Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நகைச்சுவை நடிகர் மனோபாலாவின் திடீர் மரணத்திற்கு இந்த பிரச்சனை தான் காரணமாம்..
Actor-director Manobala Passes Away: மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகரும், இயக்குநருமான மனோபாலா இன்று மதியம் தனது வீட்டில் திடீரென்று காலமானார். 69 வயதான மனோபாலா அவர்கள் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மறக்க முடியாத பல நகைச்சுகை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு ஏற்பட்டுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வு எடுத்து வந்தார். மேலும் இவர் கல்லீரல் தொடர்பான பிரச்சனையால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்து வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென்று உடல்நல குறைவினால் மரணமடைந்துள்ளார். நடிகர் மனோபாலாவின் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கல்லீரல் பிரச்சனையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்லீரல் பிரச்சனையை ஒருவர் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், கல்லீரல் செயலிழக்க ஆரம்பித்து, உயிரையே இழக்க நேரிடும். இப்போது கல்லீரல் பிரச்சனையின் சில ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம். உங்களுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
* திடீரென்று உடல்நிலை சரியில்லாதது போன்ற உணர்வு ஏற்படுகிறதா? எப்போது ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருந்து, கல்லீரலால் சரியாக செயல்பட்டு இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்ட முடியாமல் போகிறதோ, அப்போது தான் இம்மாதிரியான உணர்வு ஏற்படும். அதுவும் உடல் சோர்வு, தலைவலி மற்றும் சரும பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
* சருமத்தின் நிறம் மற்றும் கண்களின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருந்தால், கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
* நீங்கள் அடிக்கடி வாயு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? எப்போது கல்லீரலால் உணவுகளை உடைத்தெறியத் தேவையான செரிமான அமிலத்தை சுரக்க முடியவில்லையோ, அப்போது வயிறு உப்புசம், அடிக்கடி வாயு வெளியேற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் திடீரென்று ஒருவித குழப்பமான மற்றும் மந்தமான மனநிலையில் உள்ளீர்களா? கல்லீரலால் சரியாக செயல்பட முடியாமல் போகும் போது, நச்சுக்கள் உடலில் தேங்கி, ஒருவித மந்தமான மற்றும் குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும்.
* உங்கள் கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா? கல்லீரல் பலவீனமாகவோ அல்லது பிரச்சனையைக் கொண்டிருந்தாலோ, உடலில் நீர் தேங்க ஆரம்பித்து, கால்களில் வீக்கத்தை சந்திக்க நேரிடும்.
* நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது, அந்த சிறுநீரானது வழக்கத்தை விட அடர்நிறத்தில் காணப்பட்டால் மற்றும் மலம் வெள்ளை நிறத்தில் இருந்தால், கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.
* கல்லீரல் பிரச்சனையை கொண்டிருப்பவர்களுக்கு பசியே ஏற்படாது மற்றும் எவ்வித முயற்சியும் இல்லாமல் உடல் எடை சட்டென்று குறைய ஆரம்பிக்கும். இதைக் கொண்டும் கல்லீரல் பிரச்சனை இருப்பதை அறியலாம்.
* முக்கியமாக நன்கு குண்டாக அல்லது சதைப்பற்றுடன் இருந்த நபர், திடீரென்று தசைகள் சுருங்கி, பலவீனமானவராக தென்பட்டால், அவருக்கும் கல்லீரல் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் ஒருவரது கல்லீரலில் பிரச்சனை இருந்தால் தென்படும் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகளை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து, சிகிச்சைகளை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications