Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
உங்கள் தொப்பையை ஆடைக்குள் மறைக்க கஷ்டமா இருக்கா? இந்த மாதிரி டிரெஸ் போடுங்க... தொப்பையே தெரியாது!
வயிற்று தொப்பையைப் பற்றி கவலைப்படாதவர்களே யாரும் இருக்க முடியாது. ஒல்லியான வயிறு அழகான தோற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும். தொப்பை இருப்பவர்கள் அதனை மறைப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எவ்வவுதான் முயற்சித்தாலும் தொப்பையை ஆடைக்குள் மறைப்பது என்பது மிகவும் கடினமானது.
உங்கள் வயிறு மற்றும் பக்கவாட்டு கொழுப்பை உங்கள் ஆடைகளுக்கு அடியில் மறைக்க உதவும் சில குறிப்புகள் உள்ளது. அதேசமயம் அழகாக இருக்க ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

இறுக்கமான ஆடைகளுக்குப் பதில் லூசான ஆடைகளை அணிய வேண்டும்
இறுக்கமான ஆடைகள் எப்பொழுதும் உங்கள் உடலைமைப்பை வெளிப்படையாக வெளிச்சம் போட்டு காட்டும். அதனால் இறுக்கமான ஆடைகள் உங்கள் தொப்பையை அப்பட்டமாக அனைவருக்கும் தெரியப்படுத்தும். எனவே முக்கிய தருணங்களுக்கு வெளியே செல்லும் போது இறுக்கமான ஆடைகளுக்குப் பதிலாக தளர்வான ஆடைகளை அணியலாம்.
சிங்கிள் நிற ஆடைகள்
தொப்பையை மறைப்பதற்கு சிங்கிள் நிற ஆடைகள் சிறந்த தேர்வாகும். அடர் நிற ஆடைகள் உண்மையில் உங்களை மிகவும் பொருத்தமாக இருக்கலாம் ஆனால் அவை உங்கள் தொப்பையை வெளிப்படுத்தலாம். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணிய விரும்பினால் பழுப்பு, கிரீம், பிஸ்தா மற்றும் வெளிர்-இளஞ்சிவப்பு நிறங்களை அணியலாம்.
செங்குத்துக் வடிவ ஆடைகள்
வெர்டிகல் ஆபரணங்கள், பேட்டர்ன் மற்றும் கோடுகள் உங்களை உயரமாகவும், தொப்பை இல்லாதது போலவும் தோற்றமளிக்க வைக்கும். ஆனால் நீங்கள் கோடுகளின் அகலத்தையும் அவற்றின் எண்ணிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டும். அகலமான கோடுகள் உங்களை பார்வைக்கு பெரிதாக்கலாம், எனவே குறுகிய மற்றும் நிறைய கோடுகள் கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
ட்ரெப்சாய்டல் உடை
தொப்பையை மறைக்க ஒரு சிறந்த வழி, இறுக்கமான புள்ளிகள் இல்லாமல் ட்ரெப்சாய்டல் உடையை அணிவது. இடுப்பிற்கு மேலே ஆடைகளை அணிவதும் சிறந்த நிவாரணமாக இருக்கும். இந்த வழியில் நீங்கள் அடர் நிற ஆடைகளைக் கூட அணியலாம்.
ஸ்கர்ட் அணியலாம்
தொப்பையை மறைக்க விரும்பும் பெண்கள் ஜீன்ஸ் மற்றும் பேண்ட் அணிவற்குப் பதிலாக ஸ்கர்ட் மற்றும் ஹை ஹீல்ஸ் அணிவது அவர்களின் தொப்பையை மறைக்க உதவும். நீங்கள் அணியும் ஸ்கர்ட் இருண்ட நிறத்தில், தடிமனான துணியாக இருந்தால் கூடுதல் சிறப்பு.
சட்டையை இன் பண்ணக்கூடாது
இது நன்றாக பலனளிக்கக் கூடிய ஒரு தந்திரமாகும். தொப்பையை மறைக்க விரும்பும் ஆண்கள் எப்போதும் சட்டையை இன் பண்ணக்கூடாது. சட்டையை இன் பண்ணுவது தொப்பையை அப்பட்டமாக அனைவருக்கும் காட்டும்.



Click it and Unblock the Notifications
