Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
வாய் துர்நாற்றம் அதிகமா இருக்கா? அப்ப உங்க உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...
Bad Breath Reasons In Tamil: இன்று ஏராளமானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் வாய் துர்நாற்றம். இந்த வாய் துர்நாற்றமானது பல தருணங்களில் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையும் கூட. ஒருவருக்கு வாய் துர்நாற்றம் பல காரணங்களால் ஏற்படலாம்.
அதில் மோசமான வாய் சுகாதாரம், போதுமான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, மது, புகை போன்ற கெட்ட பழக்கங்கள், குறிப்பிட்ட சில உணவுகள் மற்றும் பானங்கள், டயட் மற்றும் விரதம் இருப்பது போன்றவை ஒருவருக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்த காரணங்களால் ஏற்படும் வாய் துர்நாற்றமானது வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் மாற்றங்களை செய்வதன் மூலம் சரிசெய்யலாம். ஆனால் என்ன மாற்றம் செய்தாலும் வாய் துர்நாற்றம் வீசுவது சரியாகவில்லை என்றால், உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
ஆம், நமது உடலில் உள்ள ஒருசில பிரச்சனைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். கீழே எந்தெந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் வாய் துர்நாற்றம் வீசும் என்பதைக் காணலாம்.
1. சுவாச தொற்றுகள் - ஒருவருக்கு சைனஸ் பிரச்சனை, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா போன்ற சுவாசக் குழாய் பாதையில் தொற்றுகள் இருந்தால், அவர்கள் சுவாசிக்கும் போது, அவர்களின் மூச்சுக்காற்று மட்டுமின்றி, வாயும் மிகுந்த துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
2. டான்சில் கற்கள் - டான்சில்லோலித்ஸ் என்று அழைக்கப்படும் டான்சில் கற்கள், டான்சில்ஸின் பிளவுகளில் உருவாகும் கால்சிஃபைட் படிகங்களாகும. இந்த கற்கள் பாக்டீரியாவை அடைத்து வாயில் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.
3. வாய் வறட்சி - ஒருவருக்கு வாய் வறட்சியானது மருந்துகளின் பக்கவிளைவுகள், உமிழ்நீர் சுரப்பி பிரச்சனைகள் அல்லது வாய்வழியாக சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். வாயில் போதுமான அளவு எச்சில் இல்லாமல் இருந்தால், அது வாயில் பாக்டீரியாக்களை பெருக்க அனுமதித்து, வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
4. நாவில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி - நாவின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் அதிகம் தேங்கும் போது, அதன் விளைவாக வாய் துர்நாற்றம் வீசும். அதுவும் நாவின் அடிப்பகுதியில் இந்த பாக்டீரியாக்கள் இருந்தால், அது இன்னும் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும்.
5. ஈறு நோய்கள் மற்றும் சொத்தை பற்கள் - ஒருவரது ஈறுகளில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் மற்றும் சொத்தைப் பற்கள் இருந்தால், அந்த பகுதியில் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்ச்சி பெற்று, அதன் விளைவாக வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும். இது தவிர, தொண்டை புண் அல்லது வாய்ப்புண் இருந்தாலும், வாய் கப்பு அடிக்கும்.
6. இரைப்பைக் குடல் பிரச்சனைகள் - ஆசிட் ரிப்ளக்ஸ், நாள்பட்ட இரைப்பை அழற்சி மற்றும் குடல் கோளாறுகள் போன்றவை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அதுவும் இந்த துர்நாற்றமானது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய் வரை சென்று கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
7. சர்க்கரை நோய் - கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் கொண்டவர்களின் வாய் ஒருவித புளித்த பழத்தின் நாற்றத்தை கொண்டிருக்கும். இதை அசிட்டோன் நாற்றம் என்றும் கூறுவர். இப்படியான துர்நாற்றம் வீசுவதற்கு கீட்டோன்கள் எனப்படும் பொருட்களின் முறிவு தான் காரணம்.
8. கல்லீரல் நோய் - சிரோசிஸ் அல்லது ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் நோய்களைக் கொண்டவர்களின் உடலில் தனித்துவமான துர்நாற்றத்தை ஏற்படும் பொருட்கள் தேங்க ஆரம்பித்து, அதன் விளைவாக அவர்கள் பேசும் போது கடுமையான வாய் துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் என்ன செய்தாலும் போகாது.
9. சிறுநீரக நோய் - சிறுநீரக நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களின் உடலில் கழிவுப் பொருட்கள் சிறுநீரகங்களால் சரியாக வடிகட்டப்படாமல், கழிவுகள் உடலில் கலந்து வாயில் இருந்து அழுகிய மீன் அல்லது அம்மோனியா போன்ற வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
10. வாய் புற்றுநோய் - ஒருவருக்கு வாயில் புற்றுநோய் இருந்தால், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்து. குறிப்பாக இந்த புற்றுநோய் தொண்டை அல்லது வாய்வழி குழியை பாதித்திருந்தால், இம்மாதிரியான வாய் துர்நாற்றத்தை சந்திக் நேரிடும்.
குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் அனைத்தும் ஒருவருக்கு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே நீங்கள் வாய் துர்நாற்றத்தைப் போக்கும் முயற்சிகளை மேற்கொண்டும் வாய் துர்நாற்றம் போகாமல் இருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications