Latest Updates
-
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும
வாழைப்பழத்தை தினமும் இந்த நேரத்துல சாப்பிட்டா, பைல்ஸ் பிரச்சனை வராதாம்..
Banana For Piles: மிகவும் வலிமிக்க ஒரு கொடிய பிரச்சனை தான் பைல்ஸ் என்னும் மூல நோய். பைல்ஸ் ஒருவருக்கு வருவதற்கு முக்கியமான காரணமாக இருப்பது நார்ச்சத்து குறைவான உணவுகளை உண்பது மற்றும் போதுமான அளவு நீரை தினமும் குடிக்காமல் இருப்பது தான்.
தற்போது கோடைக்காலம் என்பதால் பைல்ஸ் பிரச்சனை தீவிரமாவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் அதிகப்படியான சூட்டினால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு, மலம் இறுக்கமடந்து மலச்சிக்கல் பிரச்சனையை அதிகம் சந்திக்க நேரிடும். ஒருவர் நீண்ட நாட்களாக மலச்சிக்கலை சந்தித்தால், அது பைல்ஸை உண்டாக்கிவிடும்.

பைல்ஸ் பிரச்சனையை சமாளிக்க பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன. பொதுவாக செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க நார்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதனால் செரிமான மண்டலம் சிறப்பாக செயல்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் சிறப்பான அளவில் இருக்கும். அதில் பைல்ஸை சமாளிக்க உதவும் ஒரு வழி தான் வாழைப்பழங்களை சாப்பிடுவது.
பழங்களில் அனைவரும் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில் விலை குறைவில் கிடைக்கும் ஒரு பழம் தான் வாழைப்பழம். இந்த வாழைப்பழம் மலச்சிக்கலைத் தடுக்கும் சிறந்த பழமாக விளங்குவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். பைல்ஸ் பிரச்சனையின் முதன்மை காரணியாக மலச்சிக்கல் இருப்பதால், பைல்ஸ் பிரச்சனை சரிசெய்ய வேண்டுமானால், முதலில் மலச்சிக்கலைப் போக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு வாழைப்பழங்களை உணவில் தினமும் சேர்க்க வேண்டும்.
வாழைப்பழம் எப்படி உதவுகிறது?
வாழைப்பழம் மலச்சிக்கலைத் தடுக்க உதவும் ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கலால் சிரமப்படும் ஒருவர் வாழைப்பழத்தை உட்கொண்டால், அது எளிதில் மலத்தை வெளியேற்ற உதவி புரியும்.
வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரை ஆன்டி-பயாடிக் பண்புகளைக் கொண்டது. எனவே இதை உட்கொள்ளும் போது அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, பாதிக்கப்பட்ட குடல் பகுதியை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது.
அதுவும் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்ளும் போது, அது ஆசன வாயைச் சுற்றியுள்ள வீக்கம், எரிச்சல், அசௌகரியம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
எப்போது வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்?
பைல்ஸ் பிரச்சனை அல்லது மலச்சிக்கல் உள்ளவர்கள், நன்கு கனிந்த வாழைப்பழத்தை மட்டும் தான் சாப்பிட வேண்டும். நன்கு கனியாத அல்லது பச்சையான வாழைப்பழத்தை உட்கொண்டால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
முக்கியமாக மலச்சிக்கலால் நீண்ட நாட்களாக அவதிப்படுபவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் 2 நன்கு கனிந்த வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும். இது தவிர தினசரி உணவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் மற்றும் அதிகளவு நீரை நாள் முழுவதும் பருக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

