Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
பிரசவத்திற்கு பின் 94 கிலோ வரை எடை அதிகரித்த சிம்ரன்.. எப்படி குறைத்து மீண்டும் சிக்கென்று ஆனார் தெரியுமா?
Actress Simran's Weight Loss Journey: தமிழ் சினிமாவில் இடுப்பழகி என்றால் இன்னும் பலரது நினைவிற்கு உடனே வருவது நடிகை சிம்ரன் தான். என்ன தான் 90-களில் பலரது கனவுக் கன்னியாக இருந்தாலும், இன்று வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகை சிம்ரன் திருமணத்திற்கு பின் நடிப்பிற்கு இடைவெளிவிட்டார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன் சிம்ரன் எப்படி சிக்கென்று இருந்தாரோ, திருமணத்திற்கு பின், அதுவும் குழந்தை பிறந்த பிறகு அவரது உடல் நலினம் மறையும் வகையில் உடல் எடை அதிகரித்துவிட்டார். அதுவும் நடிகை சிம்ரன் முதல் குழந்தை பிறக்கும் போது 30 கிலோ அதிகமான இவர், சீக்கிரம் பழைய உடலமைப்பைப் பெற்றுவிட்டார். ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்த பின் 35 கிலோ அதிகரித்துவிட்டார்.

ஆனால் இந்த எடையைக் குறைக்க அதிகம் போராடியதாகவும், இதற்காக பல ஆண்டுகள் கஷ்டப்பட்டதாகவும் சிம்ரன் இன்டர்வியூ ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் நடிகை சிம்ரன் பிரசவத்திற்கு பின் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்தும், தனக்கு உதவிய சில டிப்ஸ்களையும் கூறியுள்ளார். இப்போது அது என்னவென்பதைக் காண்போம்.
தனது எடை இழப்பு பயணம் குறித்து இன்டர்வியூ ஒன்றில் சிம்ரன் கூறியதாவது, பிரசவத்திற்கு பின் பழைய உடலமைப்பைப் பெற பல ஆண்டுகள் ஆனது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நான் கடுமையாக உழைத்தேன். திருமணத்திற்கு முன் டயட்டில் இருந்து உடல் எடையைப் பராமரித்து வந்தேன். ஆனால் பிரசவத்திற்கு பின், அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின், நான் 94 கிலோ வந்துவிட்டேன். இந்த 94 கிலோ எடையைக் குறைப்பது மிகவும் சவாலாக இருந்தது. இந்த எடையை படிப்படியாகவே குறைக்க முடிந்தது. முக்கியமாக இந்த எடையைக் குறைக்க தனது 6-7 ஆண்டுகள் ஆனது என்றும் சிம்ரன் கூறினார்.
நடிகை சிம்ரன் தனது உடல் எடையைக் குறைக்க யோகா பயிற்சியில் தினமும் ஈடுபட்டுள்ளார். மேலும் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், நிச்சயம் யோகாவை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதற்கு அடுத்ததாக உடலையும், மனதையும் சாந்தப்படுத்த, தினமும் 10 நிமிடங்கள் தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக கூறினார்.
உடல் எடையைக் குறைக்க உணவில் கட்டுப்பாடு அவசியம். சிம்ரனும் தனது உடல் எடையைக் குறைப்பதற்காக சாப்பிடுவதில் அதிக கட்டுப்பாட்டுடன் இருந்ததாகவும் கூறினார். மேலும் எடையைக் குறைக்க சரியான டயட்டைக் கடைப்பிடித்ததாகவும் கூறினார். அதுவும் காலையில் 9 மணிக்கு காலை உணவு, மதியம் 1 மணிக்கு மதிய உணவு மற்றும் இரவு 8.30 மணிக்குள் டின்னரை முடித்துவிடுவதாகவும் கூறினார். அதன் பின் எந்த ஒரு நொறுக்குத்தீனியையும் சாப்பிடமாட்டேன் என்றும் கூறினார்.
உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி அவசியம். சிம்ரனும் தனது அதிகரித்த எடையைக் குறைத்து, உடலை சிக்கென்று மாற்ற தினமும் தவறாமல் ஜிம் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அதுவும் தினமும் 1-2 மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வாராம். இவரது விருப்பமான உடற்பயிற்சி என்றால் ட்ரெட்மில்லில் வாக்கிங் செய்வது, வெயிட் லிஃப்டிங் செய்வது போன்றவை தானாம்.
முக்கியமாக சிம்ரன் அவர்கள் 49 வயதிலும் தனது எடையையும், இடையையும் சரியாக பராமரிக்க ஒரு உடற்பயிற்சி முக்கியமானது என்று கூறினார். அது தான் ட்விட்ஸ்ட் உடற்பயிற்சி. இதை நாள் ஒன்றுக்கு 150 முறை தவறாமல் செய்வாராம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், இடை எப்போதும் அழகான வடிவில் இருக்கும் என்று சிம்ரன் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











