தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றனர். இப்படி தவிர்ப்பதனால் உடலில் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தும் வருகின்றனர் மற்றும் அவர்களின் உடலும் வலுவிழந்து வருகிறது.
ஆனால் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், உடல் நன்கு ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதுவும் தினமும் ஒரு 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைப்பதோடு, உடலும் ஃபிட்டாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சியை மேற்கொண்டால், போதுமான ஓய்வை எடுக்க வேண்டும்.

உடற்பயிற்சிகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் கார்டியோ பயிற்சிகள். இந்த கார்டியோ பயிற்சிகளானது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும் மற்றும் இந்த பயிற்சிகளை மிதமான அளவில் செய்து வந்தாலே ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.
அதுவும் ஆண்கள் இந்த கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளும் போது, உடலளவிலும், மனதளவிலும் நிறைய நன்மைகள் கிடைக்கும். இப்போது ஆண்கள் ஏன் தினமும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.
1. தசை சகிப்புத்தன்மை அதிகரிக்கும்
கார்டியோ பயிற்சிகளானது பளு தூக்கும் பயிற்சிகளைப் போன்று ஒருவரை பருமனடையச் செய்யாது. ஆனால் தசைகளின் சகிப்புத்தன்மையை மேம்படுத்த பெரிதும் உதவி புரியும். இதன் மூலம் நீண்ட நேரம் எவ்வளவு கடினமான வேலைகளையும் திறம்பட செய்ய முடியும். எனவே ஆண்களே உங்களின் தசை சகிப்புத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், கார்டியோ பயிற்சிகளை தினமும் மேற்கொள்ளுங்கள்.
2. சிறந்த மன ஆரோக்கியம்
கார்டியோ பயிற்சிகளானது ஒருவரது மனநிலையை மேம்படுத்தும். அதுவும் இந்த வகையான பயிற்சியானது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் எண்டோர்பின்களை வெளியிட உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி எண்டோர்பின்கள் வெளியிடப்படுவதால், நல்ல நிம்மதியான மற்றும் சீரான தூக்கத்தை மேற்கொள்ள உதவுகிறது. நல்ல தூக்கம் கிடைப்பதன் மூலம் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
3. ஸ்டாமினா அதிகரிக்கும்
கார்டியோ பயிற்சிகள் நுரையீரலின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் குறைவான உடல் சோர்வுடன் வேலைகளை நீண்ட நேரம் சிறப்பாக செய்ய முடிகிறது. உடலானது ஃபிட்டாக இருக்கும் போது, உடலில் ஆற்றல் அளவுகள் அதிகரித்து, நாள் முழுவதும் எவ்வளவு வேலை செய்தாலும் குறைவான உடல் சோர்வையே சந்திக்க நேரிடும்.
4. உடல் எடை பராமரிக்கப்படும்
கார்டியோ பயிற்சிகள் உடலில் கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் எரிக்கப்படுவதோடு, உடல் எடையும் சீராக பராமரிக்கப்படும். இதன் மூலம் உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படும். அதுவும் தினமும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளும் போது உடலின் மெட்டபாலிசம் சீராக இருக்கும்.
5. இதய ஆரோக்கியம் மேம்படும்
தினமும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், இதயம் வலுவடையும், உடலில் இரத்த ஓட்டம் மேம்படும், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதய நோய்களின் அபாயமும் குறையும். முக்கியமாக இந்த வகையான பயிற்சியை தினமும் மேற்கொள்ளும் போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications