Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
உங்க கைகள், விரல்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப அது மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி.. உஷார்..
Heart attack Symptoms In Tamil: சமீப காலமாக உலகில் மாரடைப்பால் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். ஒருவருக்கு மாரடைப்பு என்பது ஒரே நாளில் வந்துவிடாது. சொல்லப்போனால் இந்த மாரடைப்பு ஒருவருக்கு வரப்போகிறது என்றால் நமது உடல் அதை நமக்கு உணர்த்தும் வகையில் முன்கூட்டியே ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளானது வழக்கமாக சந்திக்கும் ஒரு சாதாரண உடல் நல பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். இதனால் நிறைய பேர் அந்த அறிகுறிகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர்.
இப்படி மாரடைப்பு போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஒருவருக்கு வருவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களுடன் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான். இது தவிர சர்க்கரை நோய், உடல் பருமன், உயர் அழுத்தம், உயர் இரத்த கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளை கொண்டிருந்தாலும், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

பொதுவாக மாரடைப்பின் அறிகுறிகள் என்றால் நெஞ்சு வலியாக மட்டுமே அனைவருக்கும் தெரியும். ஆனால் அதுமட்டுமின்றி, ஒருவரது கைகள், கால்கள் மற்றும் விரல்களிலும் மாரடைப்பின் அறிகுறிகள் தெரியும். கீழே அந்த எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களிடம் இந்த அறிகுறிகள் தொடர்ந்து அதிகமாக தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
1. விரல்கள் அல்லது கால் விரல்களில் வலிமிக்க கட்டிகள்
உங்கள் கால் விரல்கள் அல்லது கை விரல்களில் வலிமிக்க கட்டிகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் உங்களின் இதயம் அல்லது இரத்த நாளங்களைப் பாதிக்கும் எண்டோகார்டிடிஸ் எனப்படும் மருத்துவ நிலை இருக்கலாம். அதுவும் இப்படியான கட்டிகள் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்கள் வரை இருந்து பின் மறையலாம். இருந்தாலும், உடனே மருத்துவரை அணுகுங்கள். விரல்களில் வரக்கூடிய வலிமிக்க கட்டிகள் பாக்டீரியாக்களால் வரக்கூடியவை. இவற்றை ஆன்டிபயாடிக்ஸ் கொண்டு சரிசெய்யலாம்.
2. உதடு வெடிப்புகள்
குழந்தைக்கு கடுமையான சரும அரிப்பு, காய்ச்சல் அல்லது உதடு வறண்டு போய் இரத்தக்கசிவு ஏற்பட்டால், அது கவாசாகி நோயால் இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் இந்த கவாசாகி நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. கவாசாகி நோய் சிகிச்சை இல்லாமல் 12 நாட்களுக்குள் தானாகவே போய்விடும் என்றாலும், அது இதய நோய் போன்ற கடுமையான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
3. வளைந்த நகங்கள்
ஒருவரது விரல் நகங்கள் முன்பக்கமாக வளைந்து, விரல்களின் முனைப்பகுதி வீங்கி காணப்பட்டால், இதய தொற்று, இதய நோய் அல்லது நுரையீரல் பிரச்சனைகள் போன்றவை இருக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் கை அல்லது கால் விரல் நகங்கள் இப்படி காணப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. சருமத்தில் மெழுகு போன்ற வளர்ச்சி
உங்களின் சருமத்தில் மஞ்சள் நிற மெழுகு போன்று ஏதேனும் வளர்ச்சியை காண்கிறீர்களா? குறிப்பாக கண்களைச் சுற்றி இப்படியான வளர்ச்சியைக் கண்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகளவில் இருக்கிறது என்பதன் அறிகுறி. சில சமயங்களில் இப்படியான மெழுகு போன்ற வளர்ச்சி உள்ளங்கைகளில் உள்ள ரேகைகள் அல்லது கால்களின் பின்புறத்தில் காணப்படலாம். ஆகவே உங்களின் சருமத்தில் இப்படியான வித்தியாசமான வளர்ச்சியைக் கண்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.
5. கால் வீக்கம்
கால்கள் மற்றும் பாதங்களில் திடீரென்று வீக்கத்தை சந்திக்கிறீர்களா? அதுவும் இப்படியான வீக்கத்தை அடிக்கடி சந்திக்கிறீர்களா? அப்படியானால் இதயம் சரியாக செயல்படவில்லை என்பதன் எச்சரிக்கை அறிகுறியாகும். இதயம் எப்போது சரியாக செயல்படவில்லையோ, அப்போது கால்கள் மற்றும் கீழ் கால்களில் திரவம் குவிந்து வீக்கம் ஏற்படலாம். சில சமயங்களில் இது மேல் கால்கள் மற்றும் இடுப்பு வரை கூட பரவக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications