Latest Updates
-
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்.. -
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க
இந்த உணவுகளில் ஒன்றை காலையில் சாப்பிடுபவரா நீங்க? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்காம்... ஜாக்கிரதை...!
காலை உணவு பெரும்பாலும் ஒரு நாளின் மிக முக்கியமான உணவாக இருக்கிறது, அன்றைய நாள் எப்படி இருக்கப் போகிறது என்பதை உளவியல்ரீதியாகவும், ஆரோக்கியரீதியாகவும் நிர்ணயிப்பது காலை உணவுகள்தான். இருப்பினும், அனைத்து காலை உணவுகளும் ஆரோக்கியத்தில் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற இயலாது.
ஆரோக்கியமானவை என்று கருதப்படும் சில உணவுகள் உண்மையில் இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த உணவுகள் ஆரோக்கியமானவை என்று புகழப்பட்டாலும், இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

கிரானோலா
கிரானோலா ஒரு சத்தான காலை உணவு விருப்பமாகக் கருதப்பட்டாலும், அதில் சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும். அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளல் இதய நோய் மற்றும் பிற வளர்சிதை மாற்ற நிலைமைளை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகிறது.
சுவையூட்டப்பட்ட தயிர்
ப்ரெஷான பழங்களுடன் காலை உணவாக சுவையூட்டப்பட்ட தயிரை சாப்பிடும் மக்கள் குறிப்பிட்ட அளவில் உள்ளனர். ஆனால், அவை பெரும்பாலும் சர்க்கரைகள் மற்றும் செயற்கை சுவைகளால் நிரப்பப்படுகின்றன, இது தயிரின் புரோபயாடிக்குகள் மற்றும் புரத உள்ளடக்கத்தின் ஆரோக்கிய நன்மைகளை குறைக்கிறது. இதயத்தைப் பாதுகாக்க, ப்ரெஷான பழங்களுடன் இனிக்காத தயிரை சேர்த்து சாப்பிடவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் நிறைந்த காலை உணவில் நிறைவுற்ற கொழுப்புகள், சோடியம் மற்றும் ப்ரிசர்வேட்டிவ்கள் அதிகம் உள்ளன, அவை கொழுப்பு அளவுகள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.
பாட்டில்களில் விற்கும் ஸ்மூத்திஸ்
கடையில் வாங்கப்படும் ஸ்மூத்திஸ் காலையில் ஒரு எளிதான மற்றும் ஆரோக்கியமான விருப்பமாகத் தோன்றலாம், ஆனால் அவற்றில் சர்க்கரைகள், சிரப்கள் மற்றும் பழச்சாறுகள் நிரம்பியுள்ளன, முழு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லை. இயற்கையான பொருட்கள் கொண்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகள் சிறந்த காலை உணவாக இருக்கலாம்.
பேஸ்ட்ரி மற்றும் மஃபின்கள்
பேஸ்ட்ரிகள், மஃபின்கள் மற்றும் இனிப்பு நிறைந்த காலை உணவு ரொட்டிகளில் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம். இதன் வழக்கமான நுகர்வு எடை அதிகரிப்பு, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இறுதியில், இதய ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பாட்டிலில் விற்கப்படும் பழச்சாறுகள்
பழச்சாறுகள் சத்தான காலை உணவாகத் தோன்றலாம், ஆனால் அவை பெரும்பாலும் கூடுதல் சர்க்கரைகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் முழு பழங்களில் காணப்படும் நார்ச்சத்துக்கள் அதில் இல்லை. அதிகப்படியான பழச்சாறு உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டிய காலை உணவுகள்
காலை உணவு உண்மையில் ஒரு அத்தியாவசிய உணவு என்றாலும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சரியான காலை உணவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். மேலே கூறப்பட்ட காலை உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த மற்றும் குறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுப்பது, இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

