Latest Updates
-
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்..
உங்க வயிறு இப்படி வீங்கி இருக்கா? அப்ப உங்க கல்லீரலில் இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு...
Ascites Symptoms In Tamil: நமது உடலில் கல்லீரல் பல முக்கியமான வேலைகளை செய்யும் பெரிய உறுப்பாகும். இந்த கல்லீரல் தான் பித்த நீரை உற்பத்தி செய்கிறது. கொழுப்புக்களை உடைக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் உள்ள பெரும்பாலான கெமிக்கல்களின் அளவை சீராக பராமரிக்கிறது. முக்கியமாக உண்ணும் உணவில் இருந்து நச்சுக்களை வடிகட்டும் ஒரு வடிகட்டியாக செயல்படுகிறது.
இவ்வளவு பல முக்கியமான வேலைகளை செய்வதால் தான் என்னவோ, கல்லீரல் சேதமடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. கல்லீரலில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதன் தாக்கம் ஒட்டுமொத்த உடலிலும் தெரியும். இப்படிப்பட்ட கல்லீரலில் பலவிதமான பிரச்சனைகள்/நோய்கள் வரலாம். அதில் ஒன்று தான் ஆஸ்கைட்டுகள் (Ascites) என்று அழைக்கப்படும் கல்லீரல் நீர்க்கோர்ப்பு. இதை அடிவயிற்று நீர்க்கோர்ப்பு என்றும் அழைப்பர்.

ஆஸ்கைட்டுகள் என்றால் என்ன?
ஆஸ்கைட்டுகள் என்பது கல்லீரலில் அதிகளவு நீர் தேங்குவதால் ஏற்படும் ஒரு கல்லீரல் நோயாகும். இந்நோயால் மார்பு மற்றும் நுரையீரல் பகுதிகளில் திரவங்கள் தேங்கி, சுவாசிப்பதிலும், விழுங்குவதிலும் சிரமத்தை உருவாக்கும்.
இந்த நோயின் ஆரம்ப கட்டத்தில் உடல் பலவீனம், சோர்வு போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த நோய் தீவிரமாகும் போது அறிகுறிகளும் தீவிரமாக இருக்கும். முக்கியமாக இந்நோயால் பாதிக்கப்பட்டால், உடலின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் தெரிய ஆரம்பிக்கும்.
ஆஸ்கைட்டு/கல்லீரல் நீர்க்கோர்ப்பின் முக்கிய அறிகுறிகள்
கல்லீரல் நீர்க்கோர்ப்பால் பாதிக்கப்பட்டவர்கள் பின்வரும் அறிகுறிகளை சந்திக்க நேரிடும். அவை:
* அடிவயிற்றுப் பகுதியில் வீக்கம்
* சுவாசிப்பதில் சிரமம்
* பசியின்மை
* உடல் சோர்வு
* சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இந்த பிரச்சனைக்கு சிகிச்சையளிக்காமல் இருந்தால், அது தீவிரமாகி மருத்துவமனையில் அட்மிட் செய்யும் அளவில் கொண்டு சென்றுவிடும். எனவே உங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எதனால் ஏற்படுகிறது?
ஹாப்கின்ஸ் மெடிக்கலின் படி, ஆஸ்கைட்ஸ் ஒரு தீவிரமான மற்றும் மிகவும் ஆபத்தான ஒரு கல்லீரல் நோயாகும். இது கல்லீரல் இழைநார் வளர்ச்சியினால் அடிக்கடி ஏற்படக்கூடும். கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகளவில் மது அருந்துவது தான். அதே சமயம் இதயம் தொடர்பான பிரச்சனைகள், சர்க்கரை நோய், தீவிரமான புரோட்டீன் இழப்பு மற்றும் குறிப்பிட்ட நோய்த்தொற்றுகளும் இந்த ஆஸ்கைட்ஸை ஏற்படுத்தலாம்.
மேலும் கல்லீரல் இழைநார் அழற்சியைத் தவிர, ஹெபடைடிஸ், கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நரம்புகளில் இரத்த உறைவு போன்றவைகளும் ஆஸ்கைட்ஸை ஏற்படுத்தக்கூடும். அடிவயிற்றுப் பகுதியில் திரவம் தேங்கும் போது, அது அசௌகரியம், வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், சிகிச்சையளிக்காமல் இருந்தால் உயிரையே இழக்க நேரிடும். எனவே ஆஸ்கைட்ஸ் பிரச்சனையின் அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எச்சரிக்கை அறிகுறிகள்
ஆஸ்கைட்ஸின் மிகவும் பொதுவான மற்றும் முக்கியமான அறிகுறி அடிவயிற்றுப் பகுதி மட்டும் வீங்கி காணப்படுவது. உங்களின் அடிவயிற்றுப் பகுதி காரணமின்றி பெருத்துக் கொண்டே போனாலோ அல்லது டயட்டுகளை மேற்கொண்டும் பானை போன்ற வயிற்றுடன் உடல் எடை அதிகரித்தாலோ, உங்களுக்கு ஆஸ்கைட்ஸ் இருக்க வாய்ப்புள்ளது.
கூடுதலாக, ஆஸ்கைட்ஸ் இருந்தால் பசிக்கவே பசிக்காது, வயிறு எப்போதும் நிரம்பிய உணர்வுடன் இருக்கும் அல்லது மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். சில நேரங்களில் வயிற்றுப் உப்புசம், வாந்தி, குமட்டல் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். ஆஸ்கைட்ஸ் பிரச்சனை முன்னேறும் போது, அதன் அறிகுறிகளும் முன்னேற்றமடைந்து, பாதங்களில் வீக்கத்தை ஏற்படுத்தி நடக்க முடியாமல் அல்லது நீண்ட நேரம் நிற்க முடியாமல் போகும்.
இன்னும் தீவிரமான நிலையில், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தினசரி வழக்கங்களைக் கூட செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடும். எனவே உங்கள் வயிற்றுப் பகுதியில் மிகுந்த அசௌகரியம் அல்லது நீங்கள் வழக்கத்தை விட வித்தியாசமான அறிகுறிகளை அனுபவித்தால், மருத்துவரை உடனே அணுக தவறாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications