Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
அழகான வெள்ளை நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
Budget 2024 Nirmala Sitharaman Saree: இன்று இந்தியர்கள் ஒவ்வொருவருமே மிகவும் ஆவலாக இருப்போம். ஏனெனில் இன்று 2024-2025 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட் இது என்பதால் மக்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 01 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், அனைவரும் எதற்கு எவ்வளவு வரி என்பதை தெரிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் இருப்போம்.

ஒவ்வொரு ஆண்டும் யூனியன் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, மக்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தோற்றத்தையும் கவனிப்பார்கள். ஏனெனில் இவர் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொருவிதமான கைத்தறி புடவைகளை அணிந்து வருவார். இதுவரை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது புடவையையே அணிந்து வந்துள்ளார். முக்கியமாக அவர் அணிந்து வரும் புடவையின் நிறம் ஒவ்வொரு அர்த்தங்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது எந்த நிற புடவையை அணிந்து வரவுள்ளார் என்பதை அறிந்து கொள்ள சிலர் ஆவலாக இருப்பார்கள்.
இன்று மத்திய யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள நார்த் ப்ளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்திற்கு வெளியே பட்ஜெட் டேப்லெட் மற்றும் தனது குழுவுடன் மீடியாக்களுக்க போஸ் கொடுத்துள்ளார்.
அப்போது நிர்மலா சீதாராமன் ஊதா நிற பார்டரில் கோல்டன் ஜரிகை கொண்ட வெள்ளை நிற புடவையை அணிந்திருந்தார். இதில் வெள்ளை நிறமானது அமைதியின் அடையாளமாகவும், ஊதா நிறம் ஸ்திரத்தன்மை மற்றும் தீவிரத்தன்மையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
Image Courtesy: ANI



Click it and Unblock the Notifications
