Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நிறைய சுண்டல் சாப்பிட்டு வாயு பிரச்சனையை சந்திக்கிறீங்களா? உடனடி நிவாரணம் பெற இத ட்ரை பண்ணுங்க...
Ayudha Pooja 2023: இந்தியாவில் 9 நாட்கள் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி நாளில் கொண்டாடப்படுவது தான் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. இந்த நாளில் பொரிகடலை, சுண்டல் செய்து கடவுளுக்கு படைத்து, வீட்டில் உள்ள ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் புத்தகங்களைக் கொண்டு பூஜை செய்வோம். அதுவும் இந்த நாளில் நிறைய பேர் சுண்டலை சாப்பிட்டு வாயு மற்றும் அஜீரண கோளாறால் அதிகம் சிரமப்படுவார்கள்.
நீங்கள் இப்படி நிறைய சுண்டலை சாப்பிட்டு வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இதற்கு உடனடி தீர்வு காண மருந்தகங்களுக்கு செல்லாமல், நம் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். ஏனெனில் நம் வீட்டு சமையலறையில் அஜீரண கோளாறு மற்றும் வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்கும் சில பொருட்கள் உள்ளன.

சுண்டல் வாயு தொல்லையை ஏற்படுத்துமா?
செரிமான செயல்முறையின் போது இயற்கையாகவே வாயு உற்பத்தியாகும். ஆனால் சில சமயங்களில் ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவுகளை உட்கொள்ளும் போது, அந்த உணவுகளை ஜீரணிக்கும் போது அதிகப்படியான வாயு உற்பத்தி செய்யப்பட்டு, மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
அப்படி தான் சுண்டலை அதிகமாக உட்கொண்டால், அதை ஜீரணிப்பது கடினமாகி, வயிற்றில் ஏராளமான அளவில் வாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி உற்பத்தியாகும் வாயு தொல்லையில் இருந்து விடுவிக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவை குறித்து இப்போது காண்போம்.
சீரகம்
வாயு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணத்தை சீரகம் வழங்கும். அதற்கு சிறிது சீரகத்தை எடுத்து ஒரு வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுத்து, அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும், வடிகட்டி அந்நீரைக் குடியுங்கள். இதனால் வாயு தொல்லை மற்றும் அஜீரண கோளாறுகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.
ஓமம்
வாயு பிரச்சனை, அஜீரண கோளாறு, வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு ஓமம் உடனடி நிவாரணத்தை அளிக்கும். அதற்கு ஓம நீரைக் குடிக்கலாம். ஒருவேளை உங்கள் வீட்டில் ஓம நீர் இல்லாவிட்டால், 1/2 ஸ்பூன் ஓமத்தை கொதிக்கும் நீரில் போட்டு 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி குளிர வைத்து குடிக்கலாம்.
மோர்
ஆம், மோர் கூட அஜீரண கோளாறு மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். அதற்கு ஒரு டம்ளர் மோரில், 1/2 டீஸ்பூன் ஓம பொடி அல்லது பெருங்காயத் தூளை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அது இப்படி ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க வேண்டும். இப்படி குடித்து வர விரைவில் விடுபடலாம்.
பூண்டு
வாயு தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து உடனடி நிவாரணத்தைப் பெற விரும்பினால், ஒரு பல் பூண்டை எடுத்து, நெருப்பில் சுட்டு, அதை அப்படியே மென்று சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பாலைக் கூட குடிக்கலாம்.
தண்ணீர்
ஒருவரது உடலில் போதுமான அளவில் நீர் இல்லாவிட்டால், அதன் காரணமாகவும் ஒருவர் வாயு தொல்லையால் அவதிப்படக்கூடும். எனவே நிறைய தண்ணீரைக் குடியுங்கள். அதுவும் சுடுநீருடன் சிறிது பெருங்காயத் தூளைக் கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
பட்டை
வாயு தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க உதவும் மற்றொரு பொருள் பட்டை. அதற்கு 1/4 ஸ்பூன் பட்டை தூளை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications