Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
எச்சரிக்கை! இந்த 3 காய்கறிகளை முளைக்கட்டினா சாப்பிடாதீங்க.. இல்ல ஆபத்தாயிடும்.. கூறும் ஆரோக்கிய நிபுணர்!
Harmful Sprouted Vegetables: பொதுவாக முளைக்கட்டிய உணவுகளை ஒரு ஆரோக்கியமான மற்றும் சக்திவாய்ந்த உணவுப் பொருட்களாக நினைப்போம். அதுவும் இந்த வகை உணவுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நொதிகள் போன்றவை அதிகம் நிறைந்திருக்கும்.
இந்த வகை உணவுகள் செரிமானத்திற்கு உதவும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் நொதிகள் நிறைந்தவையாக, கலோரிகள் குறைவாக மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்தவையாக இருக்கும். இந்த முளைக்கட்டிய உணவுகளை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவும்.

ஆனால் இப்படி முளைக்கட்டிய அனைத்து உணவுகளுமே பாதுகாப்பானதா என்றால், நிச்சயம் இல்லை. அதுவும் சில வகையான காய்கறிகளை முளைக்கட்ட வைத்து உண்பது மிகவும் ஆபத்தானது என்பது தெரியுமா? இதுக்குறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஆரோக்கியம் மற்றும் உடல்நல நிபுணர் டிம்பிள் ஜங்டா கூறியுள்ளார். இந்த வீடியோவில் முளைக்கட்டிய எந்த 3 காய்கறிகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்தும், அது ஏன் என்பது குறித்தும் கூறியுள்ளார்.
1. வெங்காயம்
சில சமயங்களில் வீட்டில் அதிகமாக வாங்கி வைக்கும் வெங்காயம் முளைக்கட்ட தொடங்கியிருப்பதைக் காணலாம். முளைக்கட்டிய வெங்காயமானது அதிகளவு ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக N-புரோபில் டைசல்பைடை உற்பத்தி செய்யும். இது இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தி ஹீமோலிடிக் இரத்த சோகையை ஏற்படுத்தும். மேலும் இப்படிப்பட்ட வெங்காயத்தை உட்கொண்டால், அது குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். எனவே இப்படி முளைத்த வெங்காயத்தை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
2. பூண்டு
அடுத்ததாக முளைக்கட்டிய பூண்டுகளை சாப்பிடக்கூடாது. வெங்காயத்தைப் போன்றே பூண்டிலும் அதிகளவு சல்பர் உள்ளன. இது ஆல்கலாய்டுகளை உற்பத்தி செய்கிறது. இப்படி முளைத்த பூண்டு பற்களை உட்கொண்டால், அது இரைப்பை குடல் தொந்தரவு மற்றும் இரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதத்தை ஏற்படுத்தும். எனவே நல்ல பூண்டு என்றால், அது முளைக்காதது தான். எனவே முளைத்த பூண்டு பற்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. உருளைக்கிழங்கு
வீட்டில் உள்ள உருளைக்கிழங்கு வாங்கி வைத்து, நீண்ட நாட்களாகிவிட்டால், அவை முளைத்திருப்பதைக் காணலாம். அப்படி முளைத்த உருளைக்கிழங்கில் உள்ள முளைத்ததை நிறைய பேர் தூக்கி எறிந்துவிட்டு சமைப்பார்கள். ஆனால் முளைத்த உருளைக்கிழங்கு அவ்வளவு நல்லதல்ல. இத்தகைய உருளைக்கிழங்கில் கிளைகோல்கலாய்டுகள் உள்ளன. இப்படி முளைத்த உருளைக்கிழங்கை உட்கொண்டால், அது சோலனைன் பாய்சனுக்கு வழிவகுத்து, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உண்டாக்கும் என உடல்நல நிபுணர் டிம்பிள் கூறியுள்ளார்.
எனவே நண்பர்களே! இதுவரை உங்கள் வீட்டில் முளைக்கட்டிய வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கை பயன்படுத்தி வந்தால், அவற்றை இனிமேல் சமையலில் பயன்படுத்தாதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications