நிகழ்ச்சி ஒன்றிற்கு கருப்பு நிற குட்டைக் கவுனில் க்யூட்டாக வந்த அஞ்சலி!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் அஞ்சலி. இவர் சர்ச்சைகளுக்கு உள்ளானதால், சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இக்காலத்தில் குண்டாகிவிட்டார். பின் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க, தனது எடையைக் குறைத்து சிக்கென்று ஆனார். சமீபத்தில் இவரது படங்களின் இசை வெளியீடு, வெற்றி கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவற்றில் கலந்து கொள்ளும் போது நடிகை அஞ்சலி பல அழகிய உடைகளை அணிந்து வந்திருந்தார். ஒவ்வொரு உடையும் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. அஞ்சலிக்கு அனைத்து வகையான உடைகளுமே பொருத்தமாக இருக்கும்.

இங்கு நடிகை அஞ்சலி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும், அணிந்து வந்த உடைகளும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

இது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, ஒற்றைத் தோள்பட்டை கொண்ட சிவப்பு நிற உடையை அணிந்து வந்த போது எடுத்தது. இந்த உடைக்கு இவர் பொருத்தமாக மேக்கப் போட்டு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அஞ்சலி இந்த உடையில் மிகவும் அற்புதமாக காணப்பட்டார் எனலாம்.

நீல நிற லெஹெங்கா

நீல நிற லெஹெங்கா

இது திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும், அஞ்சலி கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட நீல நிற லெஹெங்கா அணிந்து க்யூட்டாக வந்திருந்த போது எடுத்த போட்டோ. இந்த உடைக்கு பொருத்தமாக தங்கம் மற்றும் வெள்ளை தங்கம் கலந்த நகைகளை அணிந்து வந்திருந்தது அவரை சிறப்பாக காட்டியது.

மெரூன் நிற லெஹெங்கா

மெரூன் நிற லெஹெங்கா

இது இறைவி திரைப்பட பிரஸ் மீட்டிற்கு மெரூன் மற்றும் க்ரீம் நிறங்கள் கலந்த நீளமான லெஹெங்கா சூட் அணிந்து வந்திருந்த போது எடுத்தது. இந்த உடைக்கு அஞ்சலி சைடு ஸ்வெட் எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்து, பொருத்தமான மேக்கப் போட்டு வந்திருந்தது, அவரது அழகை மேம்படுத்திக் காட்டியது எனலாம்.

நீல நிற அனார்கலி

நீல நிற அனார்கலி

இது தெலுங்கு படமான சித்ரங்கதா திரைப்படம் வெளிவரும் முன் நடந்த நிகழ்ச்சியில் அஞ்சலி கண்ணாடி பதிக்கப்பட்ட நீல நிற எம்பிராய்டரி அனார்கலி சூட் அணிந்து வந்திருந்த போது எடுத்தது. இந்த உடைக்கு இவர் கற்கள் பதிக்கப்பட்ட காதணிகள் அணிந்து, சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்தது, அவரை சிறப்பாக காட்டியது.

மஞ்சள் நிற அனார்கலி

மஞ்சள் நிற அனார்கலி

இது சித்ரங்கதா திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது, அஞ்சலி அணிந்து வந்த அடர் மஞ்சள் நிற காட்டன் அனார்கலி சூட். இந்த உடைக்கு தங்க காதணிகள் மற்றும் பொருத்தமான ஹேர் ஸ்டைல் மேற்கொண்டு வந்தது, அவரை க்யூட்டாக காட்டியது.

கருப்பு நிற மேக்ஸி உடை

கருப்பு நிற மேக்ஸி உடை

இது சித்ரங்கதா வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, அஞ்சலி அணிந்து வந்த கருப்பு நிற மேக்ஸி உடை. இந்த அழகிய மேக்ஸி உடைக்கு சில்வர் நகைகளை அணிந்து, கர்ல்ஸ் செய்து வந்தது, அஞ்சலியை சூப்பராக காட்டியது.

பிங்க் நிற கவுன்

பிங்க் நிற கவுன்

இது சமீபத்தில் வெளிவந்த பலூன் திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது அஞ்சலி அணிந்து வந்த பிங்க் நிற கேப் கவுன். இந்த உடைக்கும் அஞ்சலி எப்போதும் போன்று சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து வந்திருந்தார். அதோடு, காதுகளுக்கு சந்த் பாலிஸ் அணிந்து வந்திருந்தார்.

கருப்பு நிற கவுன்

கருப்பு நிற கவுன்

இது பலூன் பிரஸ் மீட்டிற்கு கருப்பு நிற குட்டையான ஸ்லீவ்லெஸ் கவுன் அணிந்து அஞ்சலி வந்த போது எடுத்தது. இந்த கருப்பு நிற வெல்வெட் கவுனில் அஞ்சலி அழகிய பொம்மைப் போன்று காணப்பட்டார். இந்த உடைக்கும் அஞ்சலி எப்போதும் போன்று சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு, ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலை பின்பற்றி வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Latest Looks Of Actress Anjali

Here are some best latest looks of actress anjali. Take a look...
Story first published: Saturday, January 6, 2018, 17:40 [IST]