Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் உடல் வலிமையாகும் மற்றும் எடை வேகமாக குறையும் தெரியுமா?
பொதுவாகவே காலை மாலை என இருவேளை உடற்பயிற்சி செய்வது நல்லது என பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம் அல்லது புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால் இன்றைய காலத்தில் மார்னிங் ஷிப்ட், ஈவினிங் ஷிப்ட், மற்றும் நைட் ஷிப்ட் என ஷிப்ட் போட்டு செய்யும் நமது வேலை நேரத்தின் காரணமாக வெவ்வேறு நேரத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறோம்.
இல்லத்தரசிகளும் அவர்களின் வீட்டு வேலைப்பளு காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகம் இருப்பதால், அவர்களுக்கு ஏதுவான நேரத்தில் உடற்பயிற்சி செய்கிறார்கள். தற்போதைய சூழலுக்கு ஏற்ப நாமும் காலஓட்டத்திற்கு ஏற்ப ஓடிக்கொண்டிருக்கும் போது, நாம் செய்யும் உடற்பயிற்சி நமக்கு நன்மையை ஏற்படுத்துகிறதா, எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்துகிறது என பார்க்கலாம்.

நீங்கள் கண்ட நேரத்தில் செய்யும் உடற்பயிற்சி உங்கள் உடற்தகுதியை எவ்வாறு பாதிக்கிறது என எப்போதாவது யோசித்திருக்கிறீர்கள்
உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் மேற்கூறியதை போல் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், வாழ்க்கை முறை, மற்றும் தனிப்பட்ட குறிக்கோள்களைப் பொறுத்து அமைகிறது. மக்கள் வெவ்வேறு ஆற்றல் நிலைகள், மற்றும் அட்டவணைகள் போன்றவற்றை கொண்டிருப்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய பதில் இது இல்லை. நிலைத்தன்மை, வழக்கமான நேரத்தில் கடைபிடித்தல், மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் உகந்த உடற்பயிற்சி நேரம் என்ற ஒன்று பாதிக்கபடலாம்.
காலை நேர உடற்பயிற்சியின் நன்மைகளும் தீமைகளும்
காலை நேர உடற்பயிற்சி உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டி, நாள் முழுவதுமான கலோரி எரிப்பிற்கு வழிவகுக்கும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. ஒரு நேர்மறையான மனநிலையை ஊக்குவிப்பதோடு, நாள் முழுவதும் சிறப்பான ஆற்றலை கொடுக்கிறது. மேலும் ஒரு நிலையான வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது, நாளின் பிற்பகுதியில் இருக்கும் நேர அட்டவணையை திட்டமிடுவதற்கான வாய்ப்பில் ஏற்படும் சிக்கலை குறைக்கிறது.
இருப்பினும், காலையில் உங்கள் தசைகள் வார்ம் அப் ஆக அதிக நேரம் ஆகலாம், சரியாக வார்ம் அப் செய்யவில்லை என்றால் காயம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். பிஸியான காலை அட்டவணையில் இருப்பவர்களுக்கு, வொர்க்அவுட்டிற்கான நேரத்தைக் கண்டுபிடிப்பது காலை மிகுந்த சவாலான ஒன்றாக இருக்கும்.
அப்படியென்றால் மதிய நேர உடற்பயிற்சி தான் சிறந்ததா?
சரி தான், ஒரு சிலருக்கு மதிய நேர உடற்பயிற்சி சிறந்ததாக இருக்கலாம்! உடலின் வெப்பநிலை மற்றும் தசைகளின் செயல்பாடுகள் பிற்பகலில் உச்சநிலையில் இருக்கும், இது செயல்திறனை மேம்படுத்துவதோடு, காயம் ஏற்படும் ஆபத்தையும் குறைக்கிறது. பிற்பகல் உடற்பயிற்சிகள் அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யவும் அல்லது குழு வகுப்புகளில் பங்கேற்கவும் உங்களை அனுமதிக்கிறது.
இருப்பினும், பெரும்பாலும் நமது வேலை நேரங்களுக்கு பின் ஜிம்க்கு சொல்லும்போது மக்கள் நெரிசல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் உபகரணங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும் போது, அது ஒட்டுமொத்த உடற்பயிற்சி அனுபவத்தையும் பாதிக்கலாம். ஒரு நாளில் அதிகமாக குவிந்திருக்கும் வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தால் மதிய நேர உடற்பயிற்சிகள் பாதிக்கப்படலாம். இதனால் சிலருக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் கிடைப்பதே சவாலாக இருக்கும்.
மாலை நேர உடற்பயிற்சி
மாலை நேர உடற்பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, நீண்ட நாளின் வேலை பளுவிற்கு பிறகு உடலுக்கு தேவையான ஓய்வெடுக்கும் சூழலை ஏற்படுத்தவும் உதவும். உடலின் வெப்பநிலை மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மாலை நேரத்தில் தொடர்ந்து அதிகரித்து, சிறந்த உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான செயல்திறனை ஏற்படுத்துகிறது.
மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வோர் அதன் தீமைகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தூங்க செல்லும் நேரத்துக்கு நெருக்கமான நேரங்களில் செய்யும் தீவிர உடற்பயிற்சிகள் சில நபர்களுக்கு தூக்கத்தின் தரத்தை பாதிக்கும். ஏனெனில் உடற்பயிற்சி அட்ரினலின் அளவை அதிகரிப்பதால் இந்த அபாயம் ஏற்படுகிறது. மாலை நேர வேலைகள் அல்லது அன்றைய சோர்வு மாலை உடற்பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதை சவாலாக மாற்றலாம்.
க்ரோனோடைப் - அது ஏன் உடற்தகுதிக்கு முக்கியமானது
மக்கள் இயல்பாகவோ அல்லது வேலை போன்ற வெவ்வேறு காரணங்களால் க்ரோனோடைப்பாக வகைப்படுத்தப்படுகிறார்கள். இது விழிப்பு மற்றும் தூக்கம் போன்ற அவர்களின் இயல்பான விருப்பங்களை சார்ந்தது. சில நபர்கள் இயற்கையாகவே காலையில் அதிக விழிப்புடன் இருப்பதால் அவர்களை காலை க்ரோனோடைப்கள் எனவும், மற்றவர்கள் இரவு ஆந்தைகளாக இருப்பதால் மாலை க்ரோனோடைப்கள் எனவும் வகைப்படுத்தப்படுகிறார்கள். உங்கள் க்ரோனோடைப்பிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யும் நேரங்களைத் நெறிப்படுத்திக் கொள்வது செயல்திறனையும் பின்பற்றுதலையும் மேம்படுத்துவதாக அமையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
